Home ஜல்சா அந்த விஷயத்துக்கு லேட்டாக வந்தால் பிடிக்காது: நடிகை சன்னி லியோன்..!!

அந்த விஷயத்துக்கு லேட்டாக வந்தால் பிடிக்காது: நடிகை சன்னி லியோன்..!!

29

சென்னை: ஷூட்டிங்குக்கு லேட்டாக வருபவர்களைப் பார்த்தால் எனக்குப் பிடிக்காது என்று கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறினார்.

கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரை பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஹிந்திப் படங்களில் நடிக்க அழைத்து வந்தனர். தற்போது பாலிவுட் படங்களில் பாடல்களுக்கு ஆடுவது, முக்கிய கேரக்டர்களில் நடிப்பது என கலக்கி வருகிறார் சன்னி.

இதுகுறித்து சன்னி லியோன் கூறியதாவது…

எனது பிறந்தநாடு இந்தியா. ஆனால் நான் வளர்ந்தது கனடா. நடித்தது எல்லாம் முதலில் அங்குதான். எனக்கு ஹிந்திப் படங்கள் மிகவும் பிடிக்கும். ஹிந்திப் படங்களில் உள்ள பாடல்கள் எனக்கு மிகவும் விருப்பம்.

ஆனால் இந்தியாவில் ஷூட்டிங்குக்கு சில ஹீரோக்கள், ஹீரோயின்கள் லேட்டாக வருகின்றனர். இது எனக்குப் பிடிப்பதில்லை. நான் எப்போதும் முன்னதாகவே வந்துவிடுவேன். ஆனால் ஹீரோக்கள் வராததால் ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என வெயிட் செய்திருக்கிறேன்.

நான் இப்போது கூச்ச சுபாவம் உடையவள்தான். பார்ட்டிகளில் கூட ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பேன். ஆனால் தற்போது எனது மனநிலை மாறி வருகிறது. எல்லோரிடமும் சகஜமாக பேசிப் பழகி வருகிறேன் என்றார் அவர்.