Home சூடான செய்திகள் காண்டம் வாங்க வெட்கம், கவரால் வந்தது துக்கம்

காண்டம் வாங்க வெட்கம், கவரால் வந்தது துக்கம்

44

captureஆணுறை வாங்குவதற்கு வெட்கப்பட்டு பிளாஸ்டிக் பையை உடலுறவுக்கு பயன்படுத்தியதால் காயமடைந்த இளஞ்ஜோடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வியட்நாம் நாட்டில் கல்லூரியில் படித்து வரும் ஒரு காதல் ஜோடி முதல் முறையாக உடலுறவில் ஈடுபட ஆசைப்பட்டுள்ளனர். பாதுகாப்பான முறையில் உடலுறவு செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு இருந்ததால், ஆணுறை வாங்க முடிவு செய்தனர். ஆனால், காதலருக்கோ கடைக்குப் போய் ஆணுறையைக் கேட்டு வாங்க கூச்சம். இதனால் அவருக்கு ஒரு புதுமையான யோசனை தோன்றியது.

பொருள்களை கொண்டுசெல்ல பயன்படும் மெல்லிய பிளாஸ்டிக் பையை எடுத்து தனது ஆணுறுப்பில் அணிந்துகொண்டார் அந்த இளைஞர். உறவின்போது அது கழன்றுவிடாமல் இருக்க சுற்றி பிளாஸ்டிக் ரப்பர்பாண்ட் பொருத்தி காதலியுடன் உல்லாசமாக இருந்தார்.

எல்லாம் முடிந்தவுடன் பார்த்தால் காதலர்கள் இருவருக்கும் மிகுந்த வேதனை. அவர்களது அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக் பை உராய்ந்ததில் ரணம் உண்டாகிவிட்டது. வேறுவழியில்லாமல் வேதனையுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் செய்த இந்த விநோத விஷயம் அம்பலத்துக்கு வந்து விட்டது.