Home உறவு-காதல் ஆபிஸில் நடக்கும் கள்ளகாதல் ஒரு உண்மை சம்பவம் இது

ஆபிஸில் நடக்கும் கள்ளகாதல் ஒரு உண்மை சம்பவம் இது

585

காதல்உறவுகள்:காதலில் ஏமாற்றுபவர்கள் நம்மை சுற்றியே பலர் இருக்கலாம். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நாம் சிலரை கருதுவோம். அந்த பூனை வீட்டில் பால் குடித்துவிட்டு, வெளியே வந்த அசால்ட்டாக பீர் அடித்துக் கொண்டிருக்கும். அப்படியான பூனைகள் நம்மை சுற்றி நிச்சயம் ஒன்றிரண்டாவது இருக்கும்.

ஐ.டி. வாழ்க்கை என்பது மிக ஜாலியானது, அவர்கள் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஜமாய்க்கிறார்கள் என்று நாம் வெளியில் இருந்து அவர்களை கண்டு பொறாமை பட்டு கூறலாம். ஆனால், அவர்களுக்கும் டார்கெட், டெட்லைன், மன அழுத்தம், டென்ஷன் என எல்லாவுமே இருக்கிறது.

அதே மாதிரி, அங்கேயும் பல காதல் கதைகள் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கும். அந்த காதலுக்கு நடுவே இடை புகுந்த கள்ளத்தனம் காரணமாக.. அவர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ஆன்லைனில் பகிரப்பட்டிருந்த ஐந்து பேரின் கதைகளை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்…

ஹோட்டலில்…
என் டீம் லீடரை கண்ட முதல் நாளே காதலில் விழுந்தேன். ஆனால், அதற்கு பிறகு தான் அவர் திருமணமானவர் என்பதை அறிந்துக் கொண்டேன். ஆகையால், என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். அதே சமயத்தில், அவரும் என் மீது ஈர்ப்புக் கொண்டார். சில சமயம் என்னிடம் ஃப்ளர்ட் செய்தும் இருக்கிறார்.

அவ்வப்போது தன் திருமணம் வாழ்க்கை குறித்து என்னிடம் பகிர்ந்துக் கொள்வார். அதில் அவர் பெரும்பாலும் கசப்பான நிகழ்வுகள், சம்பவங்கள் குறித்து மட்டுமே பதிவு செய்திருந்தார். ஆகையால், ஒரு கட்டத்தில் நானும், அவரும் டின்னெர் டேட் செல்ல திட்டமிட்டோம்.

முதல் டேட்டிலேயே நாங்கள் பிடிப்பட்டோம். நாங்கள் சென்றிருந்த அதே ஹோட்டலுக்கு எங்கள் உடன் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும், அவரது மனைவியின் சகோதரியும் அன்று வந்திருந்தனர். அதற்கு மேல் நடந்ததை பற்றி என்னவென்று சொல்ல. அதன் பிறகு, நாங்கள் ஆபீஸ் விஷயங்களை தவிர வேறு எது பற்றியும் பேசிக் கொண்டதே இல்லை.

அவமானம்… நானும், அவனும் ஐந்தாறு மாதங்களாக டேட் செய்து வந்தோம். ஒரு கட்டத்தில் அவன், நான் என் பாஸிற்கு அதிகம் ஃபேவராக இருக்கிறேன் என்று கூறி சண்டையிட்ட காரணத்தால் ப்ரேக்-அப் செய்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் ஒரே தளத்தில், ஒரே அணியில் பணிபுரிந்து வந்தோம். என் தோழர்கள் அவன் அவ்வளவு வர்த் இல்லை, மோசமானவன் என்று கூறிய போதே நான் காதுக் கொடுத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், காதலுக்கு கண்ணில்லை என்பது போல நான் யார் தடுத்தும் கேட்கவில்லை. எங்கள் இருவரின் வேலையும் பாதிக்கப்பட்டது. வேலையை செய்வதா, பர்சனல் விஷயங்களை குறித்து ஆலோசிப்பதா என்ற குழப்பம் இருவருக்குள்ளும். ஒரு கட்டத்தில் அவன் வேறு அணிக்கு மாற்றம் செய்யப்பட்டான். அதன் பிறகு தான் நான் என் வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்த முடிந்தது. அதுனால் வரை யாருக்கு எப்போது எங்கள் மீது சந்தேகம் வரும், அவன் வேண்டுமென்றே எதையாவது லீக் செய்து விடுவானா என்ற அச்சத்திலேயே அணியில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்.

முன்னாள் காதலன்… ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் மத்தியில் இருக்கும் மியுச்சுவல் நண்பர்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அவள் என் எக்ஸ் காதலிக்கு அப்படியே நேர்மாறாக இருந்தாள். நாங்கள் டேட் செய்ய ஆரம்பித்தோம். எல்லாமே ஸ்மூத்தாக தான் சென்றுக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு அணியில் வேலை செய்துக் கொண்டிருந்தோம். பலமுறை டேட் சென்றுள்ளோம். பல முறை முத்த பரிமாற்றங்களும் நடந்துள்ளன. ஆனால், அவளுக்கு ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைவதில் விருப்பம் இல்லை. நான்கு மாதங்களுக்கு பிறகு தான் அறிந்தேன், அவள் தனது எக்ஸ் காதலனை வெறுப்பேற்ற வேண்டும், அவனை பொறாமைப்பட வைக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் பழகி வந்தால் என்பது. அவனும், அவளுடன் அவளது அணியில் வேலை செய்து வந்தவள் தான்.

அவனும், நானும்… நான் காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த ஃபிரஷ்ஷர். அவனும் அதே கம்பெனியில் சேர்ந்தான், ஆனால் முன்னனுபவம் கொண்டிருந்தவன். அது ஒரு ஆன்லைன் நிறுவனம். எங்கள் வேலை கொஞ்சம் கூலானது. தினமும் புதியாற்றை பல கற்றுக் கொள்ள முடிந்தது. எனக்கு அந்த நிறுவனத்தில் கிடைத்த முதல் தோழன் அவன் தான். முதலில் நட்பாக இருந்தது. அப்படியே டேட் செய்ய ஆரம்பித்தோம். எங்கள் டேட்டிங் காதலாக மலர்ந்தது. ஆயினும், அது எங்கள் அலுவலக பணியை கெடுக்காத மாதிரி பார்த்துக் கொண்டோம். நாங்கள் உறவில் இணைந்து ஆறு மாதம் இருக்கும். என்னுடன் ப்ரேக்-அப் செய்து கொண்டான். அப்போது தான் அவன் எங்கள் பாஸ் உடன் பழகி வருவதை அறிந்தேன். ஒருமுறை அவர்கள் இருவரும் நைட் டின்னர் ஒன்றாக செல்வதை கண்டேன். ஆயினும், நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து வேலையை ரிசைன் செய்துவிட்டே, என் பே-செக் வாங்கிக் கொண்டு கிளம்பிட்டேன். நான் வேலையை விட்டு வந்த பிறகு தான், அவன் என் பாஸ் மட்டுமின்றி, வேறு மூன்று பெண்களுடனும் டேட் செய்து வந்து மாட்டிக் கொண்டது குறித்து அறிய வந்தேன்.

டெக்னாலஜி! என் எக்ஸ் காதலன் என்னுடன் பழகி கொண்டு வந்த அதே தருணத்தில், எங்கள் பாஸ் உடனும் டேட் செய்து வந்தான். சில மாதங்களிலேயே அவன் அவளுடன் டேட் செய்வதை குறித்து சந்தேகம் அடைந்தேன். ஒருமுறை வார இறுதியில் அவர்கள் இருவரும் வெளியே சென்று ஊர் சுற்றிக் கொண்டிருந்ததை நானே கண்டேன். ஆனால், அதுக்குறித்து நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. யாரிடமும் அதுப்பற்றி கூறவும் இல்லை. ஒரு நாள் அவனிடம் சென்று, நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறினேன். அவனே முன்வந்து எனக்காக வேறு வேலையை தேட ஆரம்பித்தான்.

நான் வேலையை விட்டு செல்லும் அந்த கடைசி நாளில், ஃபேர்வெல் மெயில் ஒன்று அனுப்ப நினைத்தேன். ஆனால், அதை அவனது ஈமெயில் ஹேக் செய்து அதில் இருந்து அனுப்பினேன். அந்த மெயிலுடன், என் எக்ஸ் காதலன் பாஸ் உடனும் கொஞ்சி, குலாவி பேசிக் கொண்ட சாட் ஹிஸ்டரி முழுவதையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அட்டாச் செய்து அனுப்பினேன். என்னை ஏமாற்றிய அவர்கள் இருவருக்கும் இதை விட ஒரு சிறந்த தண்டனை வழங்க முடியும் என்று நான் கருதவில்லை.