Home ஜல்சா sex Stop அந்த நேரத்தில் ஆணுறை தேடி ஓட வேண்டியதில்லை.. வந்துவிட்டது கருத்தடை தடுப்பூசி

sex Stop அந்த நேரத்தில் ஆணுறை தேடி ஓட வேண்டியதில்லை.. வந்துவிட்டது கருத்தடை தடுப்பூசி

28

மும்பை: மகாராஷ்டிராவில் பெண்களின் கருத்தடைக்கு ஊசிகளை அறிமுகம் செய்துள்ளது அரசு.
உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11ம் தேதி இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. edroxyprogesterone acetate (MPA) எனப்படும், ஊசியை 3 மாதங்களுக்கு ஒருமுறை பெண்கள் செலுத்திக்கொண்டால், அவர்களுக்கு கரு உருவாகாது. இதனால் பக்க விளைவுகள் இல்லை என்கிறது அரசு.

கருக்கலைப்பு மற்றும் விரும்பாத பேறுகாலங்களின்போது ஏற்படும் தாய்மார்களின் மரணத்தை குறைக்க இந்த திட்டம் உதவும் என்கிறது அரசு. நாட்டில் முதல் முறையாக மகாராஷ்டிராவில் இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த ஊசி இலவசம் என்பது சிறப்பு.
தற்போது பெண்களுக்கு காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களும், ஆண்களுக்கு ஆணுறை போன்ற சாதனங்களும் உள்ளன. தம்பதிகள் அவசரப்படும் சூழலில் இதனால் பலன் ஏற்படுவதில்லை.
எனவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் கருத்தடை முறை உள்ளது. இது பெண்களை மேலும் சோர்வாக்கிவிடுகிறது. எனவே, கருத்தடை ஊசி போட்டுக்கொள்வதன் மூலம், தம்பதிகள் உறவு கொள்வதற்கு தடைகள் தகர்க்கப்பட்டுள்ளது.