Home ஆரோக்கியம் உளவியல் உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…

40

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படும்.

மேலும் அலுவலகத்தில் அதிக வேலையின் காரணமாக மனஅழுத்தம், டென்சன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். சொல்லப்போனால், இந்த சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மேலும் இந்த சூரிய நமஸ்காரம் செய்யும் போது மனதிற்குள் “ஓம்” என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். இப்போது அந்த சூரிய நமஸ்காரத்தில் உள்ள பன்னிரெண்டு நிலையான ஆசனங்களை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!

இந்த சூரிய நமஸ்காரத்தில் நாம் செய்யும் ஆசனங்கள் அனைத்தும் சுவாசம் சம்பந்தப்படது. மேலும் இந்த பன்னிரெண்டு நிலையை செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தவே, மனதிற்குள் “ஓம்” என்னும் மந்திரத்தை சொல்கிறோம். மேலும் இந்த பன்னிரெண்டு நிலையில், செய்ததையே செய்தது போன்று இருக்கும். ஆனால் அதுவே இந்த சூரிய நமஸ்காரத்தின் சரியான முறை. இதனால் உடல் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு வளைந்து, ஒரு விதமான புத்துணர்ச்சியை அடையும். ஆகவே நண்பர்களே! நீங்களும் இந்த ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.