Home ஆரோக்கியம் உங்கள் தூக்கம் பற்றி அறியாத பத்து மருத்துவ தகவல்

உங்கள் தூக்கம் பற்றி அறியாத பத்து மருத்துவ தகவல்

165

பொது மருத்துவ குறிப்பு:இன்று நம்மில் பலர் தூக்கத்தினை தொலைத்து விட்டனர் என்று கூறலாம்.ஒரு மனிதன் கட்டாயமாக 8மணி நேரம் தூங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு நாளைக்கு 8மணி நேரம் தூங்குகின்றோம்..தற்பொழுது நாம் தூக்கத்தினை பற்றி தெரிந்து வைத்து இருக்கும் உண்மைகள் கடந்த 25 வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவையே …

உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.இங்கு நாம் இது வரை தெரிந்திராத தூங்குவதைப் பற்றி மிகவும் சுவாரஸ்யமான மற்றும் வியக்கத்தக்க உண்மைகளில் 10 ஐ தந்துள்ளோம்

தூக்கத்தைப் பற்றிய உண்மைகள்

1.மக்கள் காணும் கனவுகளில் 12% ஆனவை கருப்பு வெள்ளை நிறத்திலான கனவுகளே ஆகும்.அதுவும் வண்ண தொலைக்காட்சி அறிமுகப்படுத்தபடுவதற்கு முன் வெறும் 15% ஆன மக்களே வண்ணத்தில் கனவு கண்டனர்.வயது முதிந்தவர்களே ஒப்பீட்டு அளவில் இளையோரை விட அதிகமாக கருப்பு வெள்ளை கனவுகளை காண்கின்றனர்…

2.இதுவரை உலகில் தொடர்ச்சியாக உறங்காமல் நீண்ட நேரம் இருந்த சாதனை கார்ட்னெர் என்ற கலிஃபோர்னிய மாணவரால் செய்யப்பட்டது..இவர் 11 நாட்கள் உறங்காமல் இருந்ததே அதிக பட்ச சாதனையாக கருதப்படுகிறது..ஆனால் இவ்வாறு செய்வது நிச்சயமாக பரிந்துரைக்கப்படவில்லை..
எப்படி இருந்தும் இதன் பின்னர் கார்ட்னெர் தீவிர தூக்கமின்மை நோயால் அவதிப்பட்டார்

தூக்கமின்மை 3.மனிதர்கள் தமது வாழ்நாளில்மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் செலவிடுகிறார்கள்.இது மனிதனின் வயதை பொறுத்து மாறுபடுகிறது.ஆனால் சராசரியாக அது மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிறது.

4.மக்கள் தொகையில் 15 சதவிகிதம் வரையானவர்கள் தூக்கத்தில் நடக்கும் வியாதி உடையவர்கள் என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தூக்கத்தில் நடப்பவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப கூடாது என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை ஆகும்..

5.தூக்கத்தில் இருந்து நீங்கள் எழும்பிய முதல் 5நிமிடங்களில் உங்கள் கனவின் 50சதவிகிதம் மறந்துவிடும்.
அடுத்த 5நிமிடங்களில் 90சதவிகிதமான கனவுகள் மறந்து விடும்..இது எங்கள் மூளையை வெறுமனே விழித்துக்கொண்டிருக்கும்போதே மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதால் நாம் கனவு கண்டதைப் பற்றி மறந்துவிடுகிறோம்.பெரும்பாலான கனவுகள் ஒடுக்குமுறை எண்ணங்களை பற்றியே பிரதிபலிக்கின்றன.

6.தூக்கமின்மையால் வலியை சகித்துக்கொள்ளும் தன்மை மனிதர்களிடத்தில் குறைகிறது என ஒரு ஆய்வு சொல்கின்றது..

7..தூக்கமின்மை ஒரு மனிதனை பட்டினியை விட வேகமாக கொள்ளும் தன்மை உடையது..ஒரு உணவை விட தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது..

8.பொதுவாக ஒரு மனிதன் இரவு படுக்கைக்கு சென்று 10முதல் 15 நிமிடங்களுக்குள் உறங்கிவிடுகின்றார்கள் ..

9.ஒரு பூனை வாழ்க்கையின் மூன்றில் இரண்டு பங்கு தூக்கத்தில் செலவிடுகிறது
இது பெரும்பாலான பூனை உரிமையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம்..

10.அதிகமான பணம் சம்பாதிப்பவர்கள் ஆழ்ந்த நல்ல தூக்கத்தை பெறுவதாக ஒரு ஆய்வு கூறுகின்றது..