Home ஜல்சா அந்த காட்சிகள் எடுக்கும்போது நடிகைகளுக்கு என்னவாகும்

அந்த காட்சிகள் எடுக்கும்போது நடிகைகளுக்கு என்னவாகும்

497

ஜல்சா செய்திகள்:இந்திய படங்களில் படங்களில் ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள், முதலிரவு காட்சிகள் படமாக்கும் போது, டக்கென்று இரு மலர்களை உரசவிட்டும், கதவை சாத்தியும் சீனை முடித்துவிடுவார்கள். அல்லது வண்டு பூவில் தேன் உறிஞ்சுவதை காண்பித்து ரசனையுடன் கட் செய்துவிடுவார்கள்.

ஆங்கில படங்களில் அப்படி இல்லை. முத்தத்தில் இருந்து மொத்தம் என்ன நடந்தாலும் ஒளிவுமறைவு இன்று அனைத்தையும் காட்சி படுத்திவிடுவார்கள். ஆனால், எல்லா நடிகர், நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிக்க ஒப்புதல் வழங்க மாட்டார்கள்.

உதாரணமாக நாம் பார்க்கும் பல காட்சிகள் அந்த நடிகை, நடிகரின் உடல் மாதிரியை 3டியில் வடிவமைத்து அனிமேட், வி.எப்.எக்ஸ் மூலமும் கலவுதல் காட்சி அங்கே எடுக்கப்படுகின்றன. சிலர் கிரீன் மேட் எல்லாம் வைத்து வெகு சில டெக்னீஷியன் முன்னிலையில் அந்த காட்சியை இரகசியமாக எடுத்துவிடுவார்கள். சில நேரம், படத்திற்கு தேவை என்பதால் லைவாக நடித்துக் கொடுக்கும் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். சில படங்களில் நடிகர்கள் நிஜமாகவே கலவி நடித்ததும் உண்டென ஹாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. உண்மையில் இப்படியான கலவுதல் காட்சிகளை படமாக்கும் போது அங்கே நடந்த அதிர்ச்சியான சில உண்மைகளை, தாங்கள் எதிர்கொண்டு அனுபவங்களை சில நடிகர், நடிகைள் கூறி இருக்கிறார்கள். அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்….

எமிலியா கிளார்க்! கேம் ஆப் த்ரோன்ஸ் ஆங்கில தொடரை கண்டு வருவோருக்கு எமிலியா கிளார்க் மிக பரிச்சயமான நடிகை. கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் ஏகப்பட்ட கலவி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதில் எமிலியா கிளார்க் மற்றும் இவரது பார்ட்னர் ஜேசன் மொமாவ் இடையே கலவி காட்சி ஒன்று எடுக்க படக்குழு ஆயுத்தமானது. எப்போதும் இதுபோன்ற கலவி காட்சிகளை எடுக்கும் போது ஆண் நடிகர்கள் தங்கள் அந்தரங்க உறுப்பு பகுதியில் அதை மறைக்கும் அல்லது மூடி கொள்ளும்படியான சாக்ஸ் போன்ற ஒன்றை அணிந்துக் கொள்வார்கள். நடிகைகளும் தங்கள் பிறப்புறுப்பு பகுதியில் வெஜ் பேடை பொருத்திக்கொள்வார்கள். ஆனால், அந்த காட்சியின் போது ஜேசன் எப்போதும் பொருத்தும் அந்த சாக்ஸ்க்கு பதிலாக பிங்க் நிறத்திலான பஞ்சு போன்ற எதையோ வைத்து மறைத்திருக்கிறார். அப்போது எமிலியா கிளார்க் எதை பார்த்தார் என்று தெரியவில்லை, படக்குழுவினரிடம், இது ரொம்ப பெரிதாகவும், பிங்கியாகவும் இருக்கிறது என செய்வதறியாது புலம்பி இருக்கிறார்.

ஹென்றி கவில்! பீரியட் டிராமாவான டூடர்ஸ்ல் ஹென்றி நடித்திருக்கிறார். இதில் வெளிப்படையான ஒரு கலவுதல் காட்சி இடம்பெறவிருந்தது. அதை இரவு ஷூட் செய்ய படப்பிடிப்பு குழு திட்டமிட்டிருந்தனர். ஹென்றி மேன் ஆப் ஸ்டீல் படத்தில் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டூடர்ஸ்ல் அந்த காட்சி படமாக்கப்பட இருந்த இடம் கொஞ்சம் கரடுமுரடாக இருந்துள்ளது. கலவி காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஹென்றி மீது அந்த நடிகை மேலே அமர்ந்து கலவியில் ஈடுபடுவது போல காட்சியை படம்பிடித்து வந்துள்ளனர். அப்போது, நடிகை ஹென்றியுடன் மிக நெருக்கமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே விறைப்பு கொண்டுவிட்டாராம் ஹென்றி. இதற்காக அந்த நடிகையிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அது நடிக்கும் இடம். நான் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அந்த சூழலில் நடிகை நிர்வாண நிலையில் சில செய்கைகள் செய்த போது, என் கட்டுப்பாட்டை மீறி அது நடந்துவிட்டது. என்ன இருந்தாலும் நான் செய்தது தவறு தான். அதை மறுக்க முடியாது என்று ஹென்றி ஒருமுறை பேட்டியில் கூறி இருந்தார்.

கிறிஸ்டோபர் மின்த்ஸ்! சூப்பர் பேட் (Super Bad) என்ற படத்தில் கிறிஸ்டோபர் நடித்த போது அவர் வயது 17. அப்போது டீன் செக்ஸ் காமெடி காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டி இருந்ததது. பதின் வயது என்பதால் உடன் பெற்றோர் இருக்க வேண்டிய அவசியமும் இருந்தது. எனவே, சூப்பர் பேட் படத்தில் தான் அந்த காட்சியை பெற்றோர் முன்னிலையில் நடித்து முடித்தேன் என்று கிறிஸ்டோபர் கூறி இருக்கிறார். அது போலியான காட்சி என்ற போதிலும், அந்த நிகழ்வுக்கு பிறகு ஒருமுறை கூட நாங்கள் விவாதிக்கவில்லை. இன்று வரையில் ஒரு வார்த்தை கூட அன்றைய நிகழ்வு குறித்து நாங்கள் பேசியதே இல்லை என்று கிறிஸ்டோபர் கூறி இருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்! ஜெனிபர் லாரன்ஸ் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை. நிறைய ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், அவர் முதன் முதலில் நிஜமாக ஒரு கலவி காட்சியில் நடித்து சயின்ஸ் ஃபிக்ஷன் படமான பேசஞ்சர் திரைப்படத்தில் தான். இதில் ஜெனிபர் லாரன்ஸ் க்றிஸ் பிராட் உடன் நடித்திருந்தார். அந்த காட்சி படமாக்கப்பட்டவுடன் நான் நிறையவே குடித்தேன். வீடு திரும்பியதில் இருந்து என்னுள் நிறைய பதட்டமும் கூட. நானா இப்படி செய்தேன், ஏன், எனக்கு தெரியவில்லை. மேலும், க்றிஸ் திருமணமான நபர். என் வாழ்வில் திருமணமான வேறொரு ஆணை முதல் முறையாக அந்த படப்பிடிப்பின் போது தன் முத்தமிட்டிருந்தேன். இதெல்லாம் என்னுள் ஒரு மோசமான உணர்வை ஏற்படுத்தியது என்று ஜெனிபர் லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

அன்னே ஹாத்வே அன்னே ஹாத்வே லவ் அன்ட் அதர் ட்ரக்ஸ் என்ற திரைப்படத்தில் ஜேக் கிலென்ஹால் எனும் நடிகருடன் அந்த காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. இந்த படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகள் வைத்திருந்தனர். ஒருமுறை ரிஹர்சல் நடக்கிறது என்று தெரியாமல் அன்னே ஹாத்வே ஜேக் கிலென்ஹால்ன் நண்பர் முன்னியிலை நிர்வாணமாக தோன்றிவிட்டார். அந்த காட்சியின் போது அன்னே ஹாத்வே தனது ட்ரென்ச் கோட்டை கழற்றி ஜேக் முன்னர் நிர்வாணமாக தோன்ற வேண்டும். நிஜமாகவே காட்சியை தான் படம்பிடிக்கிறார்கள் என்று தவறாக நினைத்து வந்த அன்னே ஹாத்வே, ரிஹர்சல் நடந்துக் கொண்டிருக்கும் போது ஜேக் கிலென்ஹால்ன் நண்பர், வெளிநபர்கள் பலர் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிவிட்டார்.

ராபர்ட் பாட்டின்சன்! மேப்ஸ் டு தி ஸ்டார்ஸ் என்ற படத்தில் ஜூலியானா மோரே உடன் அனல்பறக்கும் காட்சியில் ராபர்ட் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்த காட்சியின் போது எதிர்பாராத விதமாக ராபர்ட் பாட்டின்சன்க்கு நிறைய வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. அப்போது ஜூலியானா பின்னே இருந்து கலவுதல் போல எடுக்கப்பட்ட காட்சியின் போது, ராபர்டின் வியர்வை அவர் உடல் முழுக்க சொட்ட, ஒருக்கட்டத்தில், உங்களுக்கு ஏதாவது பேணிக் அட்டாக் ஏற்பட்டுவிட்டதா? ஏன் இப்படி வியர்த்து கொட்டுகிறது என்று ஜூலியானாவே கேட்டுவிட்டாராம். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளானதாக ராபர்ட் குறிப்பிட்டிருந்தார்.

ரியான் ரெனால்ட்ஸ் தி சேஞ் அப் என்ற படத்தில் டெட் பூல் ஹீரோ ரியான் நடித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் மிக ரொமான்சான காட்சி எடுக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியின் போது, நடிகை ரியான் ரெனால்ட்ஸ் மீது அமர்ந்து இருப்பது போலவும். ரியான் அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றுவது போலவும் காட்சி படமாக்கப்பட்ட வந்தது. ஒரு ஷாட்டில், ரியான் நடிகையின் மேலாடைகள் அனைத்தையும் கழற்றிய பிறகு, ரொமான்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதை படமாக்க துவங்கியது படக்குழு. அப்போது நடிகை தனது மார்பில் ரியானின் கைகளை எடுத்து வைக்க.. நடுக்கத்தில் கைகளை உடனே ஷாக் அடித்தது போல எடுத்துவிட்டாராம் ரியான். அந்த காட்சியின் போது தான் பேச வேண்டிய எல்லா வசனங்களும் மறந்து போய்விட்டாராம் ரியான். அந்த படத்தின் போது மட்டுமல்ல, எந்த படத்தில் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க நேர்ந்தாலும், பதட்டத்தில் வசனங்களை மறந்துவிடுவேன் என்று கூறி இருக்கிறார் டெட் பூல் ஹீரோ ரியான்.

அலிசன் ஜேனி! லைப் டியூரிங் வார் டைம் என்ற படத்தில் அலிசன் மைக்கேல் லார்னர் என்பவருடன் ஒரு கலவுதல் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ஓர் அறையில் அந்த காட்சி எடுத்துக் கொண்டிருந்தனர். காட்சி எடுக்கும் போது நடிகர், நடிகை மீது வியர்வை சுரப்பது போல காட்சிப்படுத்த ஸ்ப்ரே செய்துக் கொண்டே இருப்பார்களாம்.

அன்று அந்த காட்சி ஷூட் செய்த தளம் மார்பில்ஸ் தரை என்பதாலும், ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக மைக்கேல் அலிசனை தூக்கி கொண்டு ரொமான்ஸ் செய்ய நடிக்க தயாரான போது, தரையில் படர்ந்திருந்த அந்த ஸ்ப்ரே காரணத்தால் ஹீரோ வழுக்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டது என்று அலிசன் கூறி இருக்கிறார். என் வாழ்நாளில் அந்த காட்சியை படமாக்கிய நாளை மறக்கவே மாட்டேன். அது மிகவும் மோசமான விபத்து என்று தெரிவித்திருக்கிறார் அலிசன்.

Previous articleஆண்கள் வீட்டிலையே விந்தை பரிசோதிப்பது எப்படி தெரியுமா?
Next articleகட்டிலில் வயதான பெண்களின் உடலுறவு ரகசியங்கள் பற்றி தெரியுமா?