Home ஜல்சா இனி நாப்கினை ஓரங்கட்டுங்க… அதுக்கு மாற்றாக வந்திருக்கிறது மென்சுரல் கப்

இனி நாப்கினை ஓரங்கட்டுங்க… அதுக்கு மாற்றாக வந்திருக்கிறது மென்சுரல் கப்

24

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் படும் அவஸ்தைகளை வார்த்தைகளால் மட்டுமே சொல்லிவிட முடியாது. இயல்பான நாட்களை விட அந்த நாட்களில், அவர்களின் ஆற்றல் அதிகமாக செலவழியும்.

அந்த நாட்களில் உண்டாகும் ரத்தப்போக்கு, குறிப்பிட்ட கால இடைவெளிக்கிடையே நாப்கின் மாற்ற வேண்டிய அவசியம் ஆகியவையே அவர்களை எரிச்சலடையச் செய்துவிடும்.

மாதவிலக்கையும் ரத்தப் போக்கையும் எதுவும் செய்ய முடியாதென்றாலும் அடிக்கடி நாப்கின் மாற்ற வேண்டிய தொல்லைக்குப் புதிய தீர்வு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதென்ன மென்சுரல் கப்?

அதுதான் மென்சுரல் ’கப்’. சிலிகானால் செய்யப்பட்ட பெல் வடிவிலான கண்டெயினர் இது. அதைப் பயன்படுத்துவது நாப்கின் பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.

ஆரோக்கியமானதும் கூட. ஆனால், நாப்கின் விலையோடு ஒப்பிடும்போது இதன் விலை அதிகம். ஆனால், நாப்கினைப் போன்று இதை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியத் தேவையில்லை.

வெந்நீரில் நன்கு சுத்தம் செய்துவிட்டு, திரும்பவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட பெல் வடிவிலான இந்த கப் பயன்படுத்துவது எளிது. வெஜினாவில் பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

12 மணி நேரம் வரை இதைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். பிறகு எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் அந்த கப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால், பல மாதங்களுக்கு நாப்கின் செலவும் மிச்சம்.