Home ஜல்சா கணவன் அடிக்கடி அந்த படம் பார்ப்பதால் வந்த பிரச்னைகள்

கணவன் அடிக்கடி அந்த படம் பார்ப்பதால் வந்த பிரச்னைகள்

361

ஜல்சா செய்திகள்:பார்ன் பற்றி அறியாத சிறு குழந்தை அல்ல நான். இங்கே ஆண்கள் மட்டும் தான் பார்ன் பார்ப்பார்கள் என்பது மூடத்தனம். நான் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்தவள். என் உடன் தங்கி இருந்தவர்கள், பக்கத்து அறைகளில் இருந்தவர்கள்… ஏன் வகுப்பில் பேராசிரியர்கள் இல்லாத நேரத்தில் ஹெட்செட் அணிந்துக் கொண்டு பார்ன் வீடியோக்கள் பார்த்த பெண்களை கூட நான் அறிவேன்.

நான் வளர்ந்த இடம், எனது பழக்கவழக்கங்கள் பொறுத்தவரை பார்ன் என்பது அசிங்கம். அதை பார்ப்பது அவமானத்திற்குரிய செயல். ஆனால், கல்லூரி படித்த நாட்களில் உடன் இருந்த தோழிகளின் கட்டாயத்தின் பெயரில் நானும் ஒருசில வீடியோக்கள் பார்த்தது உண்டு. ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை. நானாக அதை பார்க்க துணிந்ததும் இல்லை, அதற்கு தைரியமும் இல்லை.

என்னை பொறுத்தவரை பார்ன் என்பது தகாத விஷயம். ஆனால், நான் வேலைக்கு சென்ற இடத்தில், எம்.என்.சி கல்ச்சர் என்ற பெயரில் பார்ன், பார்ன் நடிகர்கள், இன்னும் சில அந்தரங்க செயல்களை சர்வசாதாரணமாக பேசி பகிர்ந்துக் கொள்வார்கள். கேட்டால் இதில் என்ன இருக்கிறது என்று சிரிப்பார்கள். சில சமயம் என்னை ஒரு வேற்றுகிரக வாசி போலவும் கண்டதுண்டு.

சரி! பார்ன் படங்களில் வரும் எதுவும் இந்த உலகில் நடக்காதது இல்லை எனிலும், அதற்கு அடிக்ட் ஆவது, கட்டிய மனைவியை அருகே வைத்துக் கொண்டு படுக்கையில் வேறு ஒரு பெண்ணும் ஆணும் தாம்பத்திய உறவில் இணைவதை பார்த்து ரசித்து இன்பம் காண்பது என்பது துரோகம் இல்லையா? மனைவி அருகே இருக்கிறாளோ, இல்லையோ… அது துரோகம் தானே… இதே! கட்டிய கணவனை அருகே வைத்துக் கொண்டு பெண்கள் பார்ன் வீடியோ பார்த்து இன்பம் கண்டு ரசித்தாள் நீங்க ஏற்பீர்களா?

இது தான் என் பிரச்சனை…

காதல் திருமணம்! என் திருமணம் காதல் திருமணம் என்பதை தாண்டி, கலப்பு திருமணமும் கூட. எங்கள் இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, எந்தவொரு சிரமும் இல்லாமல் நிச்சயத்த திருமணத்தை போல மிக இயல்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடந்து முடிந்தது திருமண வைபவம். மிக குறுகிய காலக்கட்டத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம் நானும், என் கணவரும்.

ஒரே இடம்! நானும், அவரும் ஒரே ஐ.டி பார்க்கில் வேலை செய்து வந்தோம். பார்க்கிங், உணவருந்தும் இடம் போன்ற இடங்களில் பார்த்து, சிரித்து பூத்தது எங்கள் காதல். ஏற்கனவே 27ஐ கடந்துவிட்ட காரணத்தால்… நீண்ட நாள் காதலிக்க நேரமின்றி வீட்டில் பெரியவர்களிடம் கூறி சம்மதம் வாங்கி திருமணம் செய்துக் கொண்டோம். ஆரம்பத்தில் அவருக்கு பார்ன் பார்க்கும் பழக்கம் இருப்பது எனக்கு தெரியாது.

படுக்கையறை! நாங்கள் இருவரும் காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் வீடு திரும்ப இரவு ஏழு, எட்டு மணி ஆகிவிடும். அதற்கு பிறகு சமைக்க பெரிதாக நேரம் இருக்காது. பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹோட்டல் சாப்பாடு தான். படுக்கைக்கு சென்றதும் ஒருவருடன் ஒருவர் பேசுவதை காட்டிலும், அன்றைக்கு மீதமிருந்த மெயில், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் சமாச்சாரங்களை பார்க்கவே அரைமணிநேரம் எடுத்துக் கொள்வோம். சிலமுறை அவர் வாட்ஸ்-அப் க்ரூப்பில் வீடியோக்கள் பார்ப்பதை கண்டுள்ளேன்.

பார்ன்! பார்ன் வீடியோக்களை பகிர்வதற்கு என்றே ஒரு வாட்ஸ்-அப் க்ரூப் வைத்திருக்கிறார்கள். ஒருநாளுக்கு குறைந்தது பத்து, இருபது வீடியோக்கள் அந்த க்ரூப்பில் வருகிறது. இதை அறிந்த நான், அவரிடம் நேராக கேட்டேன்.. ஏன் இன்னும் இந்த கருமத்தை பார்த்துட்டு இருக்கீங்க… இத விட்டொழிக்க வேண்டியது தானே… என்று, இல்லை இளம் வயதில் அனைவரிடமும் ஏற்படும் தாக்கம் தான் இது, போக, போக இதை குறைத்துக் கொள்கிறேன்… என பூசி முழுகினார்.

துரோகம்! எந்த பெண்ணாக இருந்தாலும், கட்டிய கணவன் வேறு ஒரு பெண்ணை சாலையில் எதிரே கண்டு ரசித்தாலே கோபம் வரும். இங்கே, கட்டிய கணவன், மனைவி அருகே படுக்கை அறையில் அமர்ந்து கொண்டு பார்ன் வீடியோ கண்டு ரசிக்கிறார். வேறு ஒரு பெண்ணின் நிர்வாண உடலை கண்டு ரசிப்பது துரோகம் இல்லையா? இதையே… பெண்களும் செய்தால் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? இப்படியான விஷயம் துரோகம் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அடிக்ட்! புகை, குடி, கஞ்சா…, விபச்சாரம் போல… பார்ன் வீடியோக்கள் பார்ப்பதும் ஒரு மோசமான அடிக்ஷன் தான். ஆனால், இதை ஏனோ ஆண்கள் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். வயது வித்தியாசம் இல்லாமல், பெரும்பாலான ஆண்கள் கொண்டிருக்கும் அடிக்ஷன் இந்த பார்ன் பார்க்கும் செயல். இதை பெண்கள் யாரும் பெரிதாக தட்டிக் கேட்பது இல்லை என்பதால் ஆண்கள் இதை தைரியமாக செய்கிறார்கள்.

கெஞ்சினேன்! ஒரு கட்டத்தில் அவர் வேறு பெண்களை ரசிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் கெஞ்சி பார்த்தேன்… அதட்டியும் பார்த்தேன். முதலில் எங்கள் இருவரின் மொபைல் போன்களுக்கும் லாக் / பாஸ்வேர்ட் எதுவும் இல்லை. நான் இப்படி கேட்டுக் கொண்டே இருப்பதால்… அவரது மொபைலுக்கு லாக் போட்டு வைத்திருக்கிறார். என்னிடம் இனிமேல் பார்க்கமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் தொடர்ந்து பார்ன் வீடியோக்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்.

பாத்ரூம்! முதலில் தைரியமாக என் அருகே படுக்கையில் அமர்ந்து பார்த்து வந்தவர்., இப்போது மொபைலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு போய் விடுகிறார். பாத்ரூம் போகும்போது எதற்கு மொபைல் என்று கேள்வி கேட்டால்… ஃபேஸ்புக் பாக்றேன்.. வாட்ஸ்-அப் சாட்டிங் என்று கதைக்கட்டுகிறார்… முதலில் பாத்ரூம் போகும் போது மொபைல் எடுத்து செல்வதை தடை செய்ய வேண்டும்.

தாம்பத்தியம்! எங்களுக்கு திருமணமாகி ஆறேழு மாதங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் எங்கள் தாம்பத்தியம் சிறப்பாக தான் இருந்தது. எங்கள் இருவருக்கும் அதில் ஆர்வமும் மிகுதியாக இருந்தது. ஆனால், இவர் பார்ன் வீடியோக்களில் வேறு பெண்களை ரசித்துவிட்டு, என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை பார்க்கும் போது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. அவர் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறாரா? அல்லது அந்த பெண்களை எண்ணத்தில் வைத்துக் கொண்டு என்னுடன் தாம்பத்திய உறவில் இணைகிறாரா? என்ற சந்தேகத்தினால்.. இப்போதெல்லாம் எனக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட விருப்பமே வருவதில்லை.