Home உறவு-காதல் முதல் பார்வையில் பெண்களை ஈர்த்த ஆண்கள் பற்றி சொல்லுவது என்ன?

முதல் பார்வையில் பெண்களை ஈர்த்த ஆண்கள் பற்றி சொல்லுவது என்ன?

130

காதல் உறவு:காதல் எப்படி வரும், எங்கே வரும், யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது… ஆனால், வர வேண்டிய காலத்தில், நேரத்தில் அதுவாக, தானாக வந்தே தீரும். காதலை வராதே என்று தடுக்கவும் முடியாது, பிரிந்து செல்லும் போது போகாதே என்று தடுத்து நிறுத்தவும் முடியாது

காதல் இல்லாதது போல நடிக்க முடியுமே தவிர, வாழ முடியாது. இது தான் நிதர்சனம். வெளியில் இருக்கும் மக்களை ஏமாற்ற முடியும், உள்ளே இருக்கும் மனதை யாராலும் ஏமாற்ற முடியாது. இதோ! முதன் முதலில் தங்கள் காதல் துணையிடம் ஈர்ப்பாக கண்ட விஷயம் குறித்து பெண்கள் கூறும் விஷயங்கள்..

#1 அது அவனது குரல்… அப்படி ஒரு குரலை அதற்கு முன் நான் கேட்டதே இல்லை. அது என்னை ஒவ்வொரு முறையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இன்று வரையிலும்…, அவனது குரலை கேட்கும் போதெல்லாம்… அந்த தாக்கம் ஏற்படாமல் இருந்ததில்லை.

#2 அந்த புன்னகை சத்தம்… சிலர் சிரிக்கவே தயங்குவார்கள்.. முழுமையாக சிரிக்க கூட மாட்டார்கள். அல்லது வாயை மூடிக் கொண்டு சிரிப்பார்கள். ஆனால், அவனது சிரிப்பு தான் அவனது அழகு. அவனது சிரிப்பில் ஒரு ஆண்மை வெளிப்படும். முகத்தில் அழகும் அதிகமாக வெளிப்படும். நாங்கள் முதன் முதலாக டேட் செய்த போது, அவனது சிரிப்புக்கு நான் எவ்வளவு அடிமையாகி இருக்கிறேன் என்பதை அறிந்தேன்

#3 நானும், அவனும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்தவர்கள் தான். இடையே தான் நாங்கள் டேட் செய்ய துவங்கினோம். அவன் எப்போதுமே எதையும் எளிமையாக எடுத்துக் கொண்டு நகரும் பழக்கம் கொண்டவன். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டான். பாஸிங் க்ளவுட் மாதிரி, சிரித்த முகத்துடன் நகர்ந்து செல்வான். நான் எப்போதுமே, அவனுடன் இருக்க வேண்டும் என கருதுவது அதற்காக தான். அவனுடன் வாழ்வது என்பது வாழ்க்கையை முழுமையாக கொண்டாடுவதற்கு சமம்.

#4 அன்று தான் நானும் அவனும் முதன் முதலில் ஒன்றாக வெளியே செல்கிறோம். அந்த நாளில் அவனில் இருக்கும் அந்த நகைச்சுவை உணர்வு, அவன் அனைவரையும் மகிழ்விக்கும் விதம்… அது தான் அவன் மேல் நான் காதல் கொள்ள காரணம்…

#5 ஹ்ம்ம்… அவனோட உயரம்… ஆம்! அவனோட உயரம் தான் முதல்ல என்ன அட்ராக்ட் பண்ண விஷயம்…

#6 ஒரு செயலி மூலமாக தான் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம். அவன் மிகவும் கியூட்டாக இருந்தான்.. நான் தான் முதன் முதலில் மெசேஜ் அனுப்பினேன்… ஃபிளர்ட் செய்வது போல தான் மெசேஜ் எல்லாம் அனுப்பினேன். நாங்கள் ஒருவரை ஒருவரை நேரில் சந்தித்துக் கொள்ள எப்போதுமே முயற்சித்தது இல்லை. அவனிடம் எனது சொந்த ஊர், இருப்பிடம் பற்றி எல்லாம் பொய் கூறி இருந்தேன். ஒருமுறை என் பிறந்த ஊருக்கு சுற்று பயணம் மேற்கொள்வதாக கூறினான். அவன் கூறிய அந்த நாளில்… அவனுடன் சாட்டிங் செய்துக் கொண்டே, அவன் செல்லும் இடத்திற்கு எல்லாம் ஹட்ச் டாக் போல பின் தொடர்ந்து சென்றேன். அவன் என்னிடம் உண்மையாக இருக்கும் போது, நான் மட்டும் அவனிடம் பொய் கூறுவது சரியாக இல்லை. மறுநாள் மாலை அவன் ஊர் திரும்பும் போது, அவன் எதிரே சென்று உண்மையை கூறி பிரபோஸ் செய்தேன். இப்போது நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வருகிறோம்.

#7 நான் எப்போதுமே ஷேரிங் டாக்ஸியில் பயணிப்பது தான் வழக்கம். அப்படியான பயணத்தில் நிறைய பெண்களை நான் கண்டிருக்கிறேன், ஈர்ப்பு ஏற்பட்டதும் உண்டு. ஆனால், அன்று நடந்தது வேறு… முதலில் நான் ஏறினேன். பிறகு இரண்டாவதாக ஒரு ஆண் முன் இருக்கையில் ஏறினார். மூன்றாவதாக இவள் ஷேரிங்கில் ஏறினாள். அப்போது ஒரு திருப்புமுனையில் டிரைவர் ஸ்டெய்ரிங்கை ஒரு சுழற்று சுழற்ற… அவள் என் மீது விழுந்தாள்… அப்போது தான் நான் அவள் மீது காதலில் விழுந்தேன். எதிர்பாராத திருப்பம் அது. தொடர்ந்து நான்கைந்து மாதம் அவளை பின் தொடர்ந்து என் காதலை ஏற்றுக் கொள்ள செய்தேன்.

#8 அப்போது அவன் எனக்கு ஒரு நண்பனாக மட்டும் தான் இருந்தான். ஏனெனில், அப்போது அவன் என் தோழியை காதலித்து வந்தான். ஆனால், என் தோழிக்கு அவன் மீது காதல் வரவில்லை. எனக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது, அவனை போன்ற ஒரு ஆணை எப்படி இவள் வேண்டாம் என்கிறாள் என்று. நாட்கள் கழிந்தன… நானாக சென்று அவனிடம் பிரபோஸ் செய்தேன்… ஆனால், அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் மீது எனக்கு ஏற்பட்ட முதல் ஈர்ப்பு… அவனது காதல் தான். அவன் என் தோழியை அணுகிய விதம்… தனித்துவமானது.

#9 பெரிதாக எதுவுமில்லை… அவன் பார்க்க மிகவும் எளிமையாகவும்… சாதாரணமாகவும் இருந்தான். பெரிதாக ஸ்டைல் அல்லது கெட்டப் மாற்றங்கள் எதுவும் இல்லாமல்… அவன் ஒரு சாதாரண ஆணாக இருந்தான். அது தான் அவன் மீது ஈர்ப்பு கொள்ள வைத்தது.

#10 சென்ஸ் ஆப் ஹியூமர்…. அவனை அடித்துக் கொள்ளவே முடியாது. யார் மனதும் நோகாமல், யாருக்கும் கோபம் ஏற்படாத படி இருக்கும் அவனது காமெடி மற்றும் சென்ஸ் ஆப் ஹியூமர்.

#11 நானும் அவனும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். வெவ்வேறு கல்லூரியில் படித்திருந்தாலும், எங்களுக்கு வேலை கிடைத்த நகரம் ஒன்று தான். மீண்டும் துளிர்விட்டது எங்கள் நட்பு. ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் ஒன்றாக வெளியே போவது வழக்கம். ஆனால், ஒருநாள் நாங்கள் பீச்சிற்கு சென்றிருந்தோம். அன்று எதனால், எதற்காக நாங்கள் இருவரும் எங்கள் எதிர்காலம் மற்றும், எங்கள் பிளஸ், மைன்ஸ் பற்றி எல்லாம் விவாதித்தோம் என்று தெரியவில்லை. அந்த ஒரு உரையாடல் தான் எங்களுக்குள் காதல் மலர காரணமாக இருந்தது.