Home சூடான செய்திகள் புத்திசாலி பெண்கள் “அதுக்கு” சரிப்பட்டு வரமாட்டாங்களாம்!

புத்திசாலி பெண்கள் “அதுக்கு” சரிப்பட்டு வரமாட்டாங்களாம்!

48

புத்திசாலிப் பெண்களை, டேட்டிங்கிற்கோ, திருமணம் செய்வதற்கோ பெரும்பாலான ஆண்கள் தயங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான ஆய்வை, அமெரிக்காவின் கலிபோர்னியா லுத்ரன் பல்கலைகழகம், டெக்சாஸ் பல்கலைகழகம் மற்றும் பப்பல்லோ பல்கலைகழக உளவியல் ்றிஞர்கள் சேர்ந்து மேற்கொண்டனர். அதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெரும்பாலான புத்திசாலி பெண்கள், அணுகுவதற்கு அவ்வளவு எளிதாக இருக்கமாட்டார்கள், பிறரை கவர்வதில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். ஆண்கள், அந்த புத்திசாலி பெண்களுடன் தங்களுடைய சுயவிபர தகவல்களை பகிர்ந்துகொள்ள தயக்கம் காட்டுவர். டேட்டிங்கிற்கோ, திருமணம் செய்யவோ புத்திசாலி பெண்களை, ஆண்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பதில்லை.

இதுதொடர்பாக, உளவியல் அறினுர் டாக்டர் ேஹமந்த் மிட்டல் கூறியதாவது, புத்திசாலி பெண்களை ஒதுக்குவதில் கறுப்பின ஆண்கள் மற்றும் வெள்ளை ஆண்கள் என்று பாகுபாடு எதுவுமில்லை. புத்திசாலி பெண்கள், ஆண்களிடம் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பார்கள்.

எதை சொன்னாலும் அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாது, தன் கூற்றே சரியானது என்று வாதிடுவர். புத்திசாலி பெண்கள் பல விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் என்றாலும், அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதையே விரும்புவர். இது கணவன் – மனைவி இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

புத்திசாலித்தனம் என்பது அவர்கள் படித்தவர்கள் என்பதை கொண்டு கணக்கிடவில்லை. அவர்கள் மற்றவர்களின் கேள்விகளை எதிர்கொள்ளும்விதம், ஒருங்கிணைத்தல், திட்டமிடல், சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளுதல் இத்தகைய பண்புகளை கொண்டே, புத்திசாலித்தனம் என்பது கணக்கிடப்படுகிறது.

புத்திசாலி பெண்கள், எளிதில் எல்லோரிடமும் ஒத்துப்போகும் தன்மை கொண்டவர்களாக இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் தன்னிச்சையாகவே இயங்க வேண்டும் மற்றும் இருக்கவேண்டும் என்பதை விரும்புவர்.

இதன்காரணமாக, பெரும்பாலான ஆண்கள், டேட்டிங் மற்றும் திருமணத்திற்கு புத்திசாலி பெண்களை அணுகுவதில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது