Home ஜல்சா இந்த பிரபலங்களுக்கு நிர்வாணமாகத் தூங்குவதுதான் பிடிக்குமாம்..

இந்த பிரபலங்களுக்கு நிர்வாணமாகத் தூங்குவதுதான் பிடிக்குமாம்..

25

captureநிர்வாணமாக உறங்குவது தான் மிக ஆரோக்கியமான முறை என்றாலும்கூட, பலரும் அதுபற்றி வெளியில் பேசத் தயங்குவதுண்டு.

இதை யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்து ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, ஏளனமாகப் பார்க்கும் மனோபாவமே நம் மக்களிடம் உள்ள நிலையில், சில பிரபலங்கள் தங்களுக்கு நிர்வாணமாகத் தான் தூங்கப் பிடிக்குமென வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள்.

அப்படி யாருக்கெல்லாம் நிர்வாணமாகத் தூங்கப் பிடிக்கும் என்று நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை இவர். பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலும் ஆவார். இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், படுக்கையில் தனக்கு பிறந்த கோலத்தில் உறங்கவே பிடிக்கும் என்று கூறினார்.

ஜான் ஆபிரகாம்

இந்தியாவின் ஹாட் நாயகன் இவர். இந்தியாவில் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உண்டு. இவரும் ஒரு டிவி நிகழ்ச்சியில், நிர்வாணமாக உறங்கவே நான் விரும்புவேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

பத்மா லட்சுமி

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் இவர். இவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிந்தவர். இவர் பிரபல மாடலும் ஆவார். இவரும் தன்னுடைய ஒரு நிகழ்ச்சியில் தான் நிர்வாணமாகத் தூங்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ராக்கி சாவந்த்

இந்தியாவின் பரபரப்பான நடிகை இவர். ஹிந்தி படவுலகில் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சை ஏற்படுத்தி டிரெண்டாவதே தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு டிவி நிகழ்ச்சியின் கேள்வி பதில் சுற்றில், பிறந்த மேனியோடு தூங்குவதே எனக்கு பிடித்த விஷயம் என்று கூறினார்.

பூனம் பாண்டே

இவரைப் பற்றி தெரியாத இளைஞர்களே இந்தியாவில் இருக்க முடியாது என்றே கூறலாம். அவ்வப்போது தான் நிர்வாணமாக ஓடப்புாவதாகக் கூறி, பரபரப்பைக் கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார். டுவிட்டரில் ஒருமுறை, எல்லோரும் பிறந்த மேனியுடன் உறங்கச் செல்லுங்கள். நம்முடைய கனவில் யார் வருவார்கள் என்று யாருக்குத் தெரியுமு் என சர்ச்சையைக் கிளப்பியவர். அதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது, புகைப்படங்களையும் வெளியிட்டு, சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டே இருப்பார்.