Home ஜல்சா பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடிக்க வந்துவிட்டது ‘‘‘WiFi கேமரா’’!

பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடிக்க வந்துவிட்டது ‘‘‘WiFi கேமரா’’!

24

சமூகத்தில் பெண்கள் ஒரு போதை பொருளாக பார்க்கப்படுகிறார்கள். அந்த காலத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர். பெண்ணுரிமைக்காக பெரியார், பாரதியார் போன்ற பெருந்தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

தற்போது நவீன காலத்தில் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கு பெற்று அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

ஆனால் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பது, ஆபாசமாக சித்தரிப்பது போன்ற செயல்களில் சில விஷமிகள் ஈடுட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெண்கள் செல்லும், ஷாப்பிங் மால்கள், ஜவுளி கடைகள், பாத்ரூம்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படங்கள், வீடியோக்கள் எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பைவிட பாதிப்பு தான் அதிகம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது தற்போது, விற்பனைக்கு வந்துள்ள WiFi கேமரா இணைந்துள்ளது.

இந்த WiFi கேமரா பல்பு வடிவில் இருக்கிறது. இதை எங்கு வேண்டுமானாலும் பொருத்தலாம். நீங்கள் பார்க்கும் போது அறையில் பல்பு எரிவது போன்று தெரியும். ஆனால் அதன் நடுவில் இருக்கும் வைபை கேமரா உங்களது நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருக்கும்.

இதன் மூலம் உங்களது அந்தரங்கங்கள் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்படும். எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், அறிமுகம் இல்லாத இடங்களில் தங்க நேர்ந்தாலோ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.