Home ஜல்சா திருப்பூரில் பின்னலில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை

திருப்பூரில் பின்னலில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை

27

Captureபின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும், இளம்பெண்களும். சொந்த ஊரில் இருந்து திருப்பூர் வந்து பணியாற்றுவதால் சுதந்திரமான மனநிலை இந்த தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

சொந்த ஊர் என்றால், தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்ற தயக்கத்துடன் எந்த செயலையும் யோசித்து செய்வார்கள். ஆனால் இன்னொரு ஊரில் வந்து வேலைபார்ப்பதால் சிலருக்கு தயக்கங்கள் விலகி, அசட்டு தைரியம் வந்துவிடுகிறது. சூழ்நிலைகளும் அவர்களுக்கு ஆதரவாக அமைந்துவிடுவதால், முறையற்ற பாலியல் வாழ்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

அங்கு ஆண், பெண் தொழிலாளர்கள் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள். இரவும்- பகலும் அருகருகே இருப்பதால், தன்னுடன் வேலை பார்ப்பவருடன் எளிதில் காதல் வசப்பட்டு, இணைந்துவிடுகிறார்கள். பெற்றோருக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தும் இளம்காதல் ஜோடிகள் திருப்பூரில் அதிகம் என்கிறது, அங்கு எடுக்கப்பட்டுள்ள ஆய்வுகள்.

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்ற வார்த்தைக்கு ஏற்ப காதல் திருமணம் செய்த இளம்ஜோடிகளோ சில மாதங்களில் தங்கள் இல்வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு, பிரிந்து சென்றுவிடுவதும் உண்டு. வெளிநாட்டு கலாசாரம் போல் தாலிகட்டாமல் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துபவர்களும் உண்டு. முறையற்ற வாழ்க்கை மூலம் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சொந்த ஊருக்கு ஓடிவிடும் பெண்களும் உண்டு.

திருட்டு உறவால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட பெண்களின் பட்டியலும் திருப்பூரில் வெகுநீளம் என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு ஆண்கள் திருப்பூரில் பணியாற்றி வருகிறார்கள். அங்கு தன்னோடு பணியாற்றும் பெண்களை வலைவீசி பிடித்து, திருட்டு உறவை தொடங்குகிறார்கள்.

தங்களை கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டு வாடகைக்கு குடியேறுகிறார்கள். கொஞ்ச நாட்கள் வாழ்க்கை ஜாலியாகத்தான் போகிறது. அடுத்து அடிதடி ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்குமே சொந்த ஊரில் திருமணமாகி, இணையும், குழந்தைகளும் இருப்பது தெரியவருகிறது. முடிவில் விரக்தியடைந்து தற்கொலைக்கு வழிதேடுகிறார்கள்.

மாதத்துக்கு 5 கள்ளத்தொடர்பு சம்பந்தப்பட்ட புகார்கள் வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் துறை தெரிவிக்கிறது. இது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட அதிகம்.