Home ஜல்சா ஹோலி கொண்டாட்டம் பூனம் பாண்டேயின் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஹோலி கொண்டாட்டம் பூனம் பாண்டேயின் வெளியான அதிர்ச்சி வீடியோ

35

பூனம் பாண்டே, என்று சொன்னாலே இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தவர்தான் அப்போது மாடலாக இருந்த பூனம் பாண்டே. தொடர்ந்து அவருடைய பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.

‘ஹோலி’ பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பாகவே என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று மாலை அவருடைய யு டியுபில் பிகினி உடையில் 55 வினாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் மேல் தூவப்பட்டிருந்த வண்ணப் பொடிகள் ஒவ்வொரு கலராய் விலகிச் செல்ல கடைசியில் வெள்ளை நிற டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து நிற்கும் வீடியோ இப்போது பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு ஆபாசப் புகைப்படங்களும், ஆபாச வீடியோக்களும் பரவுவது அதிகரித்து வருகிறது. இளைய சமுதாயம் கையில் எப்போதும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் இப்படிப்பட்ட வீடியோக்களை உடனுக்குடன் பார்த்துவிட முடிகிறது. இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா என்று கேட்டால் ‘தனி மனித சுதந்திரம்’ என கூச்சலிட ஆரம்பித்துவிடுகிறார்கள்.