Home குழந்தை நலம் நீங்களே உங்கள் குழந்தைக்கு வீட்டு மருத்துவர் ஆகலாம்

நீங்களே உங்கள் குழந்தைக்கு வீட்டு மருத்துவர் ஆகலாம்

34

சளி மற்றும் இருமலை பொறுத்தவரை பரவலாக பேசப்படும் ஒரு வழக்கு ” சளி பிடிச்ச டாக்டர்கிட்ட போன ஒரு வாரத்துல சரியாகிடும், இல்லைனா 7 நாள் ஆகும்” அப்படி என்ன பண்ணாலும் ஒரு வாரத்துக்கு சளியை நம்மால் விரட்ட முடியாது. அதுபோல ” சனி பிடிச்ச கூட சமாளிச்சிடலாம், ஆனா சளி பிடிச்ச சமாளிக்க முடியல” அப்படினு கூட பலர் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி பெரியவங்களையே பாடாய் படுத்தற சளி, பிறந்த குழந்தைகளையும் விடுவதில்லை. சளி, மூக்கடைப்பு, இருமல் மட்டும் கபம் இப்படி குழந்தைகளையும் கஷ்டப்பட வைக்குது. முடிந்த வரை குழந்தைகளுக்கு சளி பிடிக்காம பார்த்துக்கோங்க. அப்படி சளி பிடிச்ச கீழ கொடுத்திருக்க மருத்துவ குறிப்புகளை முயற்சி செய்து பாருங்க.

1 குழந்தையின் உடல் ஈர தன்மையோடு இருக்கனும்
( ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு) குழந்தைகள் எப்போதும் சிறுநீர் கழிக்கறதால அவங்க உடல்ல நீர் சத்து குறைந்து போய்விடும். அவங்களோட துணியையும், நாப்கின்களையும் சரியா மாத்திட்டே இருக்கனும். அதே சமயம் சரியான இடைவெளில வெதுவெதுப்பான நீர், சூப் போற்றவற்றை கொடுக்கலாம்.

2 பூண்டு மற்றும் கேரட் விதைகள்
பூண்டு மற்றும் கேரட் விதைகளை தண்ணியோ, எண்ணெயோ இல்லாத ஒரு பத்திரத்தில நன்றாக வதக்கி, அவற்றை துளசி துணியால் கட்டி, குழந்தையின் மார்பில் நன்றாக தேய்த்து விடவும். ஆறு மாதத்திற்கு குறைவா இருக்கிற குழந்தைகளுக்கு, இவற்றை அவர்களின் கட்டிலில், சுவாசிக்கும் படி கட்டிவிடவும்.

3 குழந்தைக்கு மென்மையாக மசாஜ்
மிதமான சூட்டுடன் இருக்கும் (குழந்தைக்கான எண்ணெய் அல்லது கடுகு ) எண்ணையைக் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். உடனடி நிவாரணத்துக்கு பூண்டு சேர்த்து கொள்ளலாம்.

4 குழந்தையின் தலையை உயர்த்தி வைத்தால்
குழந்தையின் தலையை தலையணை கொண்டு கொஞ்சம் உயரமாக வைக்கலாம். அவர்கள் படுக்கையை சற்று உயரமாக இருக்கும் படி வைக்கலாம். ( ஆறு மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு முயற்சிக்க வேண்டாம் ) .

5 மஞ்சள்
மஞ்சள் கலவையை குழந்தையின் தலையில் பூசி விடலாம். இருமலுக்கு ஒரு துளி மஞ்சளை மிதமான சூட்டில் இருக்கும் பாலில் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம்.

6 தேன்
( ஒரு வயதிற்கு அதிகமான குழந்தைகளுக்கு) தேன் இருமலுக்கான மிக சிறந்த இயற்கை மருத்துவ பொருள். மிதமான சூட்டில் இருக்கும் நீருடன் தேன் கலந்து குழந்தைக்கு ஒரே நாளில் பல முறை குடிக்க கொடுக்கலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன், கால் தேக்கரண்டி இலவங்கப்பட்டை சேர்த்து ஒரு நாளில் இரு முறை கொடுக்கலாம். கற்பூர வள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்தும் கொடுக்கலாம்.

7 கற்பூரம்
மிதமான சூட்டில் இருக்கும் தேங்காய் எண்ணையுடன் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து, சில துளிகளை குழந்தையின் நெஞ்சில் விட்டு மென்மையாக தேய்த்து விடவும். கற்பூரம் குறைவாக பயன்படுத்தவும். ஏனெனில் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

8 வெண்டைக்காய்
ஆறு மாதத்திற்கு அதிகமான குழந்தைகளுக்கு, சில வெண்டைக்காய்களை நீர் விட்டு வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு அவற்றை நாள் முழுவதும் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கவும்.

9 தேங்காய் எண்ணெய் மற்றும் வெற்றிலை
அடுப்பில் மிதமான வெப்பத்தில், ஒரு கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதோடு சிறிது மஞ்சள் தூள், பூண்டு சருகு, கொஞ்சம் தைலம், வெற்றிலை (வெற்றிலையை காம்புடன் கிள்ளி) காயவைத்து அந்த எண்ணையை இளஞ் சூட்டோடு குழந்தைக்கு தேய்க்க வேண்டும். நெஞ்சின் மேல், காதின் பின்புறம், அக்குள்களுக்கிடையே, மூக்கில் கொஞ்சமாக தேய்க்க வேண்டும். முதுகிலும் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் குழந்தைக்கு மூச்சு விட சிரமமாக இருக்காது. நன்றாக தூங்க முடியும். சளியும் கரைந்து வரும்.

10 இஞ்சி சாறு
இஞ்சி உணவில் சேர்க்கப்பட்டு முக்கிய பொருள். 1/2 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் (இஞ்சி தோல் நீக்கி மத்தால் தட்டி கையால் பிழிந்தால் சாறு வரும் ) 1/2 தேக்கரண்டி தேன் கலந்து 4 முறை சாப்பிடவும்.

இரசாயன கலப்பில் உருவான மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து பிஞ்சை நஞ்சாக்குவதை விட, இயற்கை முறையில் நம் வீட்டு உபயோக பொருள்களைக் கொண்டு எளிமையாக குணப்படுத்த முயற்சிக்கலாமே!