Home சூடான செய்திகள் பாலியல் பொம்மைகளை திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண்கள்!

பாலியல் பொம்மைகளை திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண்கள்!

58

captureஇன்று 70% மேல் காதல் திருமணங்கள் தான் உலகெங்கிலும் நடக்கின்றன. ஆனால், காதல் திருமணங்களில் தான் சண்டைகளும், கசப்புகளும் அதிகம் நேர்ந்து, பிரிவுகளும் அதிகம் நிகழ்கின்றன. மனைவியுடன் சண்டை, விவாகரத்து என பெரிய வரிசையில் நிற்கிறது ஒரு கூட்டம். இது எல்லை சார்பற்று உலகெங்கிலும் காணப்படும் நிகழ்வாக இருக்கிறது. இதன் வெளிப்பாடாக தான் சண்டையிடாத ஒரு துணையாக பெண்களை போன்ற பாலியல் பொம்மைகள் தயாரிக்க ஆரம்பித்தன உலக ரோபா தயாரிப்பு நிறுவனங்கள். இதற்கு ஆண்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதோ, கூடிய விரைவில் சட்டப்பூர்வமாக பாலியல் ரோபோக்களை திருமணம் செய்துக் கொள்ளும் நிலையம் வந்துவிடும் போல.

சீன கணவர்! சீனாவில் ஒருவர் தன் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு நிகழ்வதால் அவரை பிரிந்து வசித்து வந்தார். பிரிவில் பெரிதும் சோகம் அடைந்த அந்த ஆணுக்கு, பாலியல் பொம்மைகள் மீது பெரும் ஈர்ப்பு வந்தது. ஈர்ப்பு அதிகரித்து அழகான அந்த பாலியல் பொம்மையை மனதார காதலிக்க துவங்கினார். இப்போது அந்த பாலியல் பொம்மையையே திருமணம் செய்துக் கொண்டேன் என கூறி அதிர்ச்சி அலைகளை கிளப்பிவிட்டுள்ளார்.

2050-களில் இது பெருகுமா? மெக்குலன் எனும் பிரபல பாலியல் பொம்மை தயாரிப்பு நிறுவன அதிகாரி, 2050-களில் பாலியல் பொம்மைகளை திருமணம் செய்வது என்பது மனிதர்கள் மத்தியில் அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். இது குறித்து மேலும், மெக்குலன் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. அதே போல திருமணம் செய்துக் கொள்ளாமலேயே லிவ்-வின் உறவுகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சின்ன சின்ன சண்டைகளிலேயே பிரிந்துவிடும் இவர்கள் வேறு துணை தேடி சென்றுவிடுகிறார்கள்.”

பாதிப்பு! உறவுகளில் கணவன் – மனைவி மத்தியில் உணர்வு ரீதியாக ஏற்படும் தாக்கங்களே பெரும்பாலும் பிரிவிற்கு காரணமாக இருக்கின்றன. துரோகம் செய்வது, வேறு பெண் / ஆணுடன் பழக நினைக்கும் எண்ணங்கள் அதிகரிப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

இதுதான் தீர்வா? மேற்கத்திய நாடுகளில் ஆண்கள் மத்தியில் மனைவியுடன் சண்டை போடுவதால் தானே பிரச்சனை. சண்டையே போடாத பெண் மனைவியாக வந்தால்… என்ற எண்ணம் வர இந்த பாலியல் பொம்மைகள் காரணமாக இருக்கின்றன. இந்த பொம்மைகள் சண்டையிட போவதில்லை. மேலும், இது பொருளாதார பிரச்சனையும் தராது. இந்த எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகும் என்ற பட்சத்தில் 2050-ல் பாலியல் பொம்மைகளை திருமணம் செய்யும் எண்ணிக்கை கண்டிப்பாக உயரும்

இச்சை மட்டும் போதுமா? பாலியல் பொம்மைகளை திருமணம் செய்துக் கொண்டால் சண்டை, சச்சரவு மட்டுமல்ல, காதலும், அன்பும் கூட வராது. இச்சையை தீர்த்துக் கொள்ள மட்டும் தான் பாலியல் பொம்மைகள் உதவுமே தவிர, இல்லறம் சிறக்க உதவாது, பாலியல் பொம்மை ஒரு பாலியல் தொழிலாளியாக மட்டுமே இருக்குமே தவிர, மனைவியாக இருக்க முடியாது.