Home ஆரோக்கியம் பெண்களின் மாதவிடாய் வலியை போக்கும் எளிய வழிகள்

பெண்களின் மாதவிடாய் வலியை போக்கும் எளிய வழிகள்

106

மாதந்தோறும் பெண்கள் அனைவரும் தீராத மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்படுவர். பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் போது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுகின்றது.

மாதவிடாயின் போது பெண்களின் கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமாகிவிடுகிறது. இதனால் வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தலைவலி, மன உளைச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் ஏற்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கும் சில எளிய வழிகளை பார்க்கலாம்.

வெந்தய நீர்:

வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் மாதவிடாயின் போது இறுக்கமடையும் தசைகள் தளர்வாகி வலிகள் குறையும்.

இஞ்சி கருமிளகு தேநீர்

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு இஞ்சியை தட்டிப்போட்டு, மிளகு பொடியை கலந்து வடிகட்டி குடித்தால் வலி குறைந்து உடல் புத்துணர்வாக இருக்கும்.

ஒத்தடம்

சுடு நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி அடி வயிற்று பகுதியில் மெதுவாக ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

சீரகம்

சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், மாதவிடாயில் வயிற்றில் ஏற்படும் பிரச்னைகள் குணமாகும்.

சீமை சாமந்தி தேநீர்

வலி நிவாரணியாக செயல்படும் மூலிகையான சீமை சாமந்தி தேநீராக்கி குடித்தால் வயிற்று வலி குறையும்.