Home ஜல்சா சர்க்கரை பெண் சொல்லும் செக்ஸ் ?

சர்க்கரை பெண் சொல்லும் செக்ஸ் ?

62

செக்ஸ் என்பது உடலுறவு என்பதை தாண்டி, உடல் ஆரோக்கியம், தாம்பத்திய ஆரோக்கியம் ரீதியாக அனைவரும் கற்க வேண்டிய ஒன்றாகும். இதை தான் இந்த 20 வயது இளம் இன்ஸ்டா சென்சேஷனல் கில்லரன்டஸ்வீத்தாங் செய்துக் கொண்டிருக்கிறார். சரி அவர் அப்படி என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த 20 வயதான இளம் பெண் எய்லீன் கெல்லி.இவரை எய்லீன் கெல்லி என்பதை விட கில்லரன்டஸ்வீத்தாங் என்றால் தான் பலருக்கும் தெரியும். இவரைப்பற்றி இம்மாதம் வெளியான ஒரு பிரதியில்ஒரு பதிவு நியூயோர்க் போஸ்ட்டில் வெளியாகியிருந்தது. அதில், இவரை பற்றி சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகியிருந்தது. இவரை ஒரு சர்க்கரை பெண் என்றும், வயதானவர்களை ஈர்ப்பவர் என்றும் குறிப்பிட்டு எழுதியிருந்தனர்.

மேலும் இந்த பதிவை தோழிகள் மூலம் கண்டறிந்த எய்லீன் கெல்லி மிகவும் அதிர்ந்து போனார். இவர் தனது சொந்த பொளக்கில் செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதின் வயது பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருபவர் எய்லீன் கெல்லி. இவரது இன்ஸ்டா பதிவுகளை கண்டு, நியூயோர்க் போஸ்ட் இவரை பற்றி பதிவு வெளியிட்டுவிட்டது.
இதை படித்து மிகவும் மனம் உடைந்து போனேன் ‍கெல்லி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் எய்லீன் கெல்லியின் இன்ஸ்டா பதிவுகள் மன கிளர்ச்சி தூண்டும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவரை 396 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதில் பல பிரபலங்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எய்லீன் பாடசாலையில் படித்து வரும் போதிலிருந்தே செக்ஸ் கல்வியாளராக இருந்து வருகிறார். இவரது ‍பொளக் மூலமாக பல இளம் பெண்கள் வெளியே கேட்க தயங்கும் கேள்விகளை கேட்டு பதில் பெறுகின்றனர். இவரது பிளாக்கில் செக்ஸ், உறவுகள், பூப்படைதல் பற்றி விளக்கங்கள் கூறப்படுகின்றனர்.

எய்லீன் பூப்படைந்து முதல் முறை மாதவிடாய் அடைந்த போது தனிமையில் இருந்துள்ளார் . இவருக்கு தந்தை மட்டும் தான் தாய் இல்லை. இதனால், யாரிடம் சந்தேகம் கேட்பது, என்ன செய்வது போன்ற பல கேள்விகள் எழ. கடைசியில், இது சார்ந்த கேள்விகளுக்கு தானே பதிலளிக்க துவங்கிவிட்டார் எய்லீன்.

இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டிருக்கும் பல படங்கள் கவர்ச்சியானவை மற்றும் அரைநிர்வாண படங்கள் தான். ஏன் நீங்கள் இப்படிப்பட்ட படங்கள் பதிவு செய்கிறீர்கள் என கேட்கும் போது அதற்கு எய்லீன் தான் தனது உடலை பொசிட்டிவாக காண்கிறேன் என பதில் அளிக்கிறார்.

நான் என் வாழ்க்கையை என் வழியில் வாழ்கிறேன். நான் மற்றவர்களுக்கு உதவி தான் வருகிறேனே தவிர. தவறான வழியில் வழிநடத்தவில்லை. இது போன்றவை எனக்கு புதியதல்ல. இதை பற்றி நான் கவலை கொள்ள போவதுமல்ல என்கிறார் எய்லீன் கெல்லி.