Home சூடான செய்திகள் உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கான 10 காரணங்கள்!

உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பதற்கான 10 காரணங்கள்!

46

இது பொதுவாகவே இல்லறவாசிகள் மத்தியில் இருக்கும் ஒரு கருத்து. ஆண்கள் அளவிற்கு ஏன் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம், ஆசை இருப்பதில்லை. ஒருவேளை ஆண்கள் அதிக இச்சை எண்ணம் கொண்டிருக்கிறார்களோ என்ற கருத்தும் கூட சிலர் வெளிப்படுத்துவது உண்டு.
இதில், உண்மை என்னவெனில், பெண்களின் இயற்கை உடல்வாகு மற்றும் உடலமைப்பு போன்றவை ஆண்களின் அளவிற்கு அதிகமாக உடலுறவில் ஈடுபட ஒத்துழைக்காது. மேலும், பெண்கள் ஆண்களை விட மன ரீதியான உறவிலும், உணர்விலும் அதிக பிணைப்பு கொண்டுள்ளவர்கள்.
இது போல சில காரணங்களினால் தான் பெண்களால் ஆண்கள் அளவிற்கு உடலுறவில் நாட்டம் செலுத்த முடிவதில்லை…
காரணம் ஒன்று
பெண்கள் உடல் ரீதியான உறவினை விட, மனம் ரீதியான உறவை தான் அதிகம் எதிர் பார்க்கின்றனர். உடலுறவில் ஆண்கள் அளவிற்கு பெண்கள் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதற்கு இதுவொரு முக்கிய காரணியாக இருக்கிறது. உணர்வு ரீதியாக அதிக பிணைப்பு உண்டாக்கிக் கொள்ள தான் பெண்கள் விரும்புகிறார்கள்.
காரணம் இரண்டு
மற்றுமொரு முக்கிய காரணம் நேரம். ஆண்களை போல உடனே பெண்களால் உடலுறவில் ஈடுபட தயாராக முடியாது. அதற்கான நேரம், சூழல் அமைந்தால் மட்டுமே பெண்கள் உடலுறவில் ஈடுபட முன்வருவார்கள்.
காரணம் மூன்று
கோபம், மன அழுத்தம், ஏமாற்றம், விரக்தி போன்றவற்றால் பெண்களின் மனநிலை எளிதாக மாறிவிடும். இதிலிருந்து உடனே வெளிப்பட்டு இயல்பு நிலைக்கு அவர்களால் திரும்ப முடியாது. இதுவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
காரணம் நான்கு
பல காரணங்களினால் பெண்களின் உடல்நிலை ஆக்டிவாக இல்லாமல் போகலாம். (எ-கா) மாதவிடாய் ஏற்படும் முன்னரும், ஏற்பட்ட பிறகு, முடிந்த ஓரிரு நாட்களும் கூட பெண்கள் சோர்வு மற்றும் வலி உணர்வார்கள். இந்த நேரங்களில் அவர்களால் உடலுறவில் ஈடுபடுவதை பற்றி எண்ண முடியாது.
காரணம் ஐந்து
ஆண்கள் தினமும் உறவில் ஈடுபடுவதற்கு கூட தயாராக இருப்பார்கள். ஆனால், பெண்கள் இல்லறத்தின் ஒருக்கட்டதிற்கு மேல் வாரத்திற்கு ஒருமுறை என்பதே அதிகம் என எண்ணுவார்கள்.
காரணம் ஆறு
ஒன்று பெண்களுக்கு தானாக உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பிறக்க வேண்டும், இல்லையேல் ஆண்கள் அந்த எண்ணத்தை உண்டாக்க வேண்டும். இவை இரண்டும் நடக்காமல் பெண்கள் உறவில் ஈடுபட முன்வர மாட்டார்கள்.
காரணம் ஏழு
நீங்கள் அவர்களிடம் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஓர் நெருக்கத்தை உண்டாக்க வேண்டும். இந்த நெருக்கம் உண்டாகாமல் பெண்களால் உறவில் அதிகம் ஈடுபட முடியாது.
காரணம் எட்டு
நீங்கள் அவர்களிடம் ஏதாவது தவறாக நடந்துக் கொண்டிருந்தால். அதாவது, திட்டியோ, அவர்கள் கேட்டது செய்யாமலோ இருந்தால் அதற்கு தண்டிக்க கூட பெண்கள் உறவில் ஈடுபட நாட்டம் இல்லாதது போல இருக்கலாம்.
காரணம் ஒன்பது
பெண்கள் ஆண்கள் அளவிற்கு உறவில் ஈடுபட ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு அவர்களது வயதும் ஓர் காரணம். ஆண்கள் 50 வயது வரை கூட உடலுறவில் விருப்பம் காட்டலாம். ஆனால், பெண்களுக்கு 30-40 வயதிலேயே இதில் ஆர்வம் குறைந்துவிடுகிறதாம்.
காரணம் பத்து
சில ஆய்வுகளின் மூலம் தெரிய வரும் தகவல் என்னவெனில், பெண்ணியம் அதிகம் பேசும், விரும்பும், அது குறித்த செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் பெண்களுக்கு அதிகம் உடலுறவில் ஈடுபட நாட்டம் இருப்பதில்லையாம்.