Home ஆரோக்கியம் உடலில் இருந்து அரிப்பு நோயை விரட்டனுமா? இதை செய்யுங்க!

உடலில் இருந்து அரிப்பு நோயை விரட்டனுமா? இதை செய்யுங்க!

29

இப்போது தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை பார்த்து கண்டதையும் சாப்பிட்டுவதால் அலர்ஜி நோயால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள்

பேக்கிங்ங் செய்து விற்கப்படும் உணவுகளில் அதிக ரசாயணம் கலக்கப்படுகின்றன. இதனால் ரசாயணம் கலந்த உணவுகள், ரசாயணம் மிகுந்த காய்-கறிகள், வயிற்றுக்குள் செல்லும் போது, குடலுக்குள் இருக்கும் நுண்ணுயிர் கூட்டத்தை அழித்து விடுகின்றன.

உணவை செரிக்க உதவும் நுண்ணுயிர் கூட்டங்கள், ரசயாணத் தாக்கத்தில் இருந்து தப்பியோடுகின்றன. அப்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் திடீரெனப் பெருகும். அவை, முக எலும்புப் பதிவுகளில் சைனசைடிஸ், மூச்சுக்குழல் பாதையில் ஆஸ்துமா, தோலுக்கு அடியில் எக்சிமா என ஏற்படக் காரணமாகிறது.

நம் எந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மிளகு சாப்பிடலாம். அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கும்.

இதேபோல் கரப்பான் எனப்படும் எக்ஸியா நோய்க்கு அறுகம்புல் நச்சு நீக்கி அற்புதமான மருந்து. சித்த மருத்துவத்தில் இது மிகவும் பிரபலம் ஆகும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும். சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் ‘ அருகன் தைலம்’, ,அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு இதம் அளிக்கும் நல்ல மருந்து.

பொதுவாக அரிப்பு நோய் , தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை

புளிப்பான ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள், கரப்பான் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது நல்லது.

கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம், கம்பு, தினை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்க வேண்டும்.

வேப்பங்கொழுந்து – 1 டீஸ்பூன், ஓமம் – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும்.

கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.