Home ஆரோக்கியம் பொது மருத்துவம் பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும்

11

பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆதலால் மனக்கவலைகளை உருவாக்கும் சிந்தனைகள் உதிக்க ஒருபோதும் இடம் கொடுத்துவிடக்கூடாது. பிரச்சினைகள் துளிர்விட தொடங்கும்போதே மன அழுத்தம் தோன்றுவதற்கு இடம் கொடுக்காதபடி மனதை திசை திருப்பி விட வேண்டும்.

* செல்லப்பிராணிகளுடன் ஓய்வு நேரத்தை செல விடுவது மனதை இலகுவாக்கும். நாய்களுடன் நடைப்பயிற்சி செய்வது, பூனையுடன் விளையாடுவது, வீட்டில் வளர்க்கும் பறவைகளுடன் உறவாடுவது, அதன் கூண்டுகளை பராமரிப்பது போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

* உணவில் போதிய அளவில் கால்சியம் கலந்திருப்பதை உறுதிப் படுத்த வேண்டும். அவை எலும்புகளை வலுவாக்கும் என்பதால் கால்சியம் சத்து நிறைந்த உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும்.

* தேக பொலிவுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மகிழ்ச்சியான மன நிலையில் இருந்தால்தான் தேகம் ஆரோக்கியமாக இருக்கும்.

* ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அவை பிற்காலத்தில் பெரிய அளவில் உடல்நல கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்க வழி கோலும்.

* எத்தகைய வேலைப்பளு இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதற்கு சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அன்றாடம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது உடலை வலுவாக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். எலும்புகள், மூட்டு இணைப்புகளை வலுப்படுத்தும்.

* லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நடப்பதும், மாடிப்படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதும் நல்ல உடற்பயிற்சியாக அமையும்.

* அவ்வப்போது மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் யோகா செய்வதும் உடல் நலத்திற்கு நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* உடல் எடை அதிகரிப்பதே பெரும்பாலான வியாதிகள் தோன்றுவதற்கு காரணமாகிவிடுகிறது. அதனால் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* தூங்குவதற்கான நேரத்தை வரையறை செய்து அந்த நேரத்திற்குள் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

* எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். கசப்பான சம்பவங்களை நினைக்காமல், சந்தோஷமான மனநிலையோடு எப்போதும் உலா வர வேண்டும்.