Home ஆரோக்கியம் அடிக்கடி உங்களுக்கு வரும் சளி, இருமல் இலகுவான வழிமுறை

அடிக்கடி உங்களுக்கு வரும் சளி, இருமல் இலகுவான வழிமுறை

122

பொது மருத்துவம்:ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம். அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவை சளி, இருமலை அதிகரித்து விடக்கூடும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.

தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.

Previous articleதாம்பத்திய உறவும் சந்தோஷ வாழ்வும் இன்றைய வாழ்கை முறையில்
Next articleபெண்களின் அந்தரங்க உறுப்பில் அரிப்பு,எரிச்சல் உண்டாகக் காரணம் என்ன?