Home இரகசியகேள்வி-பதில் கட்டில் படுகையில் பெண்ணுக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்ன தெரியுமா? பதில்கள் இதோ

கட்டில் படுகையில் பெண்ணுக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்ன தெரியுமா? பதில்கள் இதோ

738

questions answered:செக்ஸ் என்பது ஒரு பாலினத்தின் அதிகாரமாகவோ, ஆதிக்கமாகவோ இருக்கும் வரையில் அதன் முழு இன்பத்தை அனுபவிப்பதோ, முழுமையாக கிடைக்கப்பெறுவதோ கடினம் தான்.

ஆண், பெண் இருபாலருக்கும் கலவியில் நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், அதை யாரிடம், எப்படி கேட்பது. கேட்டால் தன் நடத்தையில் அல்லது தன் கருவளத்தில் சந்தேகம் கொள்வார்களோ என்று அஞ்சி யாரிடமும் கேட்பதில்லை.

இந்த ஆன்லைன் யுகத்தில் எல்லா விதமான சந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஞானியாக திகழ்கிறது கூகுள். கூகுளிடம் இல்லாதே பதில்களே இல்லை.

இதோ! பெண்கள் செக்ஸில் தங்கள் துணையிடம் கேட்க தயங்கும் 15 கேள்விகளும் அதற்கு நிபுணர்கள் அளித்துள்ள பதில்களும்…

வேறு நபர்? கேள்வி #1: சில சமயம் துணையுடன் உறவில் ஈடுபடும் போது, வேறு நபரி குறித்த எண்ணங்கள் வருவது தவறா?

பதில்: கேலியாக எண்ணங்களை திரிய விடுவது அபாயமற்றது தான். ஆனால், உங்கள் மனதோ / மூளையோ தொடர்ந்து துணையுடன் உறவில் ஈடுபடும் போது வேறு நபர்களின் எண்ணங்களை கொண்டுவருகிறது எனில், முதலில் உங்களை நீங்களே ஏன்? என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை அந்த நபர்/கள் உங்கள் துணையை போன்ற குணாதியங்கள் அல்லது பாத்திர ஒற்றுமை கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்கள் உங்களை உறவில் இருந்து வெளிவர தூண்டுகிறார்களா? இப்படியான விஷயங்கள் எழுவது இயல்பு தான். இதில் இருந்து விடுபட, உங்கள் துணையுடன் வேறு சில ஆச்சரியமூட்டும் விஷயங்களில் ஈடுபடுங்கள். உறவில் ஈடுபடும் நிலையை மாற்றிப் பாருங்கள். அல்லது புதிய இடங்களுக்கு சென்று உறவுக் கொள்ளுங்கள். ஒருவேளை, வேறு நபரை எண்ணாமல் உறவில் உச்ச இன்பத்தை எட்ட முடியவில்லை என்றால்… நீங்கள் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

போலியான? கேள்வி #2: பொதுவாக பெண்கள் எப்போதெல்லாம் அல்லது எந்த இடைவேளையில் உச்சக்கட்ட இன்பம் அடைவதில் போலியாக நடிப்பார்கள்?

பதில்: டியூரெக்ஸ் என்ற நிறுவனம் சென்ற ஆண்டு நடத்திய ஒரு பெரும் ஆய்வில், பத்தில் ஒரு பெண் வாரத்திற்கு ஒருமுறையாவது உச்சக்கட்ட இன்பம் அடைவது போல நடிக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தது. சில பெண்கள், தாங்கள் உச்சநிலை அடையவில்லை என்பது தன் துணைக்கு வருத்தம் அளிக்குமோ, அல்லது இதை துணை ஒரு குறைபாடாகோ காண்பாரோ என்ற எண்ணத்தால் கூட உச்சக்கட்ட இன்பம் அடையாமலேயே, தான் உச்ச இன்பம் அடைந்தது போல போலியாக நடிக்கிறார்கள். மேலும், உச்ச கட்ட இன்பம் அடைவது என்பது பெண்களுக்கு மன அழுத்தம் குறையவும், உடல் சோர்வு நீங்க, உடல் வலி குறைய என பல பயன்களை அளிக்கிறது. ஒருவேளை, துணையுடனான உடலுறவில் உச்சக்கட்ட இன்பம் அடையவில்லை என்றால், வைப்ரேட்டர் போன்ற சிலர் செக்ஸ் டாய்ஸ் தேர்வு செய்வதும் உண்டு.

மாத்திரை? கேள்வி #3: கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது அல்லது வேறு கருத்தடை விஷயங்கள் என் செக்ஸ் எண்ணம் / தாக்கத்தை குறைக்குமா?

பதில்: எல்லா கருத்தடை மருந்துகளும் ஏதோ ஒரு வகையில் செக்ஸ் வாழ்க்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்த தான் செய்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆணுறை கூட சில சமயங்களில் ஒருவிதமான தாக்கத்தை தடுக்கிறது. ஐ.யு.டி எனப்படும் காப்பர் காயில்கள் மாதவிடாய் நாட்கள் நீட்டிப்பு அல்லது உடலுறவில் ஈடுபட ஏற்படும் ஆர்வத்தை குறைக்கிறது. கருத்தடை மாத்திரைகள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சிலர் பெண்ணுறுப்பில் வைத்து பயன்படுத்தும் Mirena coil (ஐ.யு.டி) மாதவிடாய் சுழற்சியின் மத்திய காலத்தில் ஏற்படும் கலவி உணர்வுகளை குறைக்கிறது. மேலும், சில வகை கருத்தடை முறைகள் உடல் ரீதியான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. உதாரணமாக உடல் எடை அதிகரிப்பு, முகப்பருக்கள், மூட் ஸ்விங்ஸ் மற்றும் உடலுறவில் ஈடுபடும் தாக்கத்தை, ஆர்வத்தை குறைத்தல்.

கேள்வி #4: சராசரியான ஆண்குறி அளவு என? ஆண்குறி அளவினால் தாக்கத்தை மாற்றம் ஏற்படுமா?

பதில்: தேசிய சுகாதார அறிவியல் அமைப்பின் தகவலின் படி, விறைப்பு நிலையில் ஐந்தில் இருந்து ஏழு அங்குலம் வரையிலும். இயல்பான நிலையில் 3 முதல் 3.5 அங்குலம் வரையிலானது சராசரி அளவு என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆண்குறி அளவினால் உடலுறவில் தாக்கத்தில் ஏற்படும் என்று கூற இயலாது. பெண்ணுறுப்பில் சென்சிடிவான பகுதியான பெண்குறியின் நுழைவாயில் இருந்து உள்ளே இரண்டு அங்குலம் வரை தான் இருக்கிறது. எனவே, அந்த இரண்டு அங்குலத்தை தாண்டி ஆண்குறி எத்தனை தூரம் சென்றாலும் எந்த உணர்ச்சியும் அளிக்காது. ஐம்பதாயிரம் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்ட ஒரு ஆன்லைன் சர்வேவில், 85% ஆண்கள் தங்கள் ஆண்குறி அளவின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என அறியப்பட்டது. மேலும், 45% பெண்கள் துணையின் ஆண்குறி அளவு குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. உண்மையில் பெண்கள் துணையின் பர்சனாலிட்டி மற்றும் அழகியல் பழக்கங்கள் குறித்து தன் அதிக கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பு: மிக சிறிய ஆண்குறியை (மைக்ரோ பெனிஸ் – விறைப்பின் போதிலும் மூன்று அங்குலத்திற்கு குறைவான அளவில் இருப்பது) என ஒரு வகை இருக்கிறது. இத்தகைய வகையை சார்ந்த ஆண்கள் உகந்த மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கேள்வி #5: சாதாரணமாக எத்தனை நேரம் உடலுறவு நீடிக்க வேண்டும்?

பதில்: ஐரோப்பியாவை சேர்ந்த தம்பதிகள் சராசரியாக 19.5 நிமிடங்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என ஒரு சர்வே கூறுகிறது. ஐரோப்பியர்கள் ஃபோர்ப்ளேவில் மட்டும் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மற்றபடி பொதுவாக 7நிமிடங்களில் இருந்து 13 நிமிடங்கள் வரை என்பது போதுமான இன்பம் அடைவதற்கு ஏற்ற நேரமாக காணப்படுகிறது. இத்தகவல் ஜேர்னல் ஆப் செக்ஸுவல் மெடிஷன் என்ற ஆய்வுப் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது.

கேள்வி #6: ஒருவேளை எனக்கு செக்ஸில் ஈடுபட விருப்பம் இல்லை என்பது, எங்கள் உறவு மோசமாகி வருகிறது என்பதன் அறிகுறியா?

பதில்: ஒருவேளை பொதுவாகவே உங்களுக்கு இச்சை எண்ணங்கள் தோன்றுவதில்லை என்றால் உங்கள் உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை நீங்கள் சோர்வாக இருக்கலாம், மன அழுத்தம் கொண்டிருக்கலாம். வேலை அலைச்சல், டார்கெட் போன்றவை உங்களை வேறுவித எண்ணங்களில் இருந்து ஒதுக்கி வைத்திருக்கலாம். இப்படியான விஷயங்களில் இருந்து வெளிவர உடலுறவில் ஈடுபடுவது ஒரு சிறந்த நிவாரணம் என்ற கூறலாம். ஆம்! உடலுறவில் ஈடுபடுவதால் இயற்கையாக மன அழுத்தம் குறைகிறது. மேலும், இது நல்ல உறக்கம் அளிப்பது மட்டுமின்றி உடலில் கலோரிகள் குறையவும் உதவுகிறது. ஆனால், நீங்கள் உங்கள் துணையை செக்ஸியாக உணரவில்லை என்றால், அந்த காரணத்தால் உங்கள் மனதில் இச்சை / களவு உணர்வுகள் எழுவதில்லை என்றால்.. இதற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து தான் ஒரு தீர்வு காண வேண்டும்.

கேள்வி #7: என் துணையிடம் கலவியில் எனக்கு எது பிடிக்கும் என அப்படி கூறுவது?

பதில்: பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு இதுதான். எங்கே, தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறினால் கணவர் தன்னை தவறா எடுத்துக் கொள்வாரோ என்று கருதுகிறார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் தங்கள் துணை அவர்களாக விருப்பத்தை கூறினால் அதை பாசிட்டிவாக தான் எடுத்துக் கொள்கிறார்கள். நேரடியாக கூற தயக்கம் இருந்தால், கனவில் இப்படியான காட்சிகள் வந்தன, தோழி இப்படி கூறினாள், அந்த படத்தில் இப்படியாக அவர்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என சூசகமாக துணையுடம் உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்.

கேள்வி #8: என் துணையை விட நான் அதிகமாக செக்ஸில் ஈடுபட விரும்புவது தவறா?

பதில்: இது பெரும்பாலான தம்பதிகள் மத்தியில் இருக்கும் ஒரு செக்ஸுவல் பிரச்சனை. ஒவ்வொருவருக்கும் அவரது ஆசை, விருப்பம், வேலை, மன சோர்வு, உடல் சோர்வு சார்ந்து செக்ஸ் மீதான ஆர்வம் கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கும். இப்படியான தருணத்தில் தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்டு அந்நாட்களில் கலவியில் ஈடுபடுவதை வழக்கமாக கொள்ளலாம். இதனால், இருவரின் ஆசைகளும் நிறைவேறும்.

கேள்வி #9: கர்ப்பமாக இருக்கும் போது செக்ஸில் ஈடுபடலாமா? பதில்: கருத்தரித்த பிறகும் கூட குறிப்பிட்ட காலம் வரை உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், இது அந்தந்த பெண்ணை பொறுத்திருக்கிறது. மேலும், வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை சார்ந்து இது வேறுபடும். எனவே, அனைவருக்கும் குறிப்பிட்ட காலம் வரை என பொதுவாக கூற இயலாது. கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், பெண்கள் அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைகிறார்கள். அதற்கு இந்த காலத்தில் அவர்கள் இடுப்பு பகுதியில் அதிகமாக செல்லும் இரத்த ஓட்டமும் ஒரு காரணம் என அறியப்படுகிறது. எதுவாக இருப்பினும், உங்கள் மருத்துவரிடம் கேட்டு, தெளிவான அறிவுரை பெற்று தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவதே சிறந்தது.

கேள்வி #10: எல்லா நிலைகளிலும் உடலுறவில் ஈடுபட வேண்டுமா?

பதில்: ஒரே மாதிரி உடலுறவில் ஈடுபடுவதால் செக்ஸில் ஆர்வம் குறைதல், சோர்வு ஏற்படலாம். ஆகையால், வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவது தவறில்லை. மிஷனரி, கேர்ள் ஆன் டாப், டாகி, சிசர்ஸ் மற்றும் ஸ்டேண்டிங் அப் போன்றவை பொதுவாக அனைவரும் ஈடுபடும் நிலைகள். இதுப்போக சிலர் வெவேறு இடங்களில், வெவ்வேறு நிலைகளில் ஈடுபடவும் விரும்புவது உண்டு. இதெல்லாம் சகஜம்.

கேள்வி #11: வேக்ஸிங் செய்வது என்னில் அல்லது அவரிடம் செக்ஸில் தாக்கம் ஏற்படுத்துமா?

பதில்: உண்மையில் இப்போது வேக்ஸிங் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபடுவது துணையின் தைரியத்தை அதிகரிக்க தான் செய்கிறது. ஆண்கள் துணை வேக்ஸிங் செய்திருந்தால் அதிகம் விரும்ப தான் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களிடம் இன்பம் அதிகரிக்கிறது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 2500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கெடுத்துக் கொண்ட சர்வே ஒன்றில், பிறப்புறுப்பு பகுதியில் முடிகளை நீக்கிய பிறகு செக்ஸில் ஈடுபடும் போது, படுக்கை அறையில் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படுவதாக கூறி இருக்கிறார்கள்.

கேள்வி #12: பெண்கள் செக்ஸில் அதிக ஆர்வம் கொள்ளும் வயது எது? பதில்: பெண்களிடம் 27வது வயதில் இருந்து செக்ஸ் மீதான் நாட்டம் / ஆர்வம் அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் 45 – 52 வயதினில் அவர்கள் செக்ஸ் ஆர்வம் அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் அறியப்பட்டுள்ளன. இதற்கு பிறகு அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் தாக்கம் காரணமாக அல்லது எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாக செக்ஸ் தாக்கத்தில் குறைவு காணப்படுகிறது.

கேள்வி #13: படுக்கையறையில் செக்ஸ் டாய்கள் பயன்படுத்துவது சரியா? பதில்: உயர்-தர மற்றும் உயர் சக்தி கொண்டு சிலவகை செக்ஸ் டாய்கள் குறைந்த நேரத்தில் அதிக இன்பத்தை வழங்குவதை இருக்கின்றன. ஆனால், சில நாடுகளில் செக்ஸ் டாய்கள் முற்றிலுமாகவும், சில பகுதிகளில் ஒருசில வகையிலான செக்ஸ் டாய்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலும் செக்ஸ் டாய்கள் என்பது பெண்கள் எளிதாக உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் கருவிகளாக இருக்கின்றன. ஆனால், இதை மென்மையாக பயனபடுத்த வேண்டும்.

கேள்வி #14: ஸ்ட்ரெயிட் செக்ஸில் ஈடுபடும் நான் வேறு பெண்கள் மீது ஆசைக் கொள்வது போன்றே எண்ணம் ஏற்படுவது தவறா? பதில்: கற்பனையாக இமேஜின் செய்து அதன் மூலம் இன்பம் கொள்வதோ, நேரடியாக அவரை அணுகி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதோ கூட தவறில்லை. முதலாவது யாராலும் அறியவும் முடியாது, தடுக்கவும் முடியாது. இரண்டாவதை சட்டமே சரி என்று தான் கூறுகிறது. பெண்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், 37% பெண்கள் தங்களுக்கு பிற பெண்களை காணும் போது செக்ஸுவல் எண்ணங்கள் ஏற்படுவதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர். எனவே, இது இயற்கையானது தான்.

கேள்வி #15: குழந்தை பெற்ற பிறகு, எப்போது மீண்டும் செக்ஸில் ஈடுபடலாம்? தைரியமாக ஈடுபடுவது எப்படி?
பதில்: ஒருவேளை உங்கள் பிரசவம் சுகப்பிரசவம் மற்றும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை எனில் நீங்கள் ஆறில் இருந்து எட்டு வாரங்கள் கழித்து சாதாரணமாக உடலுறவில் ஈடுபடலாம். ஒருவேளை பிரசவத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், மருத்துவர்கள் உங்கள் ஆரோக்கியம் குறித்து ஏதேனும் தகவல் கூறி இருந்தார். அவர்கள் கூறும் காலம் வரை உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியது கட்டாயம். ஒருவேளை நீங்கள் சிறிது இலகுவாக உணர விரும்பினால், உங்கள் துணையிடம் கூறி குளிக்கும் போது மசாஜ் செய்துவிட கூறலாம். அல்லது ஃபோர் ப்ளேவில் மட்டும் ஈடுபடலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் அவசரப்பட்டு விட வேண்டாம்.