Home ஆரோக்கியம் விந்து (Sperm) சில தகவல்கள்

விந்து (Sperm) சில தகவல்கள்

45

விந்துச் சுரப்பி ஆணுக்குரிய இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய பகுதி ஆகும். மனிதனிற்கு இரண்டு விந்துச் சுரப்பிகள் உண்டு. இவற்றை முதல்நிலை இனப்பெருக்க உறுப்புகள் என்று கூறலாம். இவை விரைபையுனுள் ஓர் சிறப்புத் திசுவால் நிறுத்தப்பட்டுள்ளன. விந்துச் செல்கள் வெப்பம் உணர் தன்மையுடையவை. இவற்றின் வளர்ச்சி உடல் வெப்பத்தில் பாதிப்படையலாம். எனவே இவையும் விந்து நாளத்திரளும் உடலுக்கு வெளியே விரைப்பையில்லுள்ளன . இங்கு வெப்பம் குறைவு. இடது விந்துச் சுரப்பி 1 செ. மீட்டர் இறங்கியிருக்கும். இச்சுரப்பி 4-5 செ.மீட்டர் நீளமும் , 2-5 செ.மீட்டர் அகலமும் உடையது. இதன் எடை 10.5 – கிராம் ஆகும். விந்துச் சுரப்பியின் வெளிப்புறத்தில் டியூநிக்க அல்பு ஜினியா எனும் வெண்மை நிற உரையுள்ளது. உட்புறமாகச் சுரப்பியினுள் பல முழுமையற்ற இடைசுவர்கள் உள்ளன. இச்சுவர்கள் விந்துச் சுரப்பியின் – சிறு கதுப்புகலாகப் பிரிக்கின்றன. இவற்றினுள் விந்தாக்க நுன்குலல்களும் இடைஈட்டுச் செல்கள் அல்லது லீடிக் செல்களும் உள்ளன. விந்துச் செல்கள் நுன்குலல்கலினுள் தோன்றும்

ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)