Home அழகு குறிப்பு கூந்தல் அழகு தலைமுடி அதிகமாக வறண்டு போனால் என்ன செய்ய வேண்டும்?…

தலைமுடி அதிகமாக வறண்டு போனால் என்ன செய்ய வேண்டும்?…

32

நமது கூந்தல் நீளமோ அல்லது குட்டையோ, நேரானதோ அல்லது சுருட்டை முடியோ, பெண்கள் அனைவருக்குமே மென்மையான பட்டு போன்ற ஆரோக்கியமான கூந்தலை பெறுவதே கனவாக இருக்கும்.

மாசு, ஈரப்பதம், வெப்பத்தை பயன்படுத்தி முடியை ஸ்டைலாக்குதல், தொடர்ச்சியான ரசாயன பயன்பாடு மற்றும் தவறான உணவு பழக்கம் ஆகியவை, நமது கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை அகற்றி,

நமது கேசத்தினை எளிதில் உடையக்கூடிய, வறண்ட கேசமாக்குகின்றன. இந்த கூந்தல் வறட்சியை போக்க வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும். அந்த வகையில் சில எளிய ஹேர் மாஸ்க்குகளை பார்க்கலாம்

காய்ச்சாத பால் அல்லது தேங்காய் பால் ஒரு கப் எடுத்து இதில் 3 தேக்கரண்டி கடலை மாவினை சேருங்கள். இந்த கலவையை நன்றாக கலந்து பசை போல தயார் செய்யுங்கள். இதனை தலைமுடியில் குறிப்பாக தலை முடியின் நுனி பகுதியில் அதிக கவனத்துடன் தடவுங்கள்.

20 நிமிடங்களுக்கு பிறகு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள்.

தேங்காய் எண்ணெயையும் பாதாம் எண்ணெயையும் சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதில் அரை தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், லாவண்டர் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை சேருங்கள். இதனை மிதமாக சூடுப்பபடித்தி தலையின் மேல்பாகத்தில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூவை கொண்டு அலசுங்கள். இந்த சூடான எண்ணெய் மசாஜ் தலை முடிக்கு ஈரப்பதத்தைத் தரும். மேலும் தலையின் மேல் பாகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி தயிரையும் தேனையும் சேருங்கள். இதனை நன்றாக கலந்து முடியின் முழு நீளத்திற்கும் தடவி 30 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்புவைப் பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கூந்தலை அலசுங்கள்.

முட்டையின் வெள்ளை கருவில் நிறைந்துள்ள பாக்டீரியா உண்ணுன் என்சைம்கள் தேவையற்ற கூந்தலில் உள்ள எண்ணெய் பசையை அகற்றுகின்றன. இது நமது வறண்ட, எளிதில் உடையும் தன்மை கொண்ட, கூந்தலுக்கு ஈரப்பதம் வழங்குகிறது.

நன்கு பழுத்த அவகேடோ பழத்தினை நன்கு மசித்து கொள்ளுங்கள். இதில் அரை கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்களுக்கு வைத்திருங்கள். ஷாம்புவை பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் அலசுங்கள். அவகேடோ பழத்தில் அடங்கியுள்ள கனிமசத்துக்கள், புரதம், வைட்டமின் ஏ, டி, ஈ, கே மற்றும் பி சேதமடைந்த கூந்தலை சரி செய்கிறது.

இந்த பயனுள்ள கூந்தல் பராமரிப்பு குறிப்புகளை பயன்படுத்தி மென்மையான, மிருதுவான, ஆரோக்கியமான தலை முடியை பெறுங்கள்.