Home ஆண்கள் ஆண்களின் ஆண்மை குறைய இது காரணமாக இருக்கலாம்

ஆண்களின் ஆண்மை குறைய இது காரணமாக இருக்கலாம்

213

ஆண்மை பலம்:அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில், விந்தணுக்கள் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படவும், உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவாக இருந்தால், குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் . ஆனால் தற்போது விந்துணுக்கள் குறைபாடு உள்ள ஆண்களுக்கு உடல்நலத்திலும் குறைபாடு ஏற்படும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் சுமார் 5177 ஆண்களை சோதித்ததில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 20 சதவீத ஆண்கள் குண்டாக இருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கெட்ட கொழுப்பு இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வை நடத்திய மருத்துவர் பெர்லின் கூறுகையில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவாக இருப்பது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம். ஆகவே மலட்டுத்தன்மை குறித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் முழுமையான உடல் பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிய வேண்டும் என்றார்.

Previous articleமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலா ?
Next articleபெண்களின் அந்த முன்று நாட்கள் பிரச்சனையை திறக்கும் மருந்து