Home ஆரோக்கியம் மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத குறிப்பு..!

மலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத குறிப்பு..!

43

உடலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வராமல் இருக்காது. தும்மினால் உடனே அலோபதியை தேடி போவது மிகப்பெரிய தவறு. பக்கவிளைவுகள் அல்லாத நமது உணவுப் பொருட்களினால் சிறு பாதிப்புகளை குணப்படுத்துவதே மிகவும் சிறந்தது. இதனால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.

நோயின் தீவிரத்தை தடுக்கலாம். ஆகவேதான் அந்த காலத்தில் உணவே மருந்து என்று பெரியோர்கள் சொன்னார்கள். தலைவலி, அல்சர் , மலச்சிக்கல் என குடல் மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உணவின் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என மருத்துவர்களே சொல்வது தான். அந்த மாதிரியான அற்புதமான குறிப்புகளை இங்கே காண்போம்.

மூச்சுத் திணறலுக்கு :
மூச்சுத் திணறல் அதிகம் இருந்தால், 200 மி.லி தேங்காய் எண்ணெயில், 10 கிராம் ஒமத்தைப் பொரித்து வடிகட்டி, இளம் சூட்டோடுக் கற்பூரத்தையும் கரைத்து, முதுகு, நெஞ்சுப் பகுதிகளில் தடவ, மூச்சுத்திணறல் சட்டெனக் குறையும்.

அல்சர் :
அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

பல் வலி :
பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.

சைனஸ் :
தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

மலச்சிக்கல் :
காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழத்தை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, நன்றாக மசிந்ததும் வடிகட்டி, அந்தச் சாற்றை ஐந்து முதல் 10 மி.லி குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் சரியாகும்.

இரவில், ஐந்து கிராம் திரிபலா சூரணத்தை, வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.