Home ஆரோக்கியம் உலர் திராட்சை சாப்பிடால் உண்டாகும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

உலர் திராட்சை சாப்பிடால் உண்டாகும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

242

Important Tips:நாம் பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

மேலும் உலர்திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

எலும்பு பிரச்சனைகள்
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க , உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் வெப்பம்
தணியும் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

இரத்த சோகை
இரத்த சோகை உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 20-25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

விறைப்புத்தன்மை குறைபாடு
ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

சிறுநீரக பாதையில் தொற்று
சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க சிறந்த மருந்து உலர் திராட்சை. இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது நல்லது.

மாதவிடாய் பிரச்சனைகள்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

Previous articleகுண்டான மனைவியுடன் கட்டில் சுகம் காண சாஸ்திரம் சொல்லும் படிகள்
Next articleதெரியாத ஆணுடன் திடிரென பெண்கள் உறவு கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?