Home பாலியல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை தருவது எப்படி?

அந்தரங்க உறுப்புகள் பற்றிய விழிப்புணர்வை தருவது எப்படி?

49

3004a197-11da-4ce7-8193-731a6f4ecbdc_l_styvpfபொதுவாகவே குழந்தைகள் ஆடைகள் அணிந்து கொள்ள ஆரம்பத்தில் விரும்பமாட்டார்கள். ஏதோ ஒன்று தங்களை போட்டு நெருக்கிக் கொண்டிருப்பது போல் மிகவும் அசௌகரியமாக உணர்வார்கள். அவர்களுடைய அந்தரங்க உறுப்புகள் மீது அவர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அந்த ஈர்ப்பின் காரணமாக எதாவது செய்து கொண்டே இருப்பார்கள். கைகளை அந்த இடங்களில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் நோய்த்தொற்றுக்கள் உண்டாகும். அந்த பகுதி பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போகும்.

அவர்களுக்கு அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி நாம் தான் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எப்படியெல்லாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்?

குழந்தைகள் தங்களுடைய உடலுறுப்புகளைப் பற்றிய வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது, அவற்றைப் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்த ஆரம்பிக்கலாம். குறிப்பாக பெண் குழந்தைகள் தங்களுடைய உறுப்புகள் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது, அவர்களுக்கு அறிவுறுத்துதல் நல்லது.

அப்படி அவர்கள் உணரும்போது, ஆர்வமாக சில கேள்விகளைக் கேட்பார்கள். அதை நாம் தவறாகவோ அல்லது கண்டிப்புடனோ கையாளுதல் கூடாது.

அவர்களுக்குப் புரியும் வகையில், பொறுமையாக எடுத்துச் சொல்லி, எதைப்பற்றி பேசலாம், எதைப்பற்றி யாரிடம் கேட்கக் கூடாது? யாரிடம் எதை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதைப் பற்றி அறிவுறுத்துதல் வேண்டும்.

அவர்கள் கேட்கும் கேள்விக்கு நீங்கள் கூச்சப்படாமல் தெளிவுபடுத்த வேண்டும்.

பொது இடங்களில் குழந்தைகள் அதுபற்றி கேட்கும்பொழுது, அவர்களுடைய சிந்தனைகளை திசை திருப்பும்படி ஏதாவது செய்யுங்கள்.

யாராவது குழந்தைகளைத் தொடுகிறார்கள் என்றால் அதில் எது நல்ல தொடுதல், எது தவறான தீண்டல் என்று குழந்தைகள் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.

உடலில் எவையெல்லாம் சென்சிடிவ்வான இடங்கள் என்பதை அறிவுறுத்துங்கள்.