Home சூடான செய்திகள் முதல்முறை உறவிலேயே சிறப்பாக செயல்பட ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

முதல்முறை உறவிலேயே சிறப்பாக செயல்பட ஆண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

35

captureமுதல் முறை பெண்களை இம்ப்ரஸ் பண்ணுவதற்குக் கொஞ்சம் ஹோம்வொர்க் பண்ணித் தான் ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக, முதல்முறையிலேயே உறவில் திருப்திப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். சில சின்ன சின்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டாலே பெண்களை எளிதில் உங்கள் வசமாக்கிவிடலாம்.

முதல்முறை டேட்டிங் செல்வதற்கு முன்பாக, நன்கு யோசித்து பிளான் செய்து கொள்ளுங்கள்.திட்டமிடாமல் சென்று, வரும்போது பார்த்துக் கொள்ளாலாம் என்று இருந்தால் நிச்சயம் சொதப்பிவிடுவீர்கள்.

முதல் முறை கிடைக்கிற வாய்ப்பை நழுவவிட்டால் போனது போனது தான். அடுத்தடுத்து நீங்கள் எவ்வளவு தான் பிளான் பண்ணினாலும் முதல்முறை அனுபவத்தைப் பெண்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். பெண்களுக்கு எல்லா விஷயங்களிலும் பர்ஃபெக்க்ஷன் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். உடலுறவின் போதும் அவர்கள் அப்படித்தான்.

முதல்முறை டேட்டிங் செல்லும் போது ஆடை தேர்வில் அதிக கவனம் தேவை. உங்கள் உடல்வாகுக்கேற்ற பர்ஃபெக்ட்டான ஆடையை அணிந்து செல்ல வேண்டும். முடிந்தவரை, நீங்கள் என்ன மாதிரி டிரஸ் அணிந்தால் உங்கள் துணைக்குப் பிடிக்குமென்பதைத் தெரிந்து கொண்டு அதிலும் அவர்களைத் திருப்திப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

வேறு யாரையவது பிரதிபலிப்பது போல் ஆடை அணிய வேண்டும் என்று ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். அது உங்களுடைய ஒரிஜினாலிட்டியைப் பாதிக்கும்.

திட்டமிட்டபடி சரியான நேரத்துக்குச் சென்றுவிடுங்கள். முன்கூட்டியே சென்று காத்திருந்தால் இன்னும் நல்லது. அது பெண்களுக்கு உங்கள் மேல் இன்னும் கூடுதலாக நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

அவர்களே எதிர்பார்க்காத, ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவதொன்றைப் பரிசாகக் கொடுங்கள். சந்தோஷத்தில் அப்படியே உங்களை அள்ளி அணைத்துக் கொள்வார்கள். உங்கள் மேல் எதாவது தவறு இருந்தால் கூட அதை மன்னித்துவிடுவார்கள்.

முதலில் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைவிட, அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எது பிடிக்காது எனத் தெரிந்து கொண்டு, அதன்பின் உங்கள் விருப்பங்களைச் சொல்லுங்கள். அது உங்கள் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தும்.

அதன்பின் அவரே உங்களுடைய வழிக்கு வந்துவிடுவார். டேட்டிங் முடிந்து செல்லும்போது, அவர்களுக்கு மறக்காமல் குட்நைட் சொல்லுங்கள். அது அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் அன்பை அதிகரிக்கச் செய்யும். உங்கள் மேல், நன்றியுடன் சொக்கி விழுவார்கள்.