Home அழகு குறிப்பு கூந்தல் அழகு கூந்தல் பொலிவிழந்து இருக்கா? வீட்டிலேயே ஈஸியா பராமரிக்கலாம்!!!

கூந்தல் பொலிவிழந்து இருக்கா? வீட்டிலேயே ஈஸியா பராமரிக்கலாம்!!!

24

உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தான் தாங்க முடியவில்லையென்றால், கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதை விட பெரும் டென்சனை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். சொல்லப்போனால், கூந்தல் பிரச்சனையில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் தான். அதற்காக அவர்கள் என்னென்னவோ ட்ரை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் எந்த பயனும் இருக்காது. கூந்தலை பராமரிக்க எதையோ ட்ரை செய்வதற்கு, வீட்டில் இருப்பதையே சரியாக பயன்படுத்தி வந்தால், எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இருக்கலாம்.

மேலும் கூந்தலுக்கு பிரச்சனை ஏற்படுவது வேறு எந்த காரணத்தினாலும் இல்லை, அனைத்தும் அவரவர்கள் செயல்களில் தான் இருக்கிறது. ஆகவே அதனை சரிசெய்து விட்டாலே போதுமானது. இப்போது வீட்டில் இருக்கும் போது எந்த செயல்களையெல்லாம் செய்தால், கூந்தல் நன்கு பொலிவோடு ஆரோக்கியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

டயட்: உண்ணும் உணவுகளை சரியாக உண்ணாமல் இருந்தால் கூட, கூந்தலுக்கு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க உடலில் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் இருந்தால் தான், கூந்தலுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். ஆகவே பழங்கள், காய்கறிகள் மற்றும் சரியான அளவு புரோட்டீன் இருக்கும் உணவுகளை தினமும் உணவில் சரியான அளவு சேர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு போதிய தண்ணீர் இல்லையென்றால் கூட கூந்தலுக்கு பிரச்சனை ஏற்படும். ஆகவே இவற்றையெல்லாம் சரியாக செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

 

முட்டையின் மஞ்சள் கரு: முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் தான் கூந்தலுக்கு நல்லது என்று தெரியும். ஆனால் முட்டையின் மஞ்சள் கரு கூட மிகவும் சிறந்தது. அதிலும் இந்த மஞ்சள் கருவை ஸ்கால்ப்பிற்கு தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு நன்கு குளித்து வந்தால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும். ஏனெனில் முட்டையில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. மேலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு பட்டு போன்று இருக்கும்.

எண்ணெய் மசாஜ்: நமது முன்னோர்கள் வாரத்திற்கு ஒரு முறை அதுவும் சனிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அவற்றை யார் இன்றும் சரியாக பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் கூறியதை பின்பற்றி வந்திருந்தால், இப்போது எந்த பிரச்சனையும் வந்திருக்காது. ஏனெனில் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய்யை சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து, குளித்து வந்தால், கூந்தலுக்கு சரியான எண்ணெய் பசை கிடைத்து, வறட்சி இல்லாமல், கூந்தல் பொலிவோடு ஆரோக்கியத்துடன் காணப்படும். மேலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், அந்த எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சேர்த்து கலந்து செய்து வந்தால், நல்லது.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானது இல்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் தினமும் இந்த நெல்லிக்காய் ஜூஸ் அல்லது நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது. மேலும் இதனால் வெள்ளை முடி வராமல் இருப்பதோடு, கூந்தல் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக இது இருக்கும்.

வேப்பிலை: பேன் தொல்லை அதிகமாக இருந்தால், அதற்கு வேப்பிலை சிறந்த பொருள். சொல்லப்போனால் இது ஒரு கிருமி நாசினி என்று சொல்லலாம். ஏனெனில் அதில் உள்ள கசப்புத் தன்மையால் எந்த ஒரு கிருமியும் அழிந்துவிடும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, தடவி குளித்து வந்தால், பேன் தொல்லை நீங்குவதோடு, கூந்தலும் நன்கு வளரும்.

கற்றாழை: கற்றாழை சருமத்திற்கு மட்டும் சிறந்தது அல்ல, கூந்தலுக்கும் தான். ஆகவே தோட்டத்தில் வளரும் கற்றாழையை எடுத்து, அதில் உள்ள ஜெல் போன்றதை கூந்தலுக்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்ற மின்னுவதோடு, கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும். முடிந்தால், இதனை தினமும் செய்தால் நல்லது.

மயோனைஸ்: மயோனைஸ் என்னும் உணவுப் பொருளும் ஒரு சிறந்த கூந்தலை மென்மையாக்கப் பயன்படும் ஒரு பொருள். ஆகவே ஒரு பாட்டில் மயோனைஸ் வாங்கி, அதனுடன் ஏதேனும் தேங்காய், பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயை கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி குளிக்க வேண்டும்.

பீர்: தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அனைவருக்குமே பீரைப் பற்றி நன்கு தெரியும். மேலும் இந்த பீரை தலைக்கு குளிக்கும் போது நீரில் சிறிது விட்டு, கூந்தலை அலசினால், கூந்தல் நன்கு மின்னும்.

ஆகவே நிறைய பணம் செலவழித்து, அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தலை பராமரிப்பதை விட, வீட்டிலேயே பராமரித்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். என்ன நண்பர்களே! கூந்தலை பராமரிக்க ரெடி ஆகிட்டீங்களா?