Home ஆரோக்கியம் பிற நோய் தாக்கத்தினால் பாலியல் செயல்பாடு குறைய காரணம்

பிற நோய் தாக்கத்தினால் பாலியல் செயல்பாடு குறைய காரணம்

55

பொது மருத்துவம்:ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருக்குப் பாலுறவு வேட்கை குறையத்தான் செய்யும். ஒரு நபர் மன இறுக்கத்தில் இருந்தாலோ, நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அவரது பாலுறவுத் திறன் குன்றியிருக்கும்.

பாலுறவின் மூலம் திருப்தியடைந்த உடனே மறுமுறை செக்ஸ் வைத்துக்கொள்ளவும், கர்ப்ப காலத்தின்போதும் பெண்கள் தங்களுடைடைய பாலுறவு வேட்கையை இழக்கிறார்கள். சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் பாலுறவு வேட்கை அதிகரிப்பதுபோல, சிலருக்கு முற்றிலும் அந்த வேட்கை மறைந்துவிடும்.

சில மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள்கூட பாலுறவு வேட்கையைக் குறைத்துவிடும். அதிக கவலை, அதிக மன இறுக்கம் போன்ற சூழல்களில் ஆசை மறைந்துவிடுகிறது.

வயது மற்றும் நாட்பட்ட நோய்கள் மற்றம் உடல் ரீதியான இயலாமை ஆகியவற்றாலும் பாலுறவு வேட்கைக் குறைந்து விடுகிறது.

பாலுறவில் நாட்டம்-ஆசை குறைந்தவர்கள், இன்னைக்கு வேண்டாம்பா ஒரே தலைவலியா இருக்கு.. என்பது போல கூறி தவிப்பார்கள்.

பாலுறவு வேட்கை குறைந்த ஆண்களில் சுமார் 45 விழுக்காட்டினர் தங்களுக்கு ஒற்றைத் தலைவலி இருப்பதாகக் கூறி பாலுறவு கொள்வதைத் தவிர்க்கின்றனர். இவ்வாறே பெண்களுக்கும் பாலுறவு வேட்கைக் குறைகிறது.

சர்க்கரை நேயாளிகளைப் பொறுத்தவரையில், நாட்பட்ட நிலையில் அதிக களைப்பு, மயக்கம், படபடப்பு போன்றவை தொடர்ந்துகொண்டிருப்பதால் அவர்களால் பாலுறவில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. பாலுறவின்போது தானாக சிறுநீர்க் கசிதல் இன்னொரு காரணம்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், இரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாததாலும் அவர்களின் மூளை சரியாக இல்லாததாலும் அவர்களின் மூளை சரியாக இரசாயனக் கடத்திகளுக்குக் கட்டளையிடாது. தவிர, பாலுறுப்புகளும் விரைந்து செயல்படாது