Home ஜல்சா நீங்கள் குடிக்கும் மதுவின் வாசனையே வரக்கூடாதா?

நீங்கள் குடிக்கும் மதுவின் வாசனையே வரக்கூடாதா?

235

ஜல்சா செய்திகள்:வார இறுதியில் நண்பர்களோடு பார்ட்டிக்கு சென்று ஜமாய்க்கிறீர்களா? திங்கட்கிழமை அலுவலகத்திற்குப் போகும்போது நீங்கள் உணராமலே உடலிலிருந்து, வாயிலிருந்து மதுவின் துர்நாற்றம் வீசக்கூடும்.

முந்தைய நாட்களில் நாம் உட்கொண்ட சில உணவுகள், பானங்களிலுள்ள மூலக்கூறுகள், வாயிலிருந்து துர்நாற்றம் வெளிப்பட காரணமாகின்றன என்று மருத்துவம் மற்றும் உயிரியல் தொடர்பான இயற்கை அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
மது பாதிப்புகள்

பொதுவாக, நம் உடல், மதுவை அதிலிருக்கும் ஆல்கஹாலை நஞ்சாகவே கருதுகிறது. ஆகவே, மது எளிதாக செரிப்பதில்லை. மதுவின் மூலக்கூறுகளை உடைத்து சிதைக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு டிரிங் என்ற (350 மிலி பீர் / 150 மிலி ஒயின் / 44 மிலி மற்ற மது) அளவுக்கான மதுவையே கல்லீரலால் மாற்றம் செய்ய முடியும். மதுவிலிருக்கும் ஆல்கஹால் மெதுவாக செரிப்பதினால், மீதியுள்ள ஆல்கஹால், கல்லீரலால் மாற்றப்படுவதற்காக இரத்தநாளங்களில், உடல் திசுக்களில், நுரையீரல்களில் தங்கியிருக்கிறது.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
மது துர்நாற்றம்

இதன் காரணமாகவே மூச்சில், வாயில் மதுவின் நாற்றம் வீசுகிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்னை இது. உடலில் தங்கியிருக்கும் ஆல்கஹால் துர்நாற்றத்திற்கு காரணமாவதோடு, நீங்கள் இன்னும் போதையில் இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் எண்ணிவிடவும் வழிவகுக்கும். மதுவினால் உண்டாகும் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கு சில வழிகள் உள்ளன.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
நொறுக்குத் தீனி

மது அருந்துவதற்கு முன்பு அல்லது மது அருந்தும்போது எதையாவது சாப்பிடுங்கள். உணவுப்பொருட்களை நீங்கள் வாயில் மெல்லும்போது, உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறது. வயிற்றுக்குள் சென்று சேரும் உணவு கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்துக்கொள்கிறது. ஆகவே, துர்நாற்றத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலை, முந்திரி, பாப்கார்ன், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஏதாவது உணவுப் பொருளை சாப்பிடலாம். மது அருந்தும்போது அவ்வப்போது இவற்றை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
அதிகமாக நீர் அருந்துங்கள்

மது அருந்தும்போது சாப்பிடுவதுபோல, அதிக அளவு தண்ணீர் பருகுவதும் அவசியமானது. மதுவிலிருக்கும் ஆல்கஹால் வாயை வறண்டு போகச் செய்யும். வாய் வறட்சியாகும்போது, துர்நாற்றத்தை எழுப்பக்கூடிய நுண்கிருமிகளாகிய பாக்டீரியாக்கள் உருவாக ஏதுவாகிறது.
மது அருந்தி முடித்தபிறகும் அவ்வப்போது சிறிது நீர் பருகிக்கொண்டே இருங்கள். இது ஆல்கஹால் நாற்றம் வீசுவதை குறைப்பதுடன், போதையின் பின் விளைவுகளான தலைவலி, மயக்கம் போன்றவற்றையும் குறைக்கும். சாதாரண நீருடன், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்துவதும் நல்ல பலனை தரும்.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
கடுங்காபி (பிளாக் காபி)

ஸ்ட்ராங்கான காஃபி பருகுதுவது இரண்டு வழிகளில் உங்களுக்கு உதவும். முதலாவது, போதையின் மயக்கம், அசதி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அலுவலகம் செல்ல, முக்கியமான சந்திப்புகளுக்கு செல்ல புத்துணர்வு அளிக்கும். இரண்டாவதாக, அருந்திய காஃபி, வாய்க்குள் நல்ல நறுமணத்தை அளிக்கும். அது ஆல்கஹாலின் துர்நாற்றத்தை சற்று தணிக்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் மூன்று முதல் நான்கு கோப்பை காஃபி அருந்துங்கள். சர்க்கரையோ வேறு சுவையூட்டிகளோ சேர்க்காமல் காஃபி அருந்தவேண்டும். வேறு ஏதாவது சேர்க்கப்பட்டால், காஃபி அருந்துவதன் பலன் முழுமையாக கிடைக்காது.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
பல் துலக்குங்கள்

ஆல்கஹாலின் துர்நாற்றத்தை தவிர்க்க, வாய் மற்றும் ஈறுகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பது அவசியம். துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்க பல் ஆரோக்கியம் அவசியம். ஆனால், வயிறு, தொண்டை மற்றும் தோலிலிருந்து ஆல்கஹால் துர்நாற்றம் வருவதை தடுக்க இது உதவாது. மிண்ட் சுவை கொண்ட பற்பசையை பயன்படுத்தலாம்.

பல் துலக்கிய பின்னர், பல்லிடுக்குகளை சுத்தப்படுத்த மறக்கக்கூடாது. மதுவில் ஊறிய உணவுப்பொருட்கள் பல்லிடுக்கில் சிக்கிக்கொள்ளும். அவற்றை அப்படியே விட்டுவிட்டால், ஆல்கஹாலால் வெளிப்படும் நாற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. கடைசியில் ஆல்கஹால் கலக்காத மவுத் வாஷ் பயன்படுத்தி நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
மூலிகைகளை மெல்லுங்கள்

புதினா, கிராம்பு, சோம்பு, மல்லி தழை போன்றவற்றை மெல்லுதல் மதுவின் நாற்றத்தை போக்க உதவும். நறுமணப் பொருட்களான இவை வாய் மற்றும் வயிற்றிலிருந்து வரும் துர்நாற்றத்தை பெருமளவில் குறைக்கும். சில மணி நேர இடைவெளியில் இவற்றை மெல்லுதல் பயன் தரும்.

எவ்ளோ சரக்கு அடிச்சாலும் வெளில வாசனையே வரக்கூடாதா? இத எடுத்து வாயில போட்டுக்கோங்க
சூயிங்கம்

மதுவினால் வாயிலிருந்து வெளிப்படும் துர்நாற்றத்தை குறைக்க சூயிங்கம் மெல்லலாம். உமிழ்நீர் சுரப்பை இது அதிகரிக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்போது வாயிலுள்ள அமிலம், நுண்கிருமிகள் மற்றும் துர்நாற்றம் எழும்ப காரணமாகும் துகள்கள் அகற்றப்படும். மது அருந்தி முடித்தபிறகு, சூயிங்கத்தை முடிந்த அளவு நீண்ட நேரம் மெல்லுங்கள். பிறகு, வாயை நன்றாக கொப்பளியுங்கள். தேவைப்பட்டால், இதை திரும்ப திரும்ப செய்யலாம்.