Home ஆரோக்கியம் பொது மருத்துவம் சிறுநீர் நுரை போல் வருகிறதா? கலரில் வித்தியாசம் தெரிகிறதா? கேர்ஃபுல் ப்ளீஸ்…

சிறுநீர் நுரை போல் வருகிறதா? கலரில் வித்தியாசம் தெரிகிறதா? கேர்ஃபுல் ப்ளீஸ்…

69

captureமனித உடலில் நோய்கள் திடீரென வருவதெல்லாம் கிடையாது. உடலில் என்ன மாதிரியான நோய்கள் உருவாக ஆரம்பித்தாலும் அதற்கான அறிகுறிகளை நம்முடைய உடல் வெளிப்படுத்திவிடும்.

நம் உடலில் சிறியதாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை முதலில் நமக்குக் காட்டிக் கொடுப்பது சிறுநீரும் மலமும் தான்.

உடலின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டாலோ, அல்லது நாம் சரியான உணவை உட்கொள்ளாமல் போனாலோ, அடுத்த நாள் காலை எழுந்தவுடன் நீங்கள் வெளியிடும் சிறுநீரும் மலமும் உங்களுக்கு அதை சொல்லிவிடும்.

காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு ஆகியவை இருந்தால் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளிப்படும்.

மஞ்சள் காமாலை இருந்தால் சிறுநீரின் கலர் சாதாரணமாக இல்லாமல் சிவப்பு நிறத்தில் வெளிவரும்.

அதுபோன்று தான் சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும்போது நுரையோடு சேர்ந்து வரும். அதை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது சாதாரண விஷயமாக நினைத்துவிடக் கூடாது.

சிறுநீர் எதனால் நுரையோடு சேர்ந்து வெளிப்படுகிறது?

இப்படி நுரையோடு வெளிப்படும் சிறுநீரை புரோட்டினூரியா என்று கூறுவார்கள். சிறுநீரில் புரதம் அதிகமாகக் கலந்து விட்டால் இவ்வாறு உண்டாகும்.

ஆண்களுக்கு சில நேரங்களில் சிறுநீர் வடியும் குழாயில் விந்து தங்கியிருந்தாலும் சிறுநீர் நுரைபோல் வெளியேறும்.

சிறுநீரில் புரதம் அதிகரிக்கும் போது, மனஅழுத்தம், கடுமையான சளி, உடலில் வெப்பம் அதிகரித்தல் ஆகியவை உண்டாகும்.

அதோடு, சிறுநீர் பாதையில் தொற்று, உணவில் கெமிக்கல் கலந்திருத்தல், ரத்த அழுத்தம், விஷப்பூச்சிகள் கடித்தல், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் ஆகியவற்றுக்கான அறிகுறியாகவும் சிறுநீர் நுரையோடு வெளிப்படும்.

அதனால் சிறுநீர் நுரையோடு வெளிப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தக்க ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.