Home ஜல்சா இந்திய நடிகை, நடிகர்களின் செக்ஸ் ஆசை, ஆர்வம் மற்றும் இரகசியங்கள்!

இந்திய நடிகை, நடிகர்களின் செக்ஸ் ஆசை, ஆர்வம் மற்றும் இரகசியங்கள்!

278

ஜல்சா செய்திகள்:கலவி, கலவுறவு என்பது உயிர்களுக்கு இடையே இயற்கை. ஆனால், அதுவே அடிக்ஷனாக மாறும் போதுதான் ஒருவரின் பிற செயல்களில் தேக்கம் அடைய வித்தாகிறது. மது, புகை, போதை பொருட்கள் என்றுமட்டுமின்றி செக்ஸ் என்பதும் ஒரு பெரும் அடிக்ஷன் தான்.

சிலரால் செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாது. வெறிப்பிடித்தவர்கள் போல ஆகிவிடுவார்கள். சாமானிய மக்களிடையே கூட இந்த பழக்கம் இருக்கலாம்.

ஆனால், ஒரு பிரபல நடிகர் அல்லது நடிகை தன்னால் செக்ஸ் இன்றி இருக்க முடியாது என்று கூறினால் அது தலைப்பு செய்தியாகிவிடும். அந்த பதிவு சமூக தளங்களில் வைரலாக பரவ துவங்கிவிடும்.

இதோ! தங்கள் செக்ஸ் வாழ்க்கை, ஆசை மற்றும் சில இரகசியங்களை பொதுவெளியில் வெளிப்படையாக கூறிய சிலர் நடிகர், நடிகைளின் பதிவுகள்…

ரன்வீர் சிங்!
செக்ஸ் குறித்து மிக வெளிப்படையாக பேசும் நபர் நடிகர் ரன்வீர் சிங். தன் வாழ்வை ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறார். தான் தனது 12 வயதில் கற்பு இழந்தேன் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் இவர். கூடிய விரைவில் தீபிகா படுகோனேவை கைப்பிடிக்க போகும் ரன்வீர் தான் ஒரு செக்ஸ் மேனியாக் என்ற பெருமையாக கூறிக் கொள்கிறார்.

காஸ்ட் கவுச்!
தான் மிக இளம் வயதில் கற்பு இழந்தேன் என்பதை கூறும் ரன்வீர் சிங், எப்போதுமே தன் பாக்கெட்டில் ஒரு ஆணுறை பாக்கெட் வைத்திருப்பாராம். தனது சிறந்த பிறந்தநாள் பரிசானது, பிறந்தநாள் செக்ஸாக தான் இருக்க முடியும் என்றும் இவர் பேட்டியில் கூறி இருக்கிறார். ஒருமுறை திரைப்படத்திற்கு வாய்ப்பு கேட்டு போன இடத்தில் தயாரிப்பாளர் இவரை காஸ்டிங் கவுச் முறையில் பாலியில் வன்முறைக்கு உட்படுத்தினார் என்பதனையும் இவர் வெளிப்படையாக கூறி இருந்தார்.

சன்னி லியோன்!
செக்ஸ் இரகசியங்கள் என்று எடுத்துக் கொண்டால், நிறையவே வைத்திருக்கிறார் சன்னி லியோன். சன்னி லியோன் அவராக வேண்டி பார்ன் துறைக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. சன்னி லியோன் நர்சிங் பயின்று வந்த போது தான் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம்.

பை-செக்ஸுவல்! பார்ன் ஸ்டாராக வேலை செய்து வந்த போது சன்னி லியோன் லெஸ்பியனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், தன் பள்ளி பயின்று வந்த போதே தனது 16 வயதில் ஒரு பாஸ்கெட் பால் விளையாட்டு வீரருடன் இருந்த உறவில் முதன் முறையாக செக்ஸுவல் உறவில் ஈடுபட்டவர் சன்னி லியோன். தனது 18வது வயதில் தான் தானொரு பை-செக்ஸுவல் என்பதை அறிந்திருக்கிறார். இவர் முதன் முதலில் எதிர்பாலின நபரை முத்தமிட்டது 11 வயதிலாம்.

சல்மான் கான்! இருப்பதிலேயே பெரும் அதிர்ச்சி இது தான். சல்மான் கான் ஒரு பேட்டியில் தான் இன்னும் விர்ஜின் என்று கூறினார். ஐம்பதை கடந்த சல்மான் கான் நிறைய காதலிகளை கடந்து வந்தவர். இன்னுமா இவர் விர்ஜின் என்று சிலர் வியக்கிறார்கள். ஆனால், இவர் விர்ஜினாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சிலர் சில காரணங்களை முன்னெடுத்து வைக்கிறார்கள்.

பிக் நோ! சல்மான் கான் தனது திரைப்படங்களில் ஒருபோதும் முத்தக் காட்சி அல்லது நடிகையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளில் நடித்ததே இல்லை. இயக்குனர்கள் கதை சொல்லும் போதே அதை தவிர்த்துவிடுவாராம். ஆன் ஸ்க்ரீனில் இதுவரை சல்மான் கான் எந்த நடிகையும் முத்தமிட்டதே இலையாம். செக்ஸ் சார்ந்த கதைகள் என்றாலே விரட்டிவிடுவாரம்.

ஷில்பா ஷெட்டி! ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், இவர் அவருக்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஷில்பா ஷெட்டி அக்ஷை குமார் காதல் பாலிவுட் அறிந்த கதை. ஆனால், தனது முதல் காதல் 22 வயதில் மலர்ந்தது என்று கூறி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

வெட்கம்! பிக் பிரதர், பிக் பாஸின் உண்மை பிரதி. இந்நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒருமுறை ஷில்பா ஷெட்டி பங்கெடுத்துக் கொண்டார். அப்போது ஷில்பாவின் காதல் குறித்து உடனிருந்த கண்டஸ்டன்ட் ஒருவர் கேட்க, தனது முதல் காதல் 22 வயதில் மலர்ந்தது என்று கூறினார். அதாவது அக்ஷை குமாருக்கு முன். மேலும், அந்நபர் தொடர்ந்து நீங்கள் செக்ஸுவல் உறவில் இருந்ததுண்டா என்று வினவியதற்கு, வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். இதற்கு என்ன்ன பொருள் என்று ஷில்பாவிடம் தான் கேட்க வேண்டும்.

ஷாஹித் கபூர்! ஷாஹித் கபூர் கரீனா கபூரை காதலித்து மனமுடைந்து போன நடிகர். இருவரும் விரைவில் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தான் ஜப் வி மெட் படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் நடுவில் இருந்த லவ் கெமிஸ்ட்ரி காரணத்தால் தான் இவர்களை ஒன்றாக அந்த படத்தில் நடிக்க வைத்தனர். ஆனால், அந்த படத்தின் போதே இந்த காதல் முறிந்தது.

நடிப்பே வேண்டாம்! ஷாஹித் கபூர் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் செக்ஸிற்காக நான் நடிப்பையும் விட்டுத்தருவேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். இப்படியான ஒரு பதிலை ஷாஹித் கபூரிடம் இருந்து கரனும் எதிர்பார்க்கவில்லை, அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை.

ரன்பீர் கபூர்! ரன்பீர் கபூர் சிறு வயதில் இருந்தே ப்ளே பாய் தான். ஆனால், நிறைய காதல் காயங்களும் கொண்டிருக்கிறார். இவர் தனது 15 வது வயதில் கற்பு இழந்தேன் என்று கூறி இருந்தார். மேலும், இவர் அந்த வயதிலேயே காதல் பிரேக்-அப் ஆகி ஃபீலிங்க்ஸ் ஆகி இருக்கிறார்.

ஆணுறை பரிசு! மேலும், ரன்பீர் கபூர் – தீபிகா படுகோனே மிக ஆழமான காதல் உறவில் திளைத்து வந்தனர். ஆனால், இவர்கள் உறவு முறிவில் முடிந்தது. தான் நிறைய பேரால் எமாற்றப்பட்டுள்ளேன் என்று ரன்பீர் கூறினார். ஆனால், இவரது எக்ஸ் காதலியான தீபிகாவோ ரன்பீரிடம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. அதற்காக தான் நான் அவருக்கு ஆணுறைகளை பரிசளித்தேன் என்று ஒருமுறை கூறி இருந்தார்.

கோவிந்தா! கோவிந்தா மற்றும் நடிகை ராணி முகர்ஜிக்கு இடையே உறவு இருந்ததாக நிறைய கிசுகிசு பரவின அக்காலத்தில். ஒருமுறை கோவிந்தா தனது வீட்டிலேயே ராணியுடன் பிடிப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. சில தகவல்கள், ஒருமுறை ஊடகவியலாளர் ஒருவர் கோவிந்தாவை பேட்டி காண சென்ற போது, கோவிந்தாவின் படுக்கை அறையில் இருந்து ராணி முகர்ஜி இரவு உடையில் வெளி வந்ததை கண்டார் என்று கூறுகின்றன.

மன்னிப்பு! கோவிந்தா தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு குறித்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனால் இவரது இல்வாழ்வில் சில கசப்பான நிகழ்வுகள் உண்டாகின. மேலும், ஒரு தருவாயில் கோவிந்தாவின் மனைவி அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

இம்ரான் ஹசாமி! இம்ரான் ஹசாமி தனது மனைவி பர்வீன் ஷஹாணியை முதன் முறையில் ஒரு க்ளபில் தான் கண்டிருக்கிறார். அங்கிருந்து தான் இவர்களது உறவு இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. சில தகவல்கள், பர்வீன் தனது நம்பரை உள்ளாடை ஒன்றில் எழுதி கொடுத்தார் என அரசல்புரலசாக பரவியது.

ஒன் நைட் ஸ்டாண்ட்! காபி வித் கரன் என்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட போது, திருமணத்திற்கு பிறகு பேச்சுலர் வாழ்க்கையில் எதை நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஒன் நைட் ஸ்டாண்ட் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் இம்ரான். இம்ரான் திரைப்படத்தில் மட்டுமின்றி ரியல் வாழ்க்கையிலும் பெரிய ப்ளே பாய் தான்.

அர்ஜுன் கபூர்! ஷாஹித் கபூருக்கு அடுத்து செக்ஸிற்காக எதையும் விட்டுக் கொடுப்பேன் என்று கூறிய நடிகர் அர்ஜுன் கபூர். இவர் இந்த தகவலை காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கூறினார். உணவை கூட விட்டுக் கொடுப்பேன், ஆனால் என்னால் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று அர்ஜுன் கபூர் கூறி இருந்தார்.

பேரார்வம்! தன் மனதில், எண்ணத்தில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம் செக்ஸ் தான். காதலைவிட செக்ஸ் தான் எனக்கு முக்கியம் என்றும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட அர்ஜுன் கபூர் கூறி இருந்தார். அர்ஜுன் கபூர் போனி கபூரின் முதல் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெண்களுக்கு வரும் தோற்பட்டை பருக்களை போக்கும் மருத்தவ டிப்ஸ்
Next articleதாய் குழந்தைகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது எப்படி?