Home ஜல்சா சிறப்பான பெர்பார்மன்ஸுக்காக” ஊக்க மருந்து உட்கொண்ட மாப்பிள்ளை.. தூக்கி எறிந்த புதுப் பொண்ணு!

சிறப்பான பெர்பார்மன்ஸுக்காக” ஊக்க மருந்து உட்கொண்ட மாப்பிள்ளை.. தூக்கி எறிந்த புதுப் பொண்ணு!

32

பஞ்சாபில் மணமகன் ஊக்க மருந்து உட்கொண்டதால் கடைசி நேரத்தில் திருமணத்தை தூக்கி எறிந்தார் 22 வயதான மணப்பெண்.

பஞ்சாப்: பஞ்சாபில் மணமகன் ஊக்க மருந்து உட்கொண்டதால் கடைசி நேரத்தில் திருமணத்தை தூக்கி எறிந்தார் 22 வயதான மணப்பெண்.
பஞ்சாப் மாநிலம், தினாநகரைச் சேர்நதவர் சுனிதா சிங். கான்பூர் அருகே உள்ள முகேரியன் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாஸ் பிரீத். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி, அங்குள்ள குருத்வாராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஏற்பாடுகள் படுஜோராக நடைபெற்று வந்தன.

சடங்குகளுக்கு ஏற்பாடு
இதைத் தொடர்ந்து திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கின. அப்போது மணமகன் காரில் இருந்து இறங்கினார். ஆனால் தள்ளாடியபடி வந்தார். இதனை கண்ட சுனிதாவுக்கு அதிர்ச்சி. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மணமகனின் பெற்றோர் பதில்
மணமகன் வீட்டாரிடம் இது குறித்து கேட்டபோது, ஜாஸ்பிரீத் கிழே விழுந்து விட்டதால் காலில் காயம் ஏற்பட்டு அவர் விஸ்கி விஸ்கி நடப்பதாக சப்பைக் கட்டு கட்டினர். இருந்தாலும் மணமகன் ஊக்க மருந்தை உட்கொள்ளும் பழக்கம் உடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உறவினர்கள் சமாதானப்படுத்தியும் சுனிதா கேட்கவில்லை.

சுனிதாவின் டிமாண்ட்
இதைத் தொடர்ந்து அங்குள்ள சுகாதார மையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுனிதா கோரிக்கை விடுத்தார். இருந்தும் அங்கு அதற்குரிய கருவிகள் இல்லாததால் குருதாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள கூறினர். பரிசோதனையில் முடிவில் சுனிதா சந்தேகித்தது போல் முடிவுகளும் வந்தன. அதாவது மணமகன் ஜாஸ்பிரீத்துக்கு ஊக்க மருந்து உள்கொள்ளும் பழக்கம் இருந்தது உறுதியானது.

திருமணத்தை நிறுத்தினார்
இதனால் ஊக்க மருந்துக்கு அடிமையான ஒருவரை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி திருமணத்தை நிறுத்தினார். மேலும் மணமகள் வீட்டின் சார்பாக அளித்த சீர்வரிசைகளை திருப்பி கேட்டார். மணமகன் வீட்டார் கொடுக்க மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. சுனிதாவின் முடிவுக்கு மணமகன் வீட்டார் கட்டுப்பட்டதை அடுத்து நகைகள் திருப்பி அளிக்கப்பட்டன.

பாராட்டு மழை
எத்தனை உறவுகள் சமாதானம் செய்தபோதிலும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உண்மையை கண்டறிந்து போதை பொருள் ஆசாமிக்கு வாக்கப்படாமல் தப்பித்த சுனிதாவின் தைரியத்தையும் மன வலிமையையும் அனைவரும் பாராட்டினர்.