Home ஜல்சா கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பதை அறிந்தால் சீனப்பெண்களின் அடுத்த நடவடிக்கை இதுதான்…??

கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பதை அறிந்தால் சீனப்பெண்களின் அடுத்த நடவடிக்கை இதுதான்…??

33

chines-girls-628x356 (1)சீனப் பெண்கள் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பதை அறிந்தால், ‘Mistress dispellers’ என்ற நிறுவனத்தை நாடுகிறார்கள்.
கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணை விடுவித்து, மனைவிகளுக்கு உதவுவதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கம். “மேற்குலக நாடுகளைப் போல சீனப் பெண்கள் தங்கள் கணவரிடம் சண்டை போடுவதில்லை. விவாகரத்தும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. கிடைத்தாலும் அதற்குப் பிறகான வாழ்க்கை மிகுந்த பொருளாதார சிக்கலைத் தந்துவிடுகிறது. குழந்தைகளை தனியாக வளர்ப்பதும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் சீனப் பெண்கள் இந்த நிறுவனத்தை நாடுகிறார்கள்.
இருப்பினும் சீனாவில் பலரும் இந்த சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த நிறுவனத்தை ஆதரிக்கிறார்கள். இந்தநிலையில் இந்நிறுவனத்தை ஐரோப்பா, வட அமெரிக்காவிலும் நிறுவனத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார் நிறுவனர் காங் நா.
மேலும் அவர் கூறியதாவது;

நாங்கள் தகுந்த நேரம் பார்த்து, சம்பந்தப்பட்ட பெண்களைத் தனியாகச் சந்திப்போம். பல சந்திப்புகளுக்குப் பிறகு, அவர்கள் விரும்பும் பணம், கார், போன்றவற்றை அளித்து, எங்கள் வாடிக்கையாளரின் கணவரை விட்டு விலகிவிடும்படி கேட்டுக்கொள்வோம். சிலருக்கு புதிய நட்பையும் உருவாக்கிக் கொடுப்போம். எங்களைப் பொறுத்தவரை மனைவிகள்தான் முக்கியம். ஆனாலும் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே மிகவும் கவனமாக இந்த வேலைகளை செய்கிறோம். இதன் மூலம் மனைவிகளும் காதலிகளும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுகிறார்கள். கணவர்களிடமும் சூழலை விளக்கி, இனி காதலிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்ற உறுதிமொழியையும் வாங்கி விடுகிறோம். இதற்காக 30 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறோம்” என்கிறார்.