Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் மார்பங்கள் பற்றி தெரியுமாஆண்களே ?

பெண்களின் மார்பங்கள் பற்றி தெரியுமாஆண்களே ?

1618

women breast tips:பெண்களின் உடலில் மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் பாகங்கள்; இந்த முக்கிய உடல் பாகமான மார்பகங்கள் பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபாடு அடையும்; வேறுபட்டு தெரியும். இவ்வாறு பெண்களின் மார்பகத்தில் நடைபெறும் மாற்றங்களை ஆண்களும், பெண்களும் அறிவது அவசியம்; ஏனெனில் மார்பக மாற்றங்களை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால் அது மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம்.

இந்த பதிப்பில் பெண்களின் மார்பகத்தில் பூப்படைவு முதல் தாய்ப்பால் அளிக்கும் வரை நிகழும் மாற்றங்களை பற்றி மற்றும் பெண்களின் மார்பக மாற்றங்கள் பற்றி ஆண்கள் அறியாத விஷயங்கள் அதாவது கணவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் பற்றி காணலாம்.

வயது வந்த பருவம்!
பெண்கள் வயதுக்கு வரும் பருவத்தில் மார்பகங்கள் பெரிதாக மாற தொடங்கும்; பருவம் எய்தும் வயது வரும் வரை பெண்களின் மார்பகங்கள் எந்த ஒரு மாறுபாடும் இன்றி, தட்டையாகவே இருக்கும். பெண்கள் வயதுக்கு வரும் முன் மார்பகத்தில் சில மாற்றங்கள் நடக்க தொடங்கும்; இந்த மாற்றங்கள் வயதுக்கு வந்த பின், கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மாற்றம் அடைந்து, மார்பகங்கள் பெரிதாக வளரும்.

பெண்கள் இந்த சமயத்தில் இருந்தே தங்கள் உடலின் முக்கிய உறுப்பை காக்க சரியான உள்ளாடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.

கன்னிப்பருவம்! பெண்கள் கன்னிகளாய் மாறி, கன்னி பருவத்தை அடைந்து மணாளனை கைப்பிடிக்கும் தருணம் இளமை பொங்கி வழியும் மார்பகங்களாக இருக்கும். பெண்ணின் வயதின் இளமை மார்பக வனப்பில் தென்படும்; பெண்கள் வயது வந்த பருவம் முதலே சரியான உள்ளாடைகளை அணிந்து வந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. இதுவே சரியான உள்ளாடைகள் அணியாமல் விட்டு விட்டால், அது மார்பகம் தொங்கி போகும் நிலையை உருவாக்கலாம் அல்லது அந்த நிலைக்கு வழி வகுக்கலாம்.

திருமணமான பின்! திருமணமான பின் பெண்ணின் உடல் ஆணின், அதாவது கணவரின் தீண்டல்களுக்கு உள்ளாவதால், பெண்களின் மார்பகத்தில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்படும். இது என்ன மாற்றங்கள் என்றால், திடமாக இருக்கும் வண்ணம் பராமரித்த மார்பகங்கள் கூட திருமணத்திற்கு பின், கணவரின் தீண்டல்களுக்கு பின் தளர தொடங்கும். அதிகமாக உறவில் ஈடுபடும் பெண்களுக்கு விரைவிலேயே மார்பகங்கள் பெரிதாகி விடும்; அல்லது நீண்ட காலமாகஉறவு கொள்ளும் பெண்களுக்கு கூட மார்பகங்கள் மிகவும் பெரிதாகி விடும்.

கர்ப்ப காலம்..! கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏகப்பட்ட ஹார்மோன்கள் சுரக்க தொடங்குகின்றன; மேலும் பெண்ணின் உடல் வெளிப்புறத்திலும் உட்புறமாகவும் அதிகமான மாறுதல்களை அடைகிறது. இந்த மாறுதல்களால் பெண்களின் மார்பகங்கள் கூட சற்று மாறுபடும். இந்த மாறுபாடுகள் ஏற்பட கர்ப்ப காலத்திற்கு பின், பெண்கள் சில வருடங்கள் சந்திக்க போகும் ஒரு கால கட்டமான தாய்ப்பால் அளித்தலுக்கான ஆயத்த பணிகள் பெண்ணின் உடலில் நடப்பதும் மற்றும் ஒரு காரணம் ஆகலாம்.

பிரசவ காலம்..! பெண்ணின் கர்ப்ப காலம் முடிவடையும் தருவாயில் அதாவது பிரசவம் நிகழப்போகும் கால கட்டத்தில் கர்ப்பத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, பெண்ணின் கருவறையில் இருந்து குழந்தைகளை வெளியேற்ற சுரக்கப்படும் ஹார்மோன்கள், நிகழும் மாற்றங்கள் போன்றவை பெண்ணின் மார்பகத்திலும் சில மாற்றங்களை தோற்றுவிக்கும். இந்த மாற்றங்கள் குழந்தை பிறந்தவுடன் பெண்ணின் மார்பகம் தாய்ப்பால் அளிக்கும் வகையில் இருக்கும் வண்ணம், அவர்களின் மார்பகங்களை தயார் செய்யும்.

தாய்ப்பால் அளித்தல்! பெண்ணின் மார்பகத்தின் வழியாக குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் முதல் மற்றும் முக்கிய உணவினை, உயிரை காக்கும் சக்தியை பெறுவர். அப்படி குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது பெண்களின் மார்பக்கத்தில் குழந்தைகள் கடிப்பதால், மார்பகத்தை இழுப்பதால் வலி மற்றும் வேதனை உண்டாகலாம். மேலும் குழந்தையின் இந்த செயல்பாடுகள் தாயின் மார்பகத்தை மேலும் தளர்வு படுத்தி, மார்பகத்தை தொங்கி போக செய்யலாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது..! பெண்களின் உடலில் அவர்கள் பிறந்தது முதல் மாற்றங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். பெண்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் கூர்ந்து கவனித்தால் கண்ணுக்கு புலப்பட கூடியவையே! பெண்கள் தங்கள் மார்பக மாற்றங்களை கட்டுப்படுத்த சரியான உள்ளாடைகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டொயது மிகவும் அவசியம்.