Home சமையல் குறிப்புகள் சண்டே ஸ்பெஷல்: ஸ்பைசி ஹனி சிக்கன் ( தேன் சிக்கன்)

சண்டே ஸ்பெஷல்: ஸ்பைசி ஹனி சிக்கன் ( தேன் சிக்கன்)

22

சிக்கனை வைத்து பல விதமான டிஷ் சமைக்கலாம். இதில் சிக்கினில் தேன் சேர்த்து ஸ்பைசியாக ஹனி சிக்கன் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நெஞ்சு பகுதியாக சிக்கன்- 250 கிராம்
காய்ந்த மிளகாய் – 2 -3
தக்காளி கெட்சப் – 1 1/2 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் – 2 டீஸ்பூன் ( நறுக்கவும்)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கோழிக்கறியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நல்ல பிசைந்து அதனுடன் கார்ன் ஃபிளார் மாவையும் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் தீயை கூட்டி காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நொடிகள் வதக்கி விடவும்.

பின்னர், நறுக்கிய வெங்காயத்தாள், தக்காளி கெட்சப், சோயா சாஸ், தேன், உப்பு சேர்த்து கிளறி விட்டு வதக்கி வைத்த சிக்கன் துண்டுகளைப் போடவும்.

உப்பை சரிபார்த்து சிறிதளவு மிளகுத்தூள் தூவி விட்டு சாஸ் நன்கு சிக்கனில் கலக்குமாறு கிளறி விட்டு நறுக்கிய வெங்காயத்தாளை தூவி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஸ்பைசி ஹனி சிக்கன் ரெடி!