Home சூடான செய்திகள் கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் இரகசியங்கள் தெரியுமா?

கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் இரகசியங்கள் தெரியுமா?

438

secrete of Husband and wife:இரகசியங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க நினைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது வெளிப்படும் போது உருவாகும் தாக்கத்தை எதிர்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

இரகசியங்கள் என்றதும் அது தகாத உறவாகவோ, போதை பழக்கங்களோ என்று மட்டும் நினைத்துக் கொள்ள வேண்டாம். கணவன், மனைவி தங்கள் துணைக்கு தெரியாமல் செய்யும் செலவுகளில் இருந்து, பொய் கூறிவிட்டு நண்பர்களுடன் வெளி ஊர்சுற்றி வருவதில் இருந்து சில்லித்தனமான இரகசியங்களில் இருந்து உங்களையே சின்னாப்பின்னமாக்கும் வரையில் பல வகையான, பல வித தாக்கங்கள் உண்டாக்கும் இரகசியங்கள் பலவன இருக்கின்றன.

அப்படி தங்கள் துணையிடம் தாங்கள் மறைத்த இரகசியங்கள் அல்லது சொல்ல பயப்படும் விஷயங்கள் குறித்து ரியல் லைப் தம்பதியினர் என்னென்ன கூறுகிறார்கள் என்று நீங்களே படிச்சு பாருங்க…

#1 நான் என் கணவர் கிட்ட, கிரெடிட் கார்டுல எவ்வளவோ ஸ்பென்ட் பண்றேன்னு சொல்ல மாட்டேன். என்கிட்டே தனியா ஒரு கிரெடிட் கார்ட் இருக்கு. அதுல தான் எனக்கு, குழந்தைகளுக்கும் நிறையா ட்ரெஸ் வாங்குவேன். இதப்பத்தி தெரிஞ்சா, அவரு நான் அஜாக்கிரதையா இருக்கேன்,செலவு பண்றேன்னு திட்டுவாரு. அதனால, அவர்கிட்ட இத இரகசியமா வெச்சிருக்கேன்.

#2 இத இரகசியம்னு சொல்ல முடியாது, என்னோட மறதின்னு சொல்லலாம். ஏதாவது இன்விடேஷன் வந்துச்சுனா அதப் பத்தி நான் மறந்திடுவேன். கடைசியிலா ஒரு நாள் முன்ன இல்ல, அந்த நாளே இன்வைட் பண்ணவங்க மெசேஜ் இல்ல கால் பண்ணி ரிமைன்ட் பண்ணும் போதுதான் எனக்கு ஞாபகம் வரும். அதுக்கப்பறம் அரக்கபரக்க ரெடியாக ஃபங்க்ஷனுக்கு போவோம்.

#3 எனக்கு பல பேர் கூட ரொமான்ஸ் உறவு அனுபவம் இருந்தது. இதப்பத்தி கல்யாணத்துக்கு அப்பறம் மனைவிக்கிட்ட சொல்லிடலாம்னு நெனச்சேன். ஆனாலும், எங்க இதனால பிரச்சனை ஏதாவது வந்து பிரிஞ்சிடுவோமோங்கிற பயத்துனால இன்னைக்கி வரைக்கும் சொல்லாம இரகசியமாவே வெச்சிட்டு இருக்கேன்.

#4 நான் அதிகமா ஸ்வீட்ஸ் சாப்பிடுவேன். ஆனா, என் கணவர் ரொம்ப ஹெல்த் மேல கவனமா இருக்குறவர். அவருக்கு இது தெரிஞ்சா திட்டுவார். அதனால, ஆபீஸ் போயிட்டு வர வழியில, இல்ல அவர் வீட்டுல இல்லாத போது ஸ்வீட்ஸ் வாங்கி சாப்பிட்டு அந்த டப்பாவ வீசிடுவேன். என்னைக்கு இத அவரு கண்டுபிடிக்க போறார்னு தெரியல.

#5 எனக்கு அதிகமா படம், நாடகம், ஸ்டேன்ட் அப் காமெடி ஷோ எல்லாம் பார்க்க பிடிக்கும். ஆனா, என் கணவர் இந்த மாதிரி விஷயத்துல அதிகமா செலவு பண்ண விடமாட்டாரு. ஆரம்பத்துல அவருக்கு தெரியாம போய் பார்த்துட்டு வரது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா, இப்போ ஆன்லைன்ல சப்ஸ்க்ரைப் பண்ணி பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

#6 எங்க செக்ஸ் வாழ்க்கை ரொம்ப ஆரோக்கியமா தான் போயிட்டு இருக்கு. ஆனாலும், கணவருக்கு தெரியாம நான் அப்பப்போ சுய இன்பம் காண்பது உண்டு. இது கொஞ்சம் சங்கோஜமான விஷயம். நிச்சயமா இதப்பத்தி நான் அவர்கிட்ட வாழ்நாள்ல சொல்ல போறதே இல்ல.

#7 என்னோட டீனேஜ் வயசுல நான் நிறையா வரைமுறை இல்லாத காரியங்கள்ல ஈடுபட்டிருக்கேன். ஆனா, இத எல்லாம் எப்படி என் மனைவிக்கிட்ட சொல்ல முடியும்னு தெரியல. நாங்க ரெண்டு பெரும் டேட் பண்ணும் போதே இதப்பத்தி வெளிப்படையா சொல்லிடலாம்னு நெனச்சேன். ஆனா, அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டதால, எங்க என்னையும் பிடிக்காம போயிடுமோனு சொல்லாம மறைச்சுட்டேன்.

#8 ஏறத்தாழ ஆறு வருஷமா இத நான் மறைச்சு வெச்சுட்டு இருக்கேன். நான், என் ஃபிரெண்ட்ஸ் அஞ்சாறு பேரு எப்பவும் ஒண்ணா தான் குடிப்போம். நாங்க எல்லாம் ஒரே ஊருல தான் வேலை பார்க்குறோம். இப்பவும் எப்பயாவது நேரம் கெடச்சா… ஆபீஸ்ல வர்க் ஃப்ரம் ஹோம் போட்டுட்டு, யாராவது ஒருத்தர் வீட்டுல பிளான் போட்டு குடிக்க ஆரம்பிச்சுடுவோம்.

#9 எனக்கு இன்னும் ட்ரெண்டியா ட்ரெஸ் போட பிடிக்கும். என் ஆபீஸ்லயே அதுக்கெல்லாம் தடை இல்ல. ஆனா, என் மனைவி தான் இந்த வயசுல, நீங்க இருக்க பொஷிஷனுக்கு இதெல்லாம் தேவையானு போட விடமாட்டாங்க. அதுனாலயே சிலபல டீ-ஷர்ட், ஜீன்ஸ் எல்லாம் ஆபீஸ்லயே மறைச்சு வெச்சிருக்கேன்.

#10 என் வைப் நினைக்கிறத விடவே அதிகமா கடன் ஃபிரெண்ட்ஸ்க்கு கடன் கொடுத்து வெச்சிருக்கேன். இது தெரிஞ்சா நிச்சயமா என் மனைவி சண்டைக்கு வருவாங்க. அதனால, போன வருஷம் எனக்கு கெடச்ச சம்பள உயர்வ கூட மறைச்சுட்டேன்.

#11 இதை இரகசியம் என்பதை காட்டிலும், நான் அவரிடம் வெளிப்படையாக கூற பயப்படும் விஷயம் என்று கூறலாம். எங்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. என் கணவருக்கு வேலையில் சிறந்த விளங்க வேண்டும், அதிகம் உயரம் தொட வேண்டும் என்றே விருப்பம். இப்போது என் வயது 32. இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வதில் அவருக்கு விருப்பமும் இல்லை. எப்படி அவரிடம் என் விருப்பத்தை கூறுவது என்று தயங்குகிறேன். இதுக்குறித்து பேசினாலே அவர் கோபம் கொள்கிறார்.

#12 என் மனைவி ஹௌஸ் வைப். குழந்தைகளை கவனித்துக் கொள்வது கடினம் தான். அதனால், நான் வேலையில் இருந்து சீக்கிரம் வீடு திரும்பி அவருக்கு உதவ வேண்டும் என்று கருதுகிறார். ஆனால், நாள் முழுக்க கடுமையாக உழைத்துவிட்டு. உடனே அப்பா மோடுக்கு மாறி, மீண்டும் சோர்வை போக்கிக்கொள்ள முடியாமல் இருக்க என்னால் முடியாது. அதனால், வேலை முடித்து ஓரிரு மணி நேரம் பார்க் சென்று அல்லது நண்பர்களை சந்தித்து பேசி சோர்வு போக்கிய பிறகே வீட்டுக்கு செல்வேன். இதுவரை நான் இதுக்குறித்து மனைவியிடம் கூறியது இல்லை.

#13 எனக்கு பாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கரியோக்கி (karaoke) உடன் பாடுவது என்றால் அவ்வளவு ஆசை. ஆனால், ஏனோ நான் பாடினால் என் கணவருக்கு பிடிக்காது. அவருக்கு சத்தமே இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். ஆகவே, அவர் வீட்டில் இல்லாத போதும், அவர் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போதும் பாட துவங்கிவிடுவேன். இந்த ஆறாண்டு இல்லற வாழ்வில் அவர் ஒரு நாள் கூட இதுக்குறித்து அறிந்தது இல்லை.

#14 என் மனைவிக்கு ஆரோக்கியம் தான் இரண்டு கண்கள். வீட்டில் எண்ணெய் பொருட்கள் சமைப்பது மிகவும் கடினம். பூரிக்கு தடை என்றால் பரவாயில்லை, உளுந்து வடை, நெய் ரோஸ்ட்க்கு கூட தடை என்றால் என்ன செய்வது. ஆகையால், நேரம் வாய்க்கும் போதெல்லாம், தனியாக எங்காவது ரெஸ்டாரன்ட் சென்று விரும்பியதை சாப்பிட்டு விட்டு வந்துவிடுவேன்.