Home உறவு-காதல் டேட்டிங்கில் ஆண்கள் எதிர்பார்ப்பு என்ன?

டேட்டிங்கில் ஆண்கள் எதிர்பார்ப்பு என்ன?

25

அழகு, பார்க்கும் வேலை, குடும்ப சூழல், கல்வித்தகுதி, நண்பர்கள், குடும்பம் சார்ந்த சமூக சிந்தனை ஆகிய காரணிகள் ஒவ்வொருவருக்கும் மற்றொருவருக்கும் வேறுபடலாம்.

பெண்கள் தங்களது படிப்பு மற்றும் கல்வித்தகுதியைவிட, அழகிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்றே சொல்லவேண்டும். ஆனால் ஆண்களின் பார்வையோ, அவள் புத்திசாலியாக இல்லையென்றாலும் பரவாயில்லை அவள் உடலளவிலும், உளவியல் ரீதியாகவும் சிறந்தவளாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.

இந்திய ஆண்களைப் பொருத்த அளவில், புத்திசாலி பெண்களை டேட்டிங்கிற்கு கூட்டிச்சென்றாலோ அல்லது திருமணம் செய்துகொண்டாலோ, தங்களது வாழ்க்கைப்பயணம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்போது, கணவர் மட்டுமே அதற்கு தீர்வு காண கஷ்டப்படாமல், பெண்களும் நன்றாக யோசித்து இருவரும் சேர்ந்து ஆலோசித்து நல்லதொரு தீர்வினை மிக விரைவாக எடுக்கும் வாய்ப்பு உண்டாகும்.

குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இருவரின் பங்களிப்பும் இருப்பதால், அவ்வப்போது பூகம்பம் ஏற்பட்டாலும் பெரும்பாலும் அமைதியான சூழ்நிலையே நிலவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.