Home ஆண்கள் விறைப்பு தன்மை நோய் ஆண்களிளை பெரிதும் பாதிக்கும் பிரச்சனை

விறைப்பு தன்மை நோய் ஆண்களிளை பெரிதும் பாதிக்கும் பிரச்சனை

206

ஆண்மை:ப்ரியாப்பிசம் என்பது என்ன? (What is priapism?)

ப்ரியாப்பிசம் என்பது வழக்கத்திற்கு மாறான ஆண்குறி விறைப்பாகும். பாலியல் தூண்டுதல் எதுவுமே இல்லாமலே விறைப்பு உண்டாகி 4 மணிநேரத்திற்கும் நீடிக்கும். . இதற்கு உடனடியான சிகிச்சை அவசியமாகும். இதற்கு சிகிச்சையளிக்காமல் விட்டால் நிரந்தர விறைப்பின்மையும் ஆண்குறியில் வடுக்களும் ஏற்படலாம்.

முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை வருகிறது, ஆனாலும் பிறந்த குழந்தைகள் உட்பட எந்த வயதினருக்கும் இது வரக்கூடும்.

காரணங்கள் (Causes)
ஆண்குறியின் பஞ்சு போன்ற திசுக்களில் இருந்து வெளியேற முடியாதபடி இரத்தம் தேங்கிவிடுவதால், மீண்டும் இரத்தம் வெளியே பாய முடியாமல் போகிறது. இதுவே நீடித்த ஆண்குறி விறைப்பு எனும் இந்தப் பிரச்சனை வரக் காரணமாகிறது.

ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டம் அல்லது ஆண்குறிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தின் பகுதிகளைப் பாதிக்கும் காரணிகளால் இந்தப் பிரச்சனை தோன்றலாம். ஆகவே, இதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்:

சிக்கில் செல் அனீமியா: ஒரு மரபியல் கோளாறினால் இது உண்டாகிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களின் இரத்த சிவப்பணுக்கள் பிறைநிலா வடிவில் இருக்கும். இரத்தத்தின் பாகுநிலை அதிகரிப்பதால் ஆண்குறியில் இரத்தம் தேங்கிவிடும்.
மருந்துகள்: இரத்தம் உறைதலைத் தடுக்கின்ற மருந்துகள் அல்லது உளவியல் பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் மருந்துகளும் இந்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.
பிற காரணங்கள்:
இனப்பெருக்க உறுப்புப் பகுதி அல்லது முதுகுத்தண்டில் அடிபடுதல்
கார்பன் மோனாக்சைடு நச்சால் பாதிக்கப்படுதல்
கொக்கேயின், கஞ்சா போன்ற தெரு மருந்துகள்

அறிகுறிகள் (Symptoms)
நீடித்த ஆண்குறி விறைப்பில் பின்வரும் வகைகள் உள்ளன:

குறைந்த இரத்த ஓட்டம் கொண்ட ப்ரியாப்பிசம்: இதில் விறைப்படைந்த பகுதிகளில் இரத்த சிக்கிக்கொள்ளும். பெரும்பாலும் இதற்கு என்ன காரணம் என்று தெரிவதில்லை, இரத்தப் புற்றுநோய், சிக்கில் செல் நோய் அல்லது மலேரியா உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை வரக்கூடும். இதன் அறிகுறிகள்: ஆண்குறியின் தண்டு விறைப்பாக இருக்கும், முனை வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். அத்துடன் வலியும் இருக்கலாம்.

அதிக இரத்த ஓட்டம் கொண்ட ப்ரியாப்பிசம்: இது மிகவும் அரியது. இதில் வலி இருக்காது. ஆண்குறி அல்லது இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் அடிபட்டு ஆண்குறிக்கு இயல்பான இரத்த ஓட்டம் தடைபடுவதால் இது ஏற்படலாம். அறிகுறிகள்: ஆண்குறி முழுவதுமாக விறைப்பாகி இருக்காது, ஆனால் ஆண்குறியின் தண்டு மட்டும் விறைத்திருக்கும்.
நோய் கண்டறிதல் (Diagnosis)
ப்ரியாப்பிசம் என்பது உடனடி மருத்துவக் கவனிப்பும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு பிரச்சனையாகும். அறிகுறிகள் எவ்வளவு காலமாக உள்ளன, ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா, போதைப்பொருள் பயன்படுத்துதல் அல்லது முன்பு ஏதேனும் அடிபட்டுள்ளதா என்பது பற்றியெல்லாம் மருத்துவர் கேட்டறிவார்.

உடல் பரிசோதனைக்குப் பிறகு, ஆண்குறியில் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு என்ன வகையான ப்ரியாப்பிசம் என்பதைத் தீர்மானிப்பதற்காக இரத்தத்திலுள்ள வாயுக்கள் குறித்து பகுப்பாய்வு செய்யப்படும்.

டாப்ளர் அல்ட்ராசோனோகிராபியைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படலாம். ஆண்குறியின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதை மதிப்பிட இச்சோதனை பயன்படுகிறது.

ஏதேனும் மருந்துகளால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்காக சிறுநீர்ப் பரிசோதனை செய்யப் பரிந்துரைக்கப்படலாம்.

சிகிச்சை (Treatment)
வழக்கத்திற்கு மாறான ஆண்குறி விறைப்பைக் குறைக்கும் நோக்கில் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். எதிர்காலத்தில் இயல்பான நிலையில் ஆண்குறி விறைப்பைத் தக்கவைக்கவும் இந்த மருந்துகள் முயற்சிக்கும். 4-6 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மருந்துகள் பலனளிக்கும்.

ப்ரியாப்பிசத்தின் குறிப்பிட்ட வகைகளுக்கான சிகிச்சைகள்:

குறைந்த இரத்த ஓட்டம் கொண்ட ப்ரியாப்பிசத்திற்கான சிகிச்சை:

விறைப்புத் திசுக்களுக்குள் செலுத்தப்படும் ஊசி: ஆண்குறியில் இருந்து இரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களைத் திறக்கச் செய்வதற்காக ஆண்குறியிலேயே சில மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படும். தேவைப்பட்டால் மீண்டும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.
அறுவை சிகிச்சை: ஆண்குறியில் தேங்கியிருக்கும் இரத்தத்தை திசைமாற்றி அனுப்பி, ஆண்குறியிலான இரத்த ஓட்டத்தை இயல்பாக்குவதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கால்வாய் போன்ற ஒரு உபகரணம் ஆண்குறிக்குள் செருகப்படும்.
ஆஸ்பிரேஷன்: வீக்கத்தையும் அழுத்தத்தையும் குறைப்பதற்காக ஆண்குறியில் இருந்து ஊசி மூலம் இரத்தம் வெளியேற்றப்படும்
மற்ற சிகிச்சைகள் உதவாவிட்டால், அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.
அதிக இரத்த ஓட்டம் கொண்ட ப்ரியாப்பிசத்திற்கான சிகிச்சை:
இந்த வகை ப்ரியாப்பிசம் பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும். ஆண்குறியின் அடிப்பகுதிக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஐஸ் பேக் வைக்கலாம், இதனால் வீக்கம் குறையும். அடிபட்டதால் ப்ரியாப்பிசம் ஏற்பட்டிருந்தால், சேதமடைந்த தமனிகள் அல்லது திசுக்களைச் சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.

தடுத்தல் (Prevention)
சிலருக்கு இந்தப் பிரச்சனை மீண்டும் மீண்டும் ஏற்படலாம். அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தூண்டுகின்ற குறிப்பிட்ட சில மருந்துகள், போதைப் பொருள்கள், மது போன்றவற்றைத் தவிர்த்தால் ப்ரியாப்பிசம் ஏற்படுவதைக் குறைக்கலாம். எனினும், பெரும்பாலும் இது திடீரென்று ஏற்படும் ஒரு பிரச்சனையாகவே இருக்கும், இதனைத் தடுக்க முடியாது.

சிக்கல்கள் (Complications)
குறைந்த இரத்த ஓட்டம் கொண்ட ப்ரியாப்பிசம் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும். இரத்தம் ஆண்குறியில் தேங்கி சிக்கிக்கொள்ளும்போது, ஆண்குறிக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தடைபடும், இதனால் ஆண்குறியில் திசுக்கள் சேதமடையும். ஆகவே, ப்ரியாப்பிசத்திற்கு சிகிச்சையளிக்காமல் விட்டால் நிரந்தர விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படலாம்.

எச்சரிக்கை (Red Flags)
ப்ரியாப்பிசம் ஏற்பட்டு 24 மணிநேரத்திற்குள் அவசர சிகிச்சை அளிக்காவிட்டால், எதிர்காலத்தில் ஆண்குறி விறைப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம், ஆண்குறி நிரந்தரமாக சேதமடையலாம்.