Home ஜல்சா மயிலாப்பூர் லாட்ஜில் பட்டதாரி பெண் கொலை: உல்லாசம் அனுபவித்து கொன்ற காதலன் கைது

மயிலாப்பூர் லாட்ஜில் பட்டதாரி பெண் கொலை: உல்லாசம் அனுபவித்து கொன்ற காதலன் கைது

28

சென்னை மயிலாப்பூரில் பட்டதாரி பெண்ணை கொன்ற வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பருடன் உல்லாசம் அனுபவிக்க மறுத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பட்டதாரி பெண்

சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவர் பழைய பேப்பர் கடை வைத்துள்ளார். இவருடைய மூத்த மகள் நிவேதா(வயது 22). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 14–ந்தேதி மாயமானார்.

தன்னுடைய தோழி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவருடைய பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் நிவேதா கிடைக்கவில்லை. இதையடுத்து மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில், தன்னுடைய மகள் நிவேதா காணாமல் போய் விட்ட தகவலை தெரிவித்து, அவரை கண்டுபிடித்து தரும்படி எத்திராஜ் புகார் அளித்தார்.

அதன்பேரில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்தநிலையில் மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சொந்தமான லாட்ஜில் பூட்டிய அறைக்குள் இளம்பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண் மாயமான நிவேதா என்பது தெரிய வந்தது.

எத்திராஜூம் தன்னுடைய மகள் தான் என்று அடையாளம் காட்டினார். நிவேதாவின் உடல் முழுவதும் நகக்கீறல்களும், கழுத்தில் கையை வைத்து நெரித்த தடயமும் இருந்தது. எனவே நிவேதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு

நிவேதாவை கொன்ற கொலையாளியை பிடிப்பதற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் முருகையன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொலை நடந்த லாட்ஜ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவைச் சேர்ந்த ஹரீஷ் என்ற பெயரில் அறை புக் செய்யப்பட்டு இருந்ததும், அவருடன் நிவேதா வந்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லாட்ஜில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். நிவேதாவின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஹரீஷ் என்ற பெயரில் பலமுறை அவரது செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தான் நிவேதாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

செல்போன் டவர் மூலம்…

ஹரீஷ் என்ற பெயரில் வந்த செல்போன் எண்ணின் டவரை ‘சைபர் கிரைம்’ போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த செல்போன் எண் முகவரி மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடையது என்று தெரிய வந்தது. 3 நாட்களுக்கு முன்பு அந்த செல்போன் எண்ணின் டவர் கேரளா மாநிலத்தை காட்டியது. சம்பவத்தன்று அந்த எண் சென்னை மயிலாப்பூர் டவரை காட்டியது.

எனவே நிவேதாவை கொலை செய்தது ஹரீஷ் என்ற பெயரில் நிவேதாவுடன் தொடர்பில் இருந்த சுரேஷ்குமார் தான் என்பது உறுதியானது. இதையடுத்து செல்போன் டவர் மூலம் அவரது நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க திட்டமிட்டனர்.

ஆனால் அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், போலீசார் விசாரணைக்கு திடீர் முட்டுக்கட்டையாக அமைந்தது. சுரேஷ்குமார் மதுரைக்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மதுரை விரைந்தனர். அவருடைய செல்போன் எண் எப்போது? ‘ஆன்’ செய்யப்படும் என்று காத்திருந்தனர். அதன்படி நேற்று காலை சுரேஷ்குமார் தனது செல்போனை ஆன் செய்தார். அப்போது அவருடைய செல்போன் எண் மயிலாப்பூர் ரெயில் நிலையத்தை காண்பித்தது. இதை வைத்து போலீசார் சுரேஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மதுரையை சேர்ந்த நபர்

பின்னர் அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ்குமார் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்தேன். சமையல் வேலையும் செய்வேன். அப்போது விடுமுறை தினத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படி ஒரு நாள் சென்ற போது தான், நிவேதாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை பார்த்தவுடனே அவர் சிரித்தார். பதிலுக்கு நானும் சிரித்தேன். ஒரு பேப்பரில் என்னுடைய செல்போன் எண்ணை எழுதி அவர் அருகில் வீசிவிட்டு சென்றேன். அதை அவர் ஆர்வமாக எடுத்துக் கொண்டார். பின்னர் நிவேதாவின் செல்போன் அழைப்புக்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே 2 நாட்கள் கழித்து அவருடைய அழைப்பு வந்தது. இரண்டு பேரும் மனம்விட்டு பேசினோம். அப்போது நான் என்னுடைய உண்மையான பெயரை அவரிடம் சொல்லவில்லை. என்னுடைய பெயர் ஹரீஷ் என்றும், கேரளாவை சேர்ந்தவன் என்றும் கூறினேன்.

நிவேதாவும் அதை நம்பி விட்டார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினோம். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தோம்.

விபரீத எண்ணம்…

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு கேரளாவில் வேலை கிடைத்து, நான் அங்கு சென்றுவிட்டேன். கேரளாவில் இருந்து தினமும் நிவேதாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு காதலை வளர்த்தேன். என்னுடைய செல்போனில் நிவேதாவின் படத்தை வைத்திருந்தேன். குடிபோதையில் ஒருநாள் என்னுடைய நண்பன் சுபாஷிடம், நிவேதாவின் படத்தை காண்பித்தபோது அவருடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று சுபாஷ் ஆசை வார்த்தை கூறினான்.

இதையடுத்து நிவேதாவிடம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் அடிக்கடி மனதில் எழ தொடங்கியது. என் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய ஆசையை நிவேதாவிடம் தெரிவித்தேன். அவரும் உடனே மறுக்காமல் சம்மதம் தெரிவித்து விட்டார். உடனே நான் அவரை கேரளாவுக்கு வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் என்னை சென்னைக்கு வருமாறு கூறிவிட்டார். இதையடுத்து எங்கு தனிமையில் சந்திக்கலாம் என்று இருவரும் திட்டமிட்டோம்.

முதலில் மகாபலிபுரம் சென்று தனிமையில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் போலீஸ் பிரச்சினை இருக்கும் என்பதால் அந்த முடிவை கைவிட்டுவிட்டோம். பின்னர் தான் லாட்ஜில் அறை எடுத்து தங்கும் யோசனை வந்தது. அதன்படியே கடந்த 14–ந் தேதி மயிலாப்பூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.

வாயை பொத்தி கொலை

நிவேதாவுக்கு தெரியாமல் என்னுடைய நண்பர் சுபாஷையும் அழைத்து வந்திருந்தேன். அவன் லாட்ஜூக்கு வெளியே காத்திருந்தான். நான் லாட்ஜில் திருமண ஆசைக்காட்டி நிவேதாவுடன் 2 முறை உல்லாசம் அனுபவித்தேன். அதன்பின்னர் சுபாஷை அறைக்கு அழைத்தேன். முதலில் அவரை பார்த்ததும் நிவேதா யார் அவர்? என்று அதிர்ச்சியடைந்தார். நான் என்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து வைத்தேன். ‘‘அவனும் உன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்’’ என்று கூறினேன். அதற்கு நிவேதா உடன்படவில்லை. இதையடுத்து வலுக்கட்டாயமாக அவரிடம் உல்லாசம் அனுபவிக்க என்னுடைய நண்பன் முயற்சித்தான். அப்போது நிவேதா சத்தம் போட்டு விடக் கூடாது என்பதற்காக அவருடைய வாயை பொத்தினேன். துப்பட்டாவால் கழுத்தையும் நெறித்தேன். சிறிது நேரத்தில் நிவேதா மயங்கிவிட்டாள். அவர் அருகில் சென்று பார்த்த போது அவரிடம் இருந்து மூச்சு காற்று வரவில்லை. அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவசரம், அவசரமாக அறையை காலி செய்துவிட்டு மயிலாப்பூர் பகுதியிலேயே நானும், என்னுடைய நண்பனும் சுற்றி வந்தோம். என்ன நடக்கிறது என்று நோட்டமிட்டோம்.

நண்பருக்கு வலைவீச்சு

போலீசாரிடம் சிக்காமல் இருக்க என்ன வழி? என்று திட்டமிட்டு கொண்டிருந்த போதே போலீசார் பிடியில் நான் சிக்கிவிட்டேன். சுபாஷ் உஷாராக தப்பி விட்டான். அவன் எங்கு சென்றான் என்று எனக்கு தெரியாது. நிவேதாவை கொலை செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. காமவெறி கண்ணை மறைத்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தப்பிச்சென்ற சுரேஷ்குமாரின் நண்பர் சுபாஷை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாட்ஜில் அறை எடுத்த நிவேதா

சம்பவம் நடைபெற்ற 2 தினங்களுக்கு முன்பு நிவேதாவுக்கு, சுரேஷ்குமார் செல்போனில் பேசி இருக்கிறார். அப்போது அவர் நிவேதாவிடம், ‘உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு நிவேதாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து உன்னுடைய வீட்டுக்கு வரட்டுமா? என்று சுரேஷ்குமார் கேட்டுள்ளார். அதற்கு நிவேதா, வீட்டில் தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என்று மறுத்திருக்கிறார். பின்னர் அவர்கள் இருவரும் எங்கு சந்திப்பது என்று திட்டமிட்டுள்ளனர். அப்போது தான் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது என்று இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நிவேதாவே சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு சென்று, கேரளாவில் இருந்து தன்னுடைய நண்பர் ஹரீஷ் வருவதாக கூறி அவருடைய பெயரில் அறை எடுத்துள்ளார். ஆனால் தனது சாவுக்கு இடம் தேடி வந்து இருக்கிறோம் என்று அப்போது நிவேதாவுக்கு தெரியாமல் போய்விட்டது.