Home இரகசியகேள்வி-பதில் மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலா ?

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலா ?

845

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா?

பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

மேலும் தொடர்ந்து மது அருந்தினால் ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரான் உருமாறி பெண்பால் ஹார்மோனான ஈஸ்டராய்டுகளாகி விடுகிறது.

இதனால் தான் மது போதையில் மூழ்கிய ஆண்களுக்குத் தோல் மென்மையாகிவிடுகிறது. தசை போட்டுவிடுகிறது. பெண்ணைப் போல மார்பகங்கள் உருவாகிவிடுகின்றன. முகத்திலும் பிறப்புறுப்பிலும் ரோமங்கள் குறைந்துவிடுகின்றன.

இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆபத்தாக விந்தணுக்களின் எண்ணிக்கையும் டெஸ்டோஸ்ட்ரானின் உற்பத்தியும் ரொம்பவும் குறைந்து ஒரு கட்டத்தில் ஆண்மையே பறி போய்விடுகிது. ஆக, மது ஆண்மைக்கு உலை வைக்கிறதே தவிர உச்சக்கட்டத்தை நீட்டிப்பதில்லை
—————————————
கேள்வி:
எனக்கு வயது 24. நான் ஒரு ஆண். சிறு வயது முதலே எனக்கு யோசனையும் மன அழுத்தமும் அதிகமாக இருந்து வருகிறது. சிறு தவறு என்றாலும் மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீதியில் விழுந்து தூங்கிவிட்டேன்.

போதையில் இருந்த என்னை ஒருவர் வந்து எழுப்பி அழைத்துச் சென்­றார். அவர் எனக்குத் தெரிந்தவரோ, நான் தங்கியிருக்கும் விடு­திக்குத்தான் அழைத்துச் செல்கிறாரோ என்ற எண்ணத்தில் அவருடன் தட்டுத் தடு­மாறி எழுந்து சென்றேன். அவர் என்னை ஒரு மறைவிடத்துக்கு அழைத்­­துச் சென்று என்னை துஷ்­பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார். சுதாகரித்துக்கொண்ட நான், அவரைத் தாக்க முற்பட்டேன். அவர் பயந்து ஓடிப் போய்விட்டார். பிரச்சினை என்னவென்றால், அந்த இடத்தில் கண்காணிப்பு கெமரா பொருத்­தப்பட்டிருந்தது.

அதில் இச்­சம்ப­வம் பதிவாகியிருக்குமோ என்று பயமாக இருக்கிறது. அப்படிப் பதிவாகி­யிருந்தால் அதை இணையத்­தில் கசிய விட்டுவிட்டால் என் மானம் கப்ப­லேறி­விடும். தற்கொலை செய்து­­கொள்ள­லாம் என்றால், எனக்கு இளைய சகோதர, சகோதரிகள் இருக்­கின்ற­னர். அவர்களுக்காகவேனும் உயிர் வாழ வேண்டும். இச்சம்பவம் நடந்து ஒன்­றரை வருடங்கள் ஆகின்­றன. எனக்கு தகுந்த ஆலோசனை தர வேண்டும்.

பதில்:
போய் வேலையைப் பாருங்கள்!
சிறு வயது முதலே சிறு தவறு என்றாலும் உறுத்தும் மனப்பாங்கு கொண்ட உங்களுக்கு, குடிப்பழக்கம் தவறு என்பது மட்டும் ஏன் உறுத்தவில்லை என்று வியப்பாக இருக்கிறது. போகட்டும்!

உங்கள் விலாவாரியான கடிதத்தில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் தரவேற்றும் அளவுக்கு ‘தகுதி’ வாய்ந்தது அல்ல! அதனால்தான் சம்பவம் இடம்பெற்று ஒன்றரை வருடங்களாகியும் அது இணைய உலா வரவில்லை.
எதெதெற்கு தற்கொலை செய்துகொள்ள நினைப்பது என்ற ஒரு வரையறை இல்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு இருந்த ‘மதிப்பும்’ உங்களால் போய்விட்டது.
அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், பிர­பல புள்ளிகள் எனப் பல்­வேறுபட்டவர்கள் பாலி­யல் நட­வடிக்கைகளில் ஈடு­பட்ட காட்சிகள் இணையத்­தில் பல கோடி மக்களால் பார்க்கப்­பட்டிருக்கின்றன. அவர்க­ளெல்­லாம் தற்கொலையா செய்து­கொண்­டார்கள்?

உங்களுக்கு இடம்பெற்றது ஒரு விபத்து. இதில் இருந்து நீங்கள் கற்றுக்­கொள்ள வேண்டியது என்னவென்றால், இச்சம்பவத்துக்கு மூல காரணமான குடிப்பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்­டும் என்று உறுதி­யெடுப்­பதே! அதன் மூலம், உங்கள் இளைய சகோதரங்­களுக்­குத் தேவையான வசதிகளைச் செய்து­கொடுக்கலாம். அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு – அதாவது, திருமண வாழ்க்கைக்கு – தேவையான பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மீறியும் ‘தற்கொலை செய்துகொள்­ளத்­தான் போகிறேன்’ என்று நீங்கள் நினைப்­பீர்களானால்… அதற்­காகத் தனியாக முயற்சி செய்யத் தேவை­யில்லை. ஏனெனில், குடிப்பழக்கமே ஒரு தற்கொலை முயற்சிதான்!
—————————————–
இல்வாழ்க்கை இனிதாக என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக அனைவருக்குமே ஒரு கேள்வி எழும். அதிக நேரம் உடலுறவில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்று. கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் உடலுறவில் உங்கள் திறனை மேம்படுத்தும்.

வெங்காயம் இதயத்திற்கு மட்டுமல்லாமல் ரத்த அடர்த்தியை குறைக்கிறது. வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் பெருகுவதோடு, ரத்த அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
மசாலா பொருளான கிராம்பு இந்திய சமையலில் முக்கியமானது. இது உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, ஆண்குறியை எழுச்சி பெற செய்கிறது.
சுண்டல் சாப்பிடுவதன் மூலம் விந்து ஆரோக்கியம் பெருகிறது.
தயிர் சாதம் தானே என்று அலட்சியம் செய்ய வேண்டாம். அதில் அதிகளவு துத்தநாகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.
கத்திரிக்காய் ஆண், பெண் இருவருக்குமே உடலுறவின் போது சக்தியை கொடுக்கக் கூடியது.
முந்திரிபருப்பு இதிலும் zinc அதிக அளவில் உள்ளது. Zinc அளவிற்கும் ஆண்களின் எழுச்சிக்குறைவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
செக்ஸுக்கான சூப்பர் உணவு என பீட்ரூட் ஜூஸ் அழைக்கப்படுகிறது.இது ரத்த செல்களுக்கு அதிக சக்தியை தருகின்றது. அதிக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதால் உடல் சக்தி பெறுகிறது.
திராட்சையில் அதிகளவில் ஸ்டில்பினோயிட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரால் பொருட்கள் உள்ளன. அதனால் எதிர்ப்பு சக்தி அளிப்பதோடு, அதிக நேரம் உடல் சக்தியை கொடுக்கக் கூடியது.