Home பெண்கள் அழகு குறிப்பு அம்மாக்களே நீங்களும் அழகு தேவதையாக யொழிக்க வேண்டுமா ?

அம்மாக்களே நீங்களும் அழகு தேவதையாக யொழிக்க வேண்டுமா ?

23

வயதாவது என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கவலையாகும். சுருக்கங்களும், கருவளையங்களும் உருவாக தொடங்கும்போது அவர்களின் மோசமான கனவு பலிக்க தொடங்கும். பெரும்பாலான பெண்கள் போடெக்ஸ் அல்லது செயற்கை முறையில் முகத்தை சரி செய்வதை தவிர்க்க முயற்சிப்பார்கள் ஏனெனில் அது மிகவும் கடினமான வேலையாகும். வயதான தோற்றம் எப்போதும் வயதால் மட்டுமே ஏற்படுவதில்லை அவர்களின் பரபரப்பான ஓய்வில்லாத வேலைகளாலும் ஏற்படும். ஒருவரின் ஆரோக்கியத்தை பொறுத்து வயதான அறிகுறிகள் சிறிய வயதிலேயே கூட தோன்றலாம். கீழே உள்ள சில எளிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் அன்றாட தினசரிகளில் பயன்படக்கூடும்.

1. போதுமான அளவு நீர் குடித்தல்
தண்ணீர் என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. உங்கள் தோலில் ஒரு ஆரோக்கியமான பளபளப்பை வெளியே கொண்டு வரும் வகையில் இது உங்கள் உடலை புத்துணர்ச்சியாக்க உதவுகிறது. நீர், வயதாவதை குறைக்க கூடியது, இது உங்கள் சருமத்தை தெளிவாக்கி பளபளக்க செய்வதோடு உங்களின் நிஜ வயதை காட்டிலும் இளமையாக காட்சியளிக்க வைக்கிறது.

2. ஈரப்பதம்
தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி ஈரமாக்குங்கள், நாள் முழுவதும் உங்கள் சருமத்தில் படிந்த அழுக்குகளை இது சுத்தம் செய்யும். விரைவில் வயதான தோற்றம் வருவதற்கு உலர் சருமம் முக்கியமான காரணமாகும். இதனை செய்வதை தினசரி பழக்கமாக்குங்கள். மேலும் வெளியில் செல்லும்போது 30+SPF உள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். சூரிய ஒளி உங்கள் சருமத்தை சிதைத்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சன்ஸ்க்ரீன்கள் பயன்படுத்துவது சூரியனின் யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கும் மேலும் வயதாகும் வேகத்தை குறைக்கும்.

3. மீன்கள்
ஆரோக்கியமான உணவுகள் வயதாகும் வேகத்தை குறைக்கக்கூடும். உங்கள் உணவில் அதிகமாக இயற்கை மீன் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். தினசரி உணவில் அதிகளவில் பச்சை காய்கறிகள் சேர்ப்பது இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும், இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். திராட்சையில் உள்ள சார்பிட்டால் உங்கள் முகத்தை இளமையாக பொலிவுற செய்யும் என்று அறிவீர்களா?. வாரத்திற்கு இருமுறை இதை முகத்தில் தடவி உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் பெறுங்கள்.

4. சர்க்கரையை தவிர்த்திடுங்கள்
சர்க்கரை பல நோய்களுக்கு மூலகாரணியாக இருக்கலாம். சர்க்கரையை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக இனிப்பு சுவையுள்ள இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். வயதாவதில் சர்க்கரையின் பங்கு முக்கியமானது, அதனை தவிர்ப்பது உங்கள் முகம் பொலிவுபெறும் அறிகுறிகளை காட்டும்.

5. தூக்கம்
போதுமான தூக்கம் உங்கள் மனதை புத்துணர்ச்சியாக்குவதோடு உங்கள் சருமத்தை பளபளக்க செய்யும். பட்டு அல்லது சாடின் தலையணை உறைகள் உங்கள் சருமத்திற்கு மிருதுவாக இருக்காது. உங்கள் சருமத்தின் மீது அவை மென்மையாக இருக்காது, ஆனால் கடினமான தலையணை உறைகளால் முடி உதிர்வு ஏற்படுவதை குறைக்கும்.

6. அழகு சாதன பொருட்களை குறைத்தல்
அதிக அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை குறையுங்கள். இந்த பொருட்களில் அதிகளவு வேதிப்பொருட்கள் இருப்பதால் அவை உங்கள் சருமத்தை வெகுவாக பாதிக்கும். உங்கள் சருமத்திற்கு ஏற்றாற்போல மிதமான அழகு சாதனங்களை பயன்படுத்துங்கள். அழகு சாதனங்கள் உங்கள் சரும துளைகளை அடைத்துவிடுவதால் சருமத்தால் மூச்சுவிட இயலாது, இது வயதாகும் செயல்முறையை வேகப்படுத்தும்.

7. புருவங்களை சீராக்குதல்
புருவத்தை சரியான வடிவில் சீராக்குவது கூட உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் முகவடிவத்திற்கு ஏற்றாற்போல் புருவங்களை மாற்றுவது உங்களை இளமையாக காட்சியளிக்க வைக்கும். உங்களின் தோல் மருத்துவரையோ அல்லது பார்லர் உதவியாளரையோ அணுகி உங்கள் முகத்திற்கு ஏற்றாற்போல் புருவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

8. சிரிப்பது
அகலமாக சிரிப்பது உங்களை இளமையாக காட்சியளிக்க வைக்கும். எப்போதும் இளமையாக இருக்க இதைவிட சிறந்த சிகிச்சை எதுவுமில்லை. சிரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிரிக்க தவறாதீர்கள்.

9. உடற்பயிற்சி
தினமும் கொஞ்சமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலை கச்சிதமாக வைத்திருக்க உதவும். நடைபயிற்சியின் போது இயற்கை காற்றை நன்கு சுவாசித்து புத்துணர்ச்சி அடையுங்கள், இது உங்களை இளமையாக வைத்திருக்கும்.