Home ஜல்சா பெண்களை மிரட்டும் முரட்டுக் காதலர்கள்

பெண்களை மிரட்டும் முரட்டுக் காதலர்கள்

201

desi-bhabhi-sex.com_beautiful-hot-sexy-desi-spicy-aunties “பொல்லாத காதலில் விழுந்து தினந்தினம் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்று கண் கலங்க சொன்னாள் மேரி. பயம், பதற்றம், கவலை எல்லாம் சேர்ந்து அவளை அதிர்ச்சியில் உறையவைத்திருந்தது. அருகில் இருந்த பெற்றோரும் அதிர்ச்சியுடனே காணப்பட்டார்கள்.

மேரிக்கு 25 வயது. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெற்றோருக்கு அவள் ஒரே மகள். அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அம்மா நோயாளி போன்று உடல்மெலிந்திருந்தார்.

‘எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? உங்கள் காதலில் ஏன் பிரச்சினை ஏற்பட்டது?’ – மேரியிடம் கேட்டேன்.

அவள் மெல்லிய குரலில் விளக்கினாள்.

அவள் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். ஒரே பஸ்சில் தினமும் சென்றுகொண்டிருந்ததால், அதே பஸ்சில் பயணித்த இளைஞனோடு நட்பு ஏற்பட்டிருக்கிறது. நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. இருவரும் காதல் பறவைகளாக சிறகடித்தபோது மேரியின் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது.

“எங்களுக்கு இவள் காதல் பற்றி தெரியவந்ததும் நாங்கள் உடனே எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை. நல்லவனாக இருந்தால் அவனுக்கே திருமணம் செய்துவைத்து விடலாம் என்று நினைத்து, அவனைப் பற்றி விசாரித்தோம். அவன் சரியான ஆள் இல்லை என்பது தெரிந்தது. அவன் சில பெண்களோடுமுன்பு ஊர் சுற்றியதும், அவர்களோடு பொது இடங்களில்வைத்து தகராறு செய்ததும் எங்களுக்கு தெரியவந்தது. நாங்கள் அதிர்ச்சியடைந்து, அந்த தகவல்களை இவளிடம் சொன்னோம். இவள் நம்பவில்லை. காதலை விரும்பாததால் அந்த ஆளை பற்றி நாங்கள் தவறான தகவல்களை சொல்வதாக எங்களிடம் சண்டைபோட்டாள்..’’ என்று தந்தை சொன்னார்.

தனது காதலன் தவறான நபர் என்பதை முதலில் நம்ப மறுத்த மேரி, அடுத்த சில மாதங்களிலே அவரது சுய ரூபத்தை உணர்ந்திருக்கிறாள். அவரால் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறாள்.

பயத்தோடு அதை மேரி சொன்னாள்.

“என்னைப்போன்று அவரும் வேலைபார்த்து சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவரை வேலையில் இருந்து விலக்கிவிட்டார்கள். அதற்கு என்ன காரணம் என்று கேட்டேன். உடனே அவர் ஆத்திரப்பட்டு, ‘அந்த கேள்வி எல்லாம் உனக்கு எதற்கு?’ என்று சீறினார். பின்பு அவர் வெளியே நிறைய கடன் வாங்கியிருப்பதாக அறிந்தேன். அதுபற்றி கேட்டபோது என்னை அடிக்க பாய்ந்தார். அவர் என்னை வெளியே அழைக்கும்போதெல்லாம் நான் அவரது இருசக்கர வாகனத்தில் உடன் செல்வேன். அன்று அவர் என்னை அழைத்தபோது எனக்கு உள்ளபடியே வேலை இருந்தது. அதனால் தாமதமாக சென்றேன். உடனே என்னை ஏற்றிக்கொண்டு ஆத்திரத்தில் தாறுமாறாக அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டினார். நான் பயந்து அலறினேன். இதர வாகன ஓட்டிகள் எல்லாம் திட்டினார்கள். நான் வாகனத்தை நிறுத்தும்படி கூறியதற்கு, ‘எங்கேயாவது வாகனத்தை கொண்டுபோய் மோதப் போகிறேன். உன்னை கொல்லப்போகிறேன்’ என்று வெறிபிடித்தவரைப் போன்று சொன்னார்..’’ என்று அழுகையோடு விளக்கினாள்.

அன்று எப்படியோ இவள், அவரிடமிருந்து தப்பி வந்திருக்கிறாள். அதன் பிறகு அவரை பார்க்கவே இவளுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது.

“அதன்பிறகு நான் அவரை பார்ப்பதை தவிர்த்தேன். ஆனால் அவரோ தன்னை கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார். பெற்றோர் சம்மதிக்கா விட்டால், வீட்டைவிட்டு வெளியேறி ரகசியமாக திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழலாம் என்கிறார்.

‘காதலிக்கும்போதே இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும் உங்களை நம்பி நான் எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்? நான் ஒருபோதும் அப்படிப்பட்ட இமாலய தவறை செய்யமாட்டேன்’ என்று கூறியதும், என்னை பகிரங்கமாக மிரட்டத் தொடங்கி விட்டார். சென்னை ரெயில் நிலையம் ஒன்றில் நடந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி ‘நீ என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்காவிட்டால் உனக்கும் அந்த கதிதான் ஏற்படும்’ என்று கூறினார். அன்றிலிருந்து எனக்கு வேலைக்கு செல்லவே பயமாக இருக்கிறது’’ என்றாள்.

மேரி அந்த நபரிடம் பழக ஆரம்பித்த காலத்தில் இருந்து, அவர்களுக்குள் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக்கொண்டே வந்தாள். சாந்த சொரூபி போன்று தோன்றிய அவரது சுயரூபம் திடீரென்று கொடூரமாக வெளிப்பட காரணமாக அமைந்த சம்பவம் எது என்று ஆராய்ந்தபோது, உண்மை தெரிந்தது.

மேரியின் பெற்றோர் அவரை பற்றி விசாரித்து உண்மையை அறிந்ததும், தனது சுயரூபம் அனைத்தும் காதலியின் குடும்பத்திற்கு தெரிந்துவிட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவரை அமைதியாக இருந்த அவர் அதன் பின்பு தான் மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவளை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். அந்த மிரட்டல் செல்போன் பேச்சுக்களை எல்லாம் அவள் பதிவு செய்து வைத்திருந்தாள்.

அவளுக்கு தன்னம்பிக்கையூட்டியதோடு, போலீசில் தகவல் சொல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையம் சென்றபோதுதான் அந்த காதலன் மீது ஏற்கனவே சில பிரச்சினைக்குரிய வழக்குகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. சரியான ஆதாரங்களோடு போலீசை அணுகிவிட்டதை எப்படியோ மோப்பம் பிடித்த காதலன், மாநிலத்தைவிட்டே வெளியேறி எங்கோ தலைமறைவாகிவிட்டார்.

சென்னை ரெயில் நிலையத்தில் நடந்த கொலை சம்பவத்திற்கு பிறகு ஆங்காங்கே சிலர் தங்கள் காதலிகளை பணியவைக்க ‘அதுபோல் செய்துவிடுவேன்’ என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்கள் அதை நினைத்து பயப்படவேண்டியதில்லை. அதற்கெல்லாம் பயந்தால் வாழவே முடியாது. அந்த சம்பவத்திற்கு பிறகு போலீசும், பொதுமக்களும் விழிப்படைந்துவிட்டார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இனி தப்பிக்க முடியாது.

பெண்கள் நட்பை எல்லையோடு வைத்துக்கொண்டு, விழிப்போடு எப்போதும்போல் பயமின்றி தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு தொடர வேண்டும்.