Home ஆரோக்கியம் அமர்ந்துகொண்டு கால் ஆட்டுவதால் ஏற்படும் விளைவுகள்

அமர்ந்துகொண்டு கால் ஆட்டுவதால் ஏற்படும் விளைவுகள்

137

பொது மருத்துவம்:சிலர் அமரும்போது காலாட்டிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி செய்யக் கூடாது நரம்புத் தளர்ச்சி வரும் என நிறைய பேர் சொல்லிக் காட்டிருப்பீர்கள். ஆனால் அது தவறில்லை என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது தெரியுமா?

காலாட்டிக் கொண்டிருப்பதால் ரத்தம் தடங்கலில்லாமல் செல்கின்றதாம். இதனால் இதய நோய்கள் வராது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ரத்தத்தை இதயத்திலிருந்து மற்ற உடல் பாகங்களுக்கும், மற்ற பாகங்களிலிருந்து இதயத்திற்கு அனுப்புவதிலும் தமனி பெரும் பங்கு வகிக்கின்றது. அதேபோல், ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதிலும், கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதிலும் முக்கிய பொறுப்பு தமனிக்கு உள்ளது.

இந்த தமனிகளில் பாதிப்பு ஏற்பட்டால், இதய நோய்கள் ஏற்படுகின்றன.

வெகு நேரம் அமர்ந்து கொண்டேயிருப்பது ரத்த ஓட்டத்தை குறைக்கும். கால்களை ஆட்டிகொண்டே இருப்பதால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தமனிகள் நன்றாக ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு காலை மட்டும் ஆட்டாமல் மாறி மாறி இரண்டு கால்களையும் ஆட்டுவதால் பயனளிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இது நடைப்பயிற்சிக்கோ, ஜாகிங்கோ ஒப்பாகாது. ஒரே இடத்தில் அமர நேர்கையில் அவ்வப்போது நடப்பது, நிற்பதும்தான் இதய நோய் பாதிப்புகளிலிருந்து விடுவிக்கும் என்று கொலம்பியாவின் மிசௌரி பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜௌம் படில்லா கூறுகிறார்.

இந்த ஆய்வில் ஆரோக்கியமான இளைஞர்கள் 11 பேரை ஈடுபடுத்தினர். அவர்களை 3 மணி நேரம் தொடர்ச்சியாக அமர வைத்தனர். பாதி பேருக்கு கால்களை ஆட்டச் சொல்லியும் , பாதங்களை மெதுவாக தட்ட சொல்லியும் கேட்டனர். மீதியிருக்கும் பாதி பேரை சும்மாவே அமரச் செய்தனர்.

பின்னர் இவ்விரு குழுவையும் ஆராய்ந்ததில் காலையாட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகவும், தமனிகள் சீராகவும் இருந்தன. காலை ஆட்டாமல் அமர்ந்த குழுவிற்கு ரத்த ஓட்டம் மிகக் குறைவாகவும், நாளங்கள் சுருங்கியும் காணப்பட்டது.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆரோக்கியமனதல்ல. அவ்வப்போது நடக்க வேண்டும். நடக்கும் வாய்ப்பில்லையென்றால் மாற்றுவழியாக காலாட்டிக் கொண்டிருப்பது நல்லது என படில்லா குறிப்பிட்டுள்ளார்.