Home வீடியோ காதலிக்கற பலருக்கு வரும் பெரிய பிரச்சனை ப்ரேக் அப். அதுக்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாமை....

காதலிக்கற பலருக்கு வரும் பெரிய பிரச்சனை ப்ரேக் அப். அதுக்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாமை. நீங்க உங்க பார்ட்னரை புரிந்து ஸ்மூத்தாக லவ்வ பத்து ஈஸி டிப்ஸ் இதோ

58

காதலிக்கற பலருக்கு வரும் பெரிய பிரச்சனை ப்ரேக் அப். அதுக்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாமை. நீங்க உங்க பார்ட்னரை புரிந்து ஸ்மூத்தாக லவ்வ பத்து ஈஸி டிப்ஸ் இதோ!

1. நோ முந்திரி கொட்டை தனம்

கமிட் ஆன ஆரம்பத்துலையே ‘ நீதான் என் வாழ்க்கை வஞ்சிக்கொடியே’ ன்னு கவிதை பாடி உங்க வரலாறையும் பாடிடாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா எல்லா வாழ்க்கை சம்பவங்களையும் சொல்லுங்க. அவங்களுக்கு உங்க மேல நல்ல புரிதல் வர்ற வரைக்கும் கொஞ்சம் பொறுங்க பாஸ்!

2. எதிர் கட்சியை வசை பாட வேணாம்

இங்க எதிர்கட்சி இஸ் பேரண்ட்ஸ். உங்க லப்டப் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சு பூதாகரமா வெடிச்சா உங்க லவ்வர் உங்ககிட்டதான் அழுவாங்க. அவங்க அப்பா அம்மா அண்ணன் மற்றும் வீடு நாய்குட்டி சகிதம் எல்லாரையும் கோவத்துல திட்டி கூட தீப்பாங்க. ஆனா நீங்க இதாண்டா சாக்குன்னு வருங்கால மாமனாரை திட்டினால் இப்போதே டைவர்ஸ் நிச்சியம். அவங்கள கன்சோல் பண்ணுங்க. அவங்க பேரண்ட்ஸ ஏதாவது சொன்னா கோவம் உங்க மேல டேக் டைவர்ஷன் எடுத்துடும்.

3. விட்டுக் கொடுத்துக் கட்டுப் போங்க

சின்ன சின்ன விஷயங்களை விட்டு குடுங்க. உங்க கொள்கைக்கு விரோதமா உங்க லவ்வர் ஏதாவது செஞ்சுட்டா தாம் தூம்ன்னு குதிக்காம நிதானமா புரிய வெய்யுங்க. அவங்க செஞ்சது தப்பு இல்லை அண்ட் அதுதான் அவங்களுக்கு சந்தோஷம்னா முழு மனசோட ஏத்துக்கோங்க. உதாரணத்துக்கு உங்களுக்கு ஜீன்ஸ் போடத்தான் பிடிக்கும். ஆனா உங்க லவ்வர் புடவை கட்ட சொல்லறார்னா அவருக்கும் வெறுப்பில்லாம உங்களுக்கும் வெறுப்பில்லாம சல்வார்க்கு காம்ப்ரமைஸ் ஆகுங்க.

4. பிளட்டி ராஸ்கல் லவ்வர் மேல சந்தேகப்பட்டு, பால்டாயில் குடிக்கிற???

சந்தேகம் வேண்டாமே! நீங்க பாத்து பாத்து சூஸ் செஞ்ச லவ். அவர் இன்னொரு பொண்ணு கூட பிரெண்ட்லியா பேசினாலோ இல்லை அவங்க இன்னொரு பையன் கூட பேசினாலோ சந்தேகப்படாதீங்க. போசெசிவ் ஆகாதீங்க. அப்படி செஞ்சா நீங்க சந்தேகபடறது உங்க லவ்வர் மேல இல்லீங்க. உங்க செலக்ஷன் மேல. சந்தேகம் என்பது கேமெரா குறுக்க விழுந்த ஸ்க்ராட்ச் மாதிரி. எவ்வளவுதான் ட்ரை பண்ணாலும் போட்டோ அலங்கோலமாதான் வரும்.

5. மத்தவன் பொறாமைல பேசுவான் மைண்ட் இட்

யாராவது ஏதாவது உங்க லவ்வரை பற்றி சொல்லிட்டா அதை அப்படியே நம்பிடாதீங்க. ஏன்னா நீங்க லவ் பண்ணறவங்க உங்களுக்குத்தான் உண்மையா இருக்கணுமே தவிர உங்ககிட்ட குத்தம் சொல்லறவங்ககிட்ட உண்மையா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை. அப்படியே நம்பகத்தக்க ஆட்கள் சொன்னாலும் “ ச இவன்/ இவ அப்படிதான்” ன்னு அவங்ககிட்ட பொலம்பாதீங்க. குறிப்பா உங்க லவ்வரை விட்டு குடுக்காதீங்க. தனியா கூப்டு என்ன ஆச்சு ஏன் இப்படி நியூஸ் வருதுன்னு விளையாட்டா கேளுங்க. உண்மை என்னன்னு தானா புரியும். கான்பிடன்ஸ் பாஸ் கான்பிடன்ஸ்!

6. நோ அதிக எமோசன்

வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள். காதலன் படத்துல ஒரு டயலாக் வரும். எந்த முடிவானாலும் நிதானப்படுதிக்கிட்டு எடுக்கணும்ன்னு பிரபுதேவாவும் நக்மாவும் 5 வரை எண்ணுவாங்க. அதேதான்! கோவம், ஓவர் சந்தோஷம், விரக்தி, மூட் அவுட்…. எதையும் வார்த்தைகளில் காட்டாதீங்க. கொட்டிட்டா அல்ல முடியாது. உங்க லவ்வர்கிட்ட கோவப்பட்டு பேசும்போது ஒரே ஒரு நிமிஷம் இவ்வளவு நாள் எப்படி எல்லாம் உருகி லவ் பண்ணீங்கன்னு யோசிச்சு பேசுங்க.

7. சக்கர இனிக்கிற சக்கர, அவங்களுக்கு உங்க மேல அதிக அக்கர

நீங்க என்ன நினைக்கறீங்களோ வெளிப்படையா சொல்லுங்க. அதே மாதிரி அவங்க குடுக்கற ஆலோசனைகளையும் காது குடுத்து கேளுங்க. பிங்க் கலர் டிரஸ் போடவா வயலட்டா? இன்னிக்கு பார்மல்ஸ் போடவா டி ஷார்ட்டா? லஞ்சுக்கு புளி சாதமா தக்காளி சாதமான்னு உங்களுடைய சின்ன சின்ன விஷங்களை தீர்மானிக்க அவங்களுக்கு உரிமை குடுங்க. உங்கள பத்தி உங்கள விட அவங்களுக்கு அதிக அக்கறை இருக்கு. அதை வெளிப்படுத்த வாய்ப்பு குடுங்க. உங்க காதல் கெமிஸ்ட்ரி கலர்புலா இருக்கும்!

8. பெண்கள் ஆர் பொசெசிவ்

இது குறிப்பா பசங்களுக்கு. பொண்ணுங்க ரொம்ப போசெசிவ். ஸோ பிரெண்டாவே இருந்தாலும் அவங்க முன்னால மத்த பொண்ணுங்க கூட டிஸ்டன்ஸ் ப்ளீஸ்! பல பொண்ணுங்களுக்கு மத்தியில உங்க காதலிக்கு ஒரு ராணி மாதிரி பீல் குடுங்க. உங்க நண்பர்கள், பசங்க இருக்கற இடத்துல தனி பொண்ணா நிக்கற உங்க காதலிக்கு ஒரு மகள் தன் அப்பாவோட இருக்கற பாதுகாப்பு பீல் குடுங்க. முக்கியமா அவங்க இருக்கற இடத்துல மனைவி, காதலி பத்தி ஜோக்ஸ் அடிக்காதீங்க.

9. கொஞ்சம் கவனீங்க பாஸ்

எல்லாத்தையும் கவனிக்கணும். பாராட்டனும். புது டிரஸ், தோடு, செருப்பு, வாட்சாப் டீ.பி, ஸ்டேடஸ், ட்வீட்ஸ், நாய்க்குட்டிக்கு வாங்கின பெடிக்ரீ டப்பா, தாடி ஸ்டைல், ஹேர் ஸ்டைல், செல்போன் கேஸ்ன்னு எல்லாத்தையும் நோட் பண்ணுங்க. பிடிசுருந்தாலும் பிடிக்கலைனாலும் பாராட்டுங்க. தப்புன்னா எடுத்து சொல்லுங்க. “நம்மளை கவனிக்கறா. தப்பான வழியில போனா கூட சரி செய்ய எனக்கு ஒரு கரக்ட் லைப் பார்னர் கெடச்சாச்சு”ன்னு முழு நம்பிக்கையோட உங்க கை கோர்ப்பாங்க.

10. ஒரு ரொமாண்டிக் லுக் பார்சல்

இதுதான் மிக முக்கியமான பாய்ன்ட். ரொமான்ஸ்!

காதல் மனசுல இருந்தா என்ன பாஸ் செய்ய முடியும்? அதை வெளியில கொண்டு வந்தாதானே உங்க ஆளுக்கு புரியும்? நிறைய ரொமான்ஸ் பண்ணுங்க. ஆனா லிமிட் மீர வேண்டாம்! டிரைவ் பண்ணும்போது ஜெண்டிலா கை பிடிக்கறது… காதோரமா லவ் யூ சொல்லிட்டு கண்ணடிக்கறது… அவங்க வெக்கத்த ரசிக்கறது! இப்படி சின்ன சின்னதா ரொமான்ஸ் பண்ணுங்க. நான் குடுத்து வெச்சவன்… ரொம்ப லக்கி… ன்னு அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க உங்க வறண்டு போன வாழ்க்கைல பன்னீர் பூவா பூத்துக்கு! நிறைய சர்ப்ரைஸ் பண்ணுங்க. காஸ்ட்லியா வேண்டாம். உங்க பட்ஜெட்குள்ள அடங்கற கிப்ட் கூட அன்பை அளவில்லாம சேர்த்து குடுங்க. லவ்வை என்ஜாய் பண்ணுங்க!

ஆல் தி பெஸ்ட்! அடுத்த வாலடைன்ஸ் டேக்கு இதை விட சந்தோஷமா ஒத்துமையா இருங்க.

மறக்காம எங்களை கல்யாணத்துக்கு கூப்பிடுங்க