Home ஆரோக்கியம் பெண்களை உடலுறவுகளுக்கு தூண்டும் தடுப்புமருந்து அவதானம் பெண்களே

பெண்களை உடலுறவுகளுக்கு தூண்டும் தடுப்புமருந்து அவதானம் பெண்களே

184

பொது மருத்துவம்:HPV (Human Papillomavirus) ஆனது பெண்களில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடியது. இது பெண்களில் ஏற்படக்கூடிய 4வது கொடூர புற்றுநோயாகப் பார்க்கப்படுகிறது.

இப் புற்றுநோயின் காரணமாக கடந்த ஆண்டில் இல் மட்டும் 266,000 பெண்கள் இறக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இது பொதுவாக பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படுகிறது.

மேலும், இவ் HPV வைரஸானது தலை, கழுத்து மற்றும் மல வாய், பிறப்புறுப்புக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

இதுபோன்ற நோய் நிலைமைகளைத் தடுப்பதற்கென 9 தொடக்கம் 14 வயதுக்கிடைப்பட்ட பெண்கள் HPV தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைசெய்யப்படுகின்றனர்.

ஆனாலும் இதன் பயன்பாடு பெற்றோர்கள் மத்தியில் பீதியைத் தோற்றுவித்திருந்தது. காரணம், இது இளம் பெண்களில் ஆபத்தான பாலியல் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக அமையலாம் என்பதாலாகும்.

அதாவது, பாதுகாப்பற்ற உடலுறவு, பல நபர்களுடனான பாலியல் தொடர்பு மற்றும் இளவயது பாலியல் உறவுகளை இது தூண்டலாம் என கருதப்பட்டிருந்தது.

ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று இத் தடுப்புமருந்தானது பெண்களில் இதுபோன்ற ஆபத்தான பாலியல் விபகாரங்களைத் தூண்டுவதில்லை என உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது